சைனீஸ் உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு வகையான உப்பு அஜினமோட்டோ என்பது போல நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம். இன்று நம்மவர்களில் பலரின் வீடுகளிலும் கூட இது பயன் பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் இது உப்பு அல்ல. ஒரு வகை கடற்பாசி. தொடக்க காலத்திலிருந்து சீனர்கள் கடற்பாசிகளை உணவில் சேர்த்து வந்தார்கள் (நம்ம கறிவேப்பிலை பயன்படுத்துவது போல). அதன் சுவை வித்தியாசமன முறையில் இருந்துவந்தது.

Laminaria Japonica-என்று பெயரிடப்பட்ட இந்த கடற்பாசியை ஆராய்ச்சி செய்த ஜப்பனிய பேராசிரியர் KIKUNAE LKEDA என்பவர், கடற்பாசியிலிருந்து தனிசுவை கிடைக்க குளுட்டாமேட் என்ற வேதிப்பொருள்தான் காரணம் என்பதையும் கண்டறிகிறார். இது நடந்தது 1908-ல்!

தொடர்ந்து ஆய்வுகள் செய்து, குளுட்டாமேட்-ஐ கடற்பாசியிலிருந்து தனியாக பிரித்தெடுக்கும் சூத்திரத்தை கண்டறிகிறார். உடனடியாக ஒரு பெரும் பணக்காரரை அமுக்கி(கூட்டாளியாக்கி) அஜினமோட்டோ -கம்பெனியை தொடங்கிவிட்டார். இது நடந்தது 1909-ல்! இது தான் அஜினமோட்டோவின் ’சுருக்’ வரலாறு.

அஜினமோட்டோவின் உண்மையான வேதிப்பெயர் ‘மோனே சோடியம் குளுட்டாமேட்’. சுருக்கமாக எம்.எஸ்.ஜி என்பார்கள். இனிப்பு,புளிப்பு,கசப்பு,உவர்ப்பு என எந்த உணவுகளின் தன்மையும் எம்.எஸ்.ஜி-யால் மாறுவதில்லை. இது மூலம் எந்த புதுசுவையும் ஏற்படுவதில்லை என்பதை பல மேலை நாடுகளில் நிரூபிக்கபட்டுள்ளது. ஆனால் அவர்கள் “உமாமி” என்ற புது சுவையை எம்.எஸ்.ஜி தருவதாக சொல்லிவருகின்றனர்.

உண்மையில் நாக்கின் சுவை நரம்புகளை பாதித்து, ஏதோ ஒரு சுவை இருப்பது போல மூளையை நம்ப வைக்கிறது இந்த எம்.எஸ்.ஜி. அஜினமோட்டோ உலகின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது மைய அரசின் அனுமதியோடு (இதற்கு முன்பும் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் வந்து கொண்டிருந்தது) இந்திய மண்ணில் கடை பரப்பி விட்டார்கள் அஜினமோட்டோ -கம்பெனியினர். இந்தியர்களின் உணவு வழி அவர்களை அடிமையாக்க தாய் தமிழகத்திலிருந்து இம்முயற்சி தொடங்கப்பட்டு பல மாதங்களாகி விட்டன. உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என தொடர்ந்து பத்திரிக்கைகளில் விளப்பரங்களும் வரத்தொடங்கியாச்சு.

“12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளின் உணவில் இது சேர்க்கப்படக்கூடாது ” போன்ற விதிமுறைகள் கூட கண்ணில் படாத அளவிற்கு மிகச் சின்னதாகவே வெளியிடப்படுகிறது. 100% சுத்தமான சைவ உணவுப்பொருள் என்று விளப்பரப் படுத்தபடும் இதில் பன்றியின் மாமிசம் சேர்க்கப்படுவதை இந்தோனேசியாவில் 2001-ல் கண்டறியப்பட்டு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த நிறுவனம் பொது மன்னிப்பு கோரி.. அங்கிருந்து இடத்தை காலி செய்தது.

தம்மு அடிப்பதால் எல்லாம் கெடுதல் வரும் என்று  புர்ச்சி/புதுமை செய்ய முயன்று வரும் மைய சுகாதார அமைச்சர் அன்புமணிக்கு இவ்விஷயங்கள் தெரியாமலா இருக்கும்??????

உங்களில் யாருக்கேனும் கூடுதல் தகவல் தெரிந்தால் அதையும் தெரிவிங்களேன். டாக்டர் புருணே போன்றவர்கள் கூடுதல் தகவலை எழுதினால் நலம்.

