தமிழ்மண நிர்வாகிகளான சொர்ணம்சங்கரபாண்டியும், தமிழ் சசியும் சென்னையில் பதிவர்களை சந்திக்க விரும்புவதால்.. இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில்.. விருந்தினர்களாக..

சொர்ணம் சங்கரபாண்டி

தமிழ்சசி

மற்றும்

சங்கத்து சிங்கம் இளா

ஆகியோர் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் அஜெண்டா உண்டு!

1. தமிழ்மணம்- நிறை, குறைகள் புதியவடிவம், பல காரியங்கள் அறிவிப்புக்களோடு நின்று போவது, பின்னூட்ட உயரெல்லை நீக்கப்பட்டது போன்று எது பற்றியும் பேசலாம். நிறைகள் குறித்து மட்டுமல்லாது.. குறைகளையும் சொல்லலாம். தமிழ்மணத்தினை இன்னும் பிரபலப்படுத்தும் நோக்கில் என்ன என்ன செய்யலாம் என்று எதைப் பற்றியும் பேசலாம்.

2. பூங்கா- செய்தவைகளும், செய்யவேண்டியவையும் பூங்கா இதழ் உண்மையில் எப்படி இருந்தது. அது பதிவர்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை கொடுத்தது. பூங்க இதழ் தொடர்ந்து வர என்ன செய்யலாம், 24மணிநேரத்தில் இயங்கும் படியான பதிவர்கள் ஆசிரியர்களை நியமிக்கலாம். அவர்களையும் சுற்றில் கொண்டு வரலாம்.. என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்யலாம்.

மேற்சொன்னது வெறும் சாம்பிள்.. இன்னும் தோன்றும் எல்லாவிதமான கேள்விகளோடும் வரலாம், உரையாடலாம்.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த சந்திப்பு நடக்கும் இடம் பதிவர்கள் பலருக்கும் அறிமுகமான பார்வதி -மினி ஹால் தான்.

நாள்: 15 ஜூன் 2008

நேரம்: மாலை 5.30 முதல் 8.30 வரை

இடம் : ஸ்ரீ பார்வதி -மினி ஹால், 28/160 எல்டாம்ஸ் ரோடு, சென்னை-18

லோக்கேசன்-

எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் “மியூசிக் வேர்ல்ட்” கடைக்கு அருகிலும், “கிழக்குபதிப்பகம்”, “ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர்” எதிரில் இருக்கிறது நம் சந்திப்பு அரங்கம்.

அவசியம் வாங்க… உங்க எண்ணங்களை பதிவு செய்யுங்க!

(இந்த சந்திப்புக்கு முன் தயாரிப்பாக ஜூன் 8ல் சென்னை மெரினா காந்திசிலை அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மொக்கை சந்திப்பில் கலந்துகொண்டு, கேள்விகளை தயார் செய்யலாம். உதவி செய்ய.. பாஸ்டனில் இருந்து, பாலா பறந்து வருகிறார்) :)

Tags: ,

16 Comments to “ஜூன் 15ல் தமிழ்மண நிர்வாகிகளுடன் பதிவர் சந்திப்பு”

  1. வந்துர்றோம்

  2. gimsha says:

    என்னையும் அப்படியே கொஞ்சம் ஓரமாக உட்கார வைத்தால் போதும்.

  3. வாழ்த்து(க்)கள்.

  4. வாராவாரம் பதிவர் சந்திப்பா, ம்ம் வரலேனா அடிப்பாய்ங்க.
    என்னத்த சொல்ல,

  5. வாழ்துகள் !

  6. வெற்றி says:

    வாழ்த்துக்கள். ஒன்றுகூடல் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்து, தமிழ்மணம் மேலும் மெருகு பெறும் என நம்புகிறேன்.

  7. சம்மன் கொடுத்திட்டீங்க இல்லே? ரெண்டு ஸ்பாட்டுக்கும் ஆஜராயிடுறோம்… :)

  8. அன்புள்ள நண்பர் அவர்களுக்கு வணக்கம்.
    தமிழ்மண நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகள்.

    14.06.2006 இல் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க நிகழ்வுக்குச் சென்னை வரும் நான் 15.06.2008இல் புதுச்சேரியில் நடைபெற உள்ள தமிழ்க்காவல் மின்னிதழ் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்.

    எனவே சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.பொறுத்தருள்க.

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

  9. ஞாயித்துக்கிழமை ஆச்சின்னா வாராவாரம் பதிவர் சந்திப்பு போட்டு கழுத்தறுத்தீங்கன்னா எல்லாரும் அவங்கவங்க பொண்டாட்டி கிட்டே என்னென்ன பொய்மூட்டையை அவுத்து வுட்டுட்டு வரவேண்டியிருக்குமோ தெரியலை. இந்த கோணத்துலே இந்த பிரச்சினையை யாராவது யோசிச்சி பார்த்தீங்களா? :(

  10. கிரி says:

    அட! யாராவது சிங்கையில வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யுங்கப்பா….

  11. S. Sankarapandi says:

    Bala, Thanks for the arrangement and also this post.

    S. Sankarapandi

  12. வலைபதிவர்கள் அனைவரும் காலையிலேயே புறப்பட்டு சென்னை உயர்நீதி மன்றம் எதிரில் உள்ள YMCA அரங்குக்கு காலை 10 மணிக்கு வந்தால் அங்கு சிந்தனைக்கும், வயிற்றுக்கும் தேவையான உணவு வழங்கப்படும்.

    அதை முடித்துக்கொண்டு பதிவர் சந்திப்புக்கு செல்லலாம்.

    மேலும் விவரங்களுக்கு: http://makkal-sattam.blogspot......st_12.html

  13. வாழ்த்துக்கள்! லக்கி சொன்னபடி ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துத் திருச்சியில் இருந்து வந்துவிட்டால், கண்டிப்பாக என் 2 அணாக்களும் உண்டு!

  14. வாழ்த்துக்கள் !! கண்டிப்பாக வாரோம் :)

  15. எப்படி போச்சு சந்திப்பு ? பதிவு போடுங்க சாமீ…

  16. சந்திப்பைப் பற்றிய பதிவு http://vinaiooki.blogspot.com/2008/06/15-2008.html

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>