தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று திரும்பி வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழ்ழித்து போய் பார்த்து இருக்கிறார். அப்போதும் சைட்டில் வேலை நடப்பதாக தளம் காட்ட.. குழம்பிய நண்பர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார். அதன் வரிசை கீழே..!

 

படத்தின் வலது மூலையில் நேரத்தை நீங்கள் பார்க்கலாம்..

 
 

 

இதிலும் நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!

என்ன நேரத்தைப் பார்த்து என்ன செய்யுறது.. யாருமே நுழைய முடியாமல் இருந்த தளம் திறக்கப்பட்ட போது.. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து.. ஹவுஸ் புல் போர்ட் போட்டிருக்கிரார்கள். வெறுத்துப் போய்.. தியேட்டர்காரர்களிடம் பேசி இருக்கிறார் நண்பர். சரியான பதில் கிடைக்க வில்லை. சரி.. தியேட்டரில் போய் விசாரிக்கலாம் என்று போனால்.. அங்கே முதல் நாள் காட்சியின் டிக்கெட் ப்ளாக்கில் விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விலை. ரூ 350/-.

இது பற்றி நண்பர்கள் சிலருடம் பேசிய போது எல்லோரும் கார்ப்பரேட் புக்கிங்காக இருக்கலாம் என்றார்கள். ஆனால்.. அப்படி என்றால்.. ப்ளாகில் எப்படி கிடைக்கிறது. கார்ப்பரேட் புக்கிங் எனில் “இத்தனை நாட்களுக்கு கார்ப்பரேட் புக்கிங்” என்று அதை தளத்தில் எழுதி வைப்பதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது.

கவுண்டர் சேல்ஸும் கிடையாது, ஆன் லைன் சேல்ஸும் கிடையாது.. ஆனால்.. ப்ளாக்கில் கிடைகிறது.. இது எப்படி சாத்தியம்..?? தியேட்டருக்கு தெரியாமல் நடக்குமா? பிரபலமான தியேட்டரே இப்படியான கள்ள சந்தையை உருவாக்குகிறார்களோ..என்றும் சந்தேகிக்கிறார் நண்பர். இரண்டு முறை மெயிலும் அனுப்பி வைத்திருக்கிறார். தியேட்டர் நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறதோ?!

Popularity: 5% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

21 Comments to “டிஜிடல் ப்ளாக் மார்கெட் – சத்யம் தியேட்டரின் தில்லு முல்லு!!”

  1. சர்வரில் ஏற்பட்ட ப்ரோக்ராம் கோளாறு என்று சொல்லி தியேட்டர் நிர்வாகம் மிக சுலபமாக தப்பித்துக் கொள்ளும். பல்க் புக்கிங் மற்றும் கார்ப்பரேட் புக்கிங் சத்யம் சினிமாஸுக்கு ஆக்ஸிஜன் மாதிரி. அதை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

    சத்யம் சினிமாஸில் துட்டு கொடுத்து படம் பார்ப்பது கிரிமினல் குற்றம் என்பது என் நிலைப்பாடு. உங்கள் நிலைப்பாடு என்ன? :)

  2. இன்னைக்கு வீக்லி ஹாஃபான்னு கேட்க மறந்துட்டேன். அதுக்காக இந்தப் பின்னூட்டம் :)

  3. சத்யம்லயேதான் படம் பார்க்கணுமா???

    சத்யம்ல எப்பலாம் பெரிய ஸ்டாருங்க படம் வரப்பல்லாம் இதான் நடக்குது ….

    இதுக்கு போயி அலட்டிக்கலாமா

  4. //சத்யம்ல எப்பலாம் பெரிய ஸ்டாருங்க படம் வரப்பல்லாம் இதான் நடக்குது ….//
    நிஜம்தான். எப்பொழுதுமே பெரிய படங்கள் வரும்பொழுது சத்யமில் இப்படித்தான் நடக்கிறது. இவ்வளவு நாட்களாக உங்களுக்குத் தெரியாதா?
    கார்ப்ரேட் புக்கிங்கெல்லாம் கண்துடைப்பு. பிளாக்தான் நிஜம்!!

    பி.கு: என்ன, கொஞ்ச நேரம் முன்பு பார்த்தபொழுது, “Comments Closed” என்று வந்தது?!

  5. dhans says:

    நீங்கள் வேண்டுமென்றால் மாயாஜால் சென்று முயற்சித்து பார்க்கலாம், அவர்கள் வலைத்தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னம் மட்டுமே முன்பதிவு செய்யப்படும், மேலும் 45 கட்சிகள் ஊடப்போவதாக கேள்வி.