2006ல் எழுதிய பதிவு இது. நண்பர் ஒருத்தரின் வீட்டில் அஜினமோட்ட பார்த்ததும் அவசியம் கருதி மீண்டும் பதிவு போட்டிருக்கிறேன்.

Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tags: , , ,

12 Comments to “ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ”

  1. yaathirigan says:

    one of my younger brother got kidney stones and during the diagnosis & treatment, dr had come to know that he used to have the so called friedrice in outside hotels so frequently and they contain this aginomotto stuff so much that it caused the problem.

  2. Abi says:

    Please see if this is helpful in correcting some of your views on Ajinamoto.

    http://www.nytimes.com/2008/03.....ref=slogin

  3. முக்கியமான விஷயங்கள்

    இதில் எந்த சுவையும் கிடையாது.

    ஆனால் இதை சேர்த்தால் சுவை கிடைப்பதாக நம்ப வைத்து வியாபாரத்தை ஜோராக ஆக்கி விட்டார்கள் (அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது, தங்கச்சிக்கு பச்சை புடவை எடுத்து கொடுப்பது போல் marketing gimmick தான் )

    மற்றப்படி இந்த விற்பனையை தடை செய்யவது கஷ்டமான காரியம். ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் இதை யாருமே உபயோகிக்கவில்லையே. இவ்வளவு நாளா சுவையாகத்தானே சாப்பிட்டோம் என்று சிறிது யோசித்து அனைவரும் இதை புறக்கணிப்பது தான் சிறந்த வழி என்று நினைக்கிறேன்

  4. மு. சுந்தரமூர்த்தி says:

    இந்த சமாச்சாரம் இந்தியாவுக்கும் வந்துவிட்டதா? எல்லாம் உலகமயமாதலின் விளைவு. ஆனால் நீங்கள் பீதியடையும் அளவுக்கு கெட்ட சமாச்சாரமல்ல. சுருக்கமாக சில அறிவியல் உண்மைகள்:

    க்ளூடாமேட் அல்லது க்ளூடாமிக் அமிலம் (glutamate or glutamic acid) என்பது இருபது வகையான அமினோ அமிலங்களில் (amino acids) ஒன்று. இந்த இருபது அமினோ அமிலங்கள் வெவ்வேறு விகிகதங்களில் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டது தான் பல்வேறு புரதங்கள் (proteins). அதாவது அமினோ அமிலங்கள் தான் புரதங்களின் அடிப்படை அலகுகள் (basic building blocks).

    புரதங்கள் எல்லா உயிரினங்களிலும் உண்டு. அவசியமானவை. மனித உடலிலும் பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உருவாக்கப்படுகின்றன. செயல்படுகின்றன. ஆனால் புரத உற்பத்திக்குத் தேவையான அமினோ அமிலங்களில் சிலவற்றை நம் உடலே உற்பத்தி செய்துக்கொள்ளும். சிலவற்றை நாம் சாப்பிடும் உணவிலிருந்து நேரடியாக பெறுகிறோம். க்ளூடாமிக் அமிலத்தை உற்பத்தி செய்துகொள்ளும் திறன் நம் உடலிலேயே இருப்பதால் இதை ஊட்டச்சத்தாக உணவிலிருந்து பெறவேண்டிய அவசியமில்லை.

    சோடியம் அயனி சேர்ந்த க்ளூடாமிக் அமிலம் தான் மோனோசோடியம் க்ளூடாமேட் (monosodium glutamate or MSG). இது சுவைக்காக சேர்க்கப்படுகிறது. இது உருவாக்கும் சுவை துவர்ப்பு. அதைத்தான் ஜப்பானிய மொழியில் உமாமி (umami) என்கிறார்கள். ஆங்கிலத்தில் savory. புரதங்கள் அதிகமாக உள்ள உணவுப்பொருட்கள் இந்தச் சுவையைக் கொடுக்கும். புரதங்கள் மிகுதியாக உள்ள பருப்பு வகைகள் (துவரம்பருப்பு அப்பெயரில் அழைக்கப்படுவதற்கு துவர்ப்புச் சுவைதான் காரணம் என்று நினைக்கிறேன்), இறைச்சி, பால் போன்றவை துவர்ப்பு சுவையைக் கொடுக்கும். இதற்கு மூலக்காரணமும் புரதங்களில் உள்ள க்ளூடமேட் தான்.

    நாக்கின் சுவை மொட்டுக்களில் (taste buds) ஐந்து வகையான சுவைகளை உணரும் ஏற்பான்கள் (taste receptors) உள்ளன. இனிப்பு, உவர்ப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஏற்பான்கள் உள்ளன. அறிவியல் அடிப்படையில் காரம் ஒரு சுவை அல்ல. காரத்தை உணர்வது வெப்ப ஏற்பான்கள் (heat receptors). சுவை ஏற்பான்கள் நாக்கில் மட்டுமே உண்டு. வெப்ப ஏற்பான்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் உண்டு. என்னதான் நம் கவிஞர்கள் பாடுவது போல காதில் தேன் பாய்ந்தாலும் நாம் இனிப்பை உணரமுடியாது. ஆனால் மிளகாய்ப் பொடி எங்கெல்லாம் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல கவிஞர்கள் தேவையில்லை.

    மீண்டும் க்ளூடாமேட்டுக்கு வருவோம். நாக்கில் துவர்ப்புச் சுவை ஏற்பான்களைத் தூண்டுவது புரதத்தில் உள்ள க்ளூடாமேட் தான். உணவில் புரதங்களின் பகுதியாகவும், நொதிகள் மூலமாக செரிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பிரிக்கப்பட்டும் க்ளூடாமேட்டை அன்றாடம் உட்கொள்கிறோம். இது போதாதென்று துவர்ப்புச் சுவைக் கூட்டுவதற்காக க்ளூடாமேட் சோடியம் உப்பு வடிவிலும் சேர்க்கப்படுகிறது. மேற்கத்திய வேக உணவகங்களில் பரவலாக சேர்க்கப்படுகிறது. இதனால் சுவைகூடி புரதச்சத்துள்ள உணவைச் சாப்பிடுவதாக நாக்கை ஏமாற்றுகிறோம். அதனால் நம் ஊட்டச்சத்து அதிகரிப்பதில்லையாதலால் எந்த பயனுமில்லை. ஆனால் அதே சமயம் சுவைக்கு அடிமையாக்கி ஆரோக்கியமற்ற வேக உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட வைப்பதால் அதன் மூலம் உடல் நலம் கெடலாம்.

    க்ளூடாமேட் அல்லது மோனோசோடியம் க்ளூடாமேட் மூலம் நேரடியாக எந்த கெடுதலும் இருப்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. மேற்கத்திய நாடுகளில் இதைப் பற்றி பல முறை கேள்விகள் எழுந்து ஆராய்ந்துப் பார்த்ததில் இதுவரை எந்த மோசமான பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படுவதாக நிருபிக்கப்படவில்லை. அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (US Food and Drug Administration) இந்த ஆய்வுகளை மேற்பாற்வை செய்து MSG ஐ உணவுகளில் சேர்க்க ஒப்புதல் அளித்து பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. ஒரே விதி என்னவென்றால் விற்பனை செய்யப்படும் பெட்டிகளில் MSG யின் அளவு குறிப்பிடப்பட வேண்டும்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்பது போல இதையும் அளவாக சேர்க்கச் சொல்கிறார்கள். அந்த அளவு எவ்வளவு என்பது தெளிவாக யாருக்கும் தெரியாது. ஏனென்றால் MSG யால் எத்தகைய தீவிர நோய்களும் உருவாவதற்கான அறிகுறிகள் இல்லை. ஆகவே அடுத்த முறை நண்பர் வீட்டுக்குப் போகும்போது தயங்காமல் நன்றாக சாப்பிடுங்கள். ஆனால் கறியும், பருப்பும் போடாமல் வெறும் MSG கொட்டி சமைக்கிறார்களா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.

    யாத்திரிகன் குறிப்பிடும் சிறுநீரகக் கற்களுக்கும், MSG க்கு எந்த சம்பந்தமும் இல்லை.

    (ஐஞ்சுவைகளைப் பற்றி ஒரு மோனொக்ராப் எழுதும் அளவுக்கு தகவல்கள் சேகரித்து கிடப்பில் போட்டு வைத்துள்ளேன்).

  5. அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் உடல் நலத்திற்கு எந்தக் கேடும் இல்லை. உள்ளே முடங்கிக் கிடக்கும் பணம் புழக்கத்திற்கு வந்து பொருளாதாரம் வளம் பெர வழி செய்யும். பச்சை புடவை வாங்கினாலும் அது தான்.
    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவேண்டாம்.

    சீன ஜப்பானிய உணவுகளில் அதிகம் பயன் படுத்தப்படுவது அஜீனோமோட்டோ. Mono sodium glutamate (MSG)தான் அஜீனோமோட்டோ. தற்போது, MSG இல்லாத உணவு என்று முத்திரை குத்தியே பல உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

    இந்தப் பதிவு 1990 களில் வந்திருந்தால் ஏதாவது பயன் இருந்திருக்கும். இன்று MSG பற்றி தெரியாத உணவு நிறுவனங்கள் அதிகம் இல்லை.

  6. //ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் இதை யாருமே உபயோகிக்கவில்லையே. இவ்வளவு நாளா சுவையாகத்தானே சாப்பிட்டோம் என்று சிறிது யோசித்து அனைவரும் இதை புறக்கணிப்பது தான் சிறந்த வழி என்று நினைக்கிறேன்//

    டாக்டர் சரியாகச் சொல்லியொருக்கிறார். மனசுதான் காரணம்.

  7. அக்னி பார்வை says:

    சரியா போச்சு!, ஏற்கனவே பாஸ்ட் புட் ஐட்டங்கள் விட்டுக்குள் நுழைந்து நாக்கை சாகடித்துவிட்டன, இப்பொழுது அஜினமொட்டுவுமா?…

    மேட் இன் ஜப்பான் எல்லாம் சூப்பர் பொருலாக இருக்கும் என் மக்கள் நம்ப கூடாது…

  8. செந்தழல் ரவி says:

    அஜிஜோமோட்டோவால் ஆபத்து என்றால் சீனா ஜப்பான் கொரியா போன்ற நாடுகளில் இந்த நேரம் அனைவரும் செத்திருக்கவேண்டுமே ?

    நீங்கள் சொல்லும் கடற்பாசியை அப்படியே உணவில் சேர்த்துக்கொண்டுதான் உள்ளனர்…அஜினோமோட்டோவும் தனியாக சேர்க்கின்றனர்…

    இந்தோனேஷியாவில் இந்த நிறுவனத்தை ஒழிக்க கிளப்பிவிடப்பட்ட வதந்தி அந்த “பன்றி” மேட்டர்…

    எனக்கு தெரிந்து அமெரிக்காவில் இதை தடை செய்ய முயன்று தோற்றனர்…சீனர்கள் உபயோகப்படுத்தும் இந்த பொருளுக்கு எதிரான பல்வேறு வதந்தியை கிளப்பினர்..

    அதன் விளைவுதான் இந்த பதிவு….

    நாம சாம்பார்ல பெருங்காயம் வெந்தயம் மசாலா போடுறமாதிரி அவனும் இதை ஏன் எதுக்குன்னு பார்க்காம போடுறான்…இதில் ஒரு குறிப்பிட்ட கடற்பாசித்தனமான ஒரு ஸ்மெல் வருது என்பது உண்மையோ உண்மை…நான் சோதித்து பார்த்திருக்கிறேன்…

  9. //ஆனால் அதே சமயம் சுவைக்கு அடிமையாக்கி ஆரோக்கியமற்ற வேக உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட வைப்பதால் அதன் மூலம் உடல் நலம் கெடலாம். //

    அப்ப இந்த மேட்டர் (அஜினோமோட்டோ) நேரடியா காவு வாங்காது, மறைமுகமா காவு வாங்கும்னு சொல்றீங்க, கரீக்டு தானே, இது இன்னாவோ கட்டிங் அடிக்க சொல்லோ, தண்ணி மிக்சிங்கும், சோடா மிக்சிங்கும் உள்ள வித்தியாசம் மாதிரி க்கீது.

  10. புத்தாண்டு பதிவில் பின்னூட்டம் போட முடியலெ. அதனால் இங்கே..

    உடனடி உணவுகளில் இது அதிகமாக சேர்க்கப்படுகிறது என நினைக்கிறேன். (நூடுல்ஸ்)

  11. [...] முன் ஒரு வலைப்பதிவில் (ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ) மோனொசோடியம் க்ளூடமேட் என்னும் [...]

  12. imtiyaz ahamed says:

    Hi,
    will u please kinldly let me know, whether it contains, any mixtures of big bones, because i came to know that ajinomoto is mixed up with pig’s bone, kindly confirm this matter,
    Thankin u
    yours
    Imtiyaz , from trichy

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over a year old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.