    நான் சத்யம் தியேட்டர் போவதை விட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

  6. அண்ணாத்தே!

    தேவியலயும், உட்லண்ஸ்லயும் டிக்கெட் கூவி கூவி விக்குறாங்க. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 120 ஷோ ரிலீஸ் பண்றாங்க. ஹவுஸ்புல் தொல்லை இல்லாம எல்லாரும் பர்ஸ்ட் வீக் படம் பார்த்துடலாம்.

  7. ஜிங்காரோ ஜமீன் says:

    சிவாஜி ரிலீஸின்போதும் இதேபோன்ற நிலை எனது சக ஊழியருக்கும் ஏற்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான்.

  8. rapp says:

    தசாவதாரம் dvd இந்த மாசமே ரிலீஸ் பண்ண போறது உண்மையா?

  9. நாகராஜன் says:

    இந்த கோபம் டிக்கெட் கிடைக்கலைங்கிறதுனால கிடையாது.

    கோபம் இந்த system மீதுதான்.
    சினிமா தியேட்டர் என்பது அரசிடமிருந்து பல சலுகைகளைப் பெற்று மக்களின் பொழுதைப் போக்கும் ஒரு இடம்.
    அங்கு டிக்கெட்களை இன்னாருக்குத் தான் கொடுப்பேன் என முன்னுரிமைக் கொடுக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.
    first come first server முறையில் டிக்கெட்களை விற்கலாம்.

    ஆனால் இவர்கள் செய்தது ஏலம் விடுவது போன்ற செயல்.
    டிக்கெட்களை அதிகமான விலைக்கு விற்றால் தான் பிளாக்கில் விற்பது என்றில்லை.

    கார்ப்பரேட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே, அவர்களிடம் இருந்து பிரதிபலனாக வேறு விஷயங்களை பெறுவதற்காகத்தான்.அது விளம்பரங்களாக இருக்கலாம்.எதுவாக வேண்டுமானாலும்.

    தியேட்டர்களில் சினிமா டிக்கெட், கேண்டீனில உணவு பொருட்கள் போன்றவைகளை விற்க அரசு விதித்துள்ள நெறிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    சத்யம் தியேட்டர் என்றில்லை.சென்னையில் பல தியேட்டர்கள் இதைவிட மோசமான முறைகளில் விதிமுறைகளை மீறுவதாக நினைக்கிறேன்.

  10. பாலபாரதி! வெள்ளி,சனி,ஞாயிறு, திங்கள் நான்கு நாட்களும் அரங்கம் நிறைந்து விட்டது. நண்பர்கள் என்னிடமும் இதையே தான் சொன்னார்கள். சராசரி கணக்கு எடுத்து பார்த்தால் இந்த நான்கு நாட்களில் மட்டும் 60 லட்சம் ரூபாய்கள் டிக்கெட்ட்டுகளில் லாபம் அவர்களுக்கு..

  11. theevu says:

    ப்ளாக்கில் 350 ரூபா கொடுத்து படம் பார்ப்பவனின் எதிர் பார்ப்பை படம் பூர்த்தி செய்யாவிட்டால் அவன் விமர்சனம் எழுதும்போது எப்படி எழுதுவான்? :)

    ஒரு படம் பற்றிய முதல் அபிப்பிராயத்தை இவர்கள்தான் பரப்புபவர்கள் .

    இவர்களால்தான் ஒரு படம் ஓடுவதும் தியேட்டரைவிட்டு பறப்பதும் முடிவுசெய்யப்படுகிறது.

  12. prakash says:

    சத்யம் மட்டுமில்ல, ஆன்லைன் புக்கிங் இருக்கிற சங்கம், இனாக்ஸ் மூவிஸிலும் இதே கூத்துதான்…

  13. ஒரு நிருபராக நான் சத்யம் தியேட்டர் நிர்வாகத்தினரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அப்டியா சார்…! ஏதாவது நெட்வொர்க் பிராப்ளமா இருக்கலாம். ஒரே நேரத்துல் நெறையபேர் ஓப்பன் பண்ணாலும் அப்டி ஆகலாம்(?). தசாவதாரம் படத்தை பார்க்க பெரிய பெரிய கார்ப்பரே‌ட் நிறுவனங்களெல்லாம் ட்ரை பண்றாங்க, சோ… அவங்க பல்க்கா புக் பண்ணிருப்பாங்க, என்றார்கள். தனியார் நிறுவனம்… அதுவும் பத்திரிகைகளுக்கு விளம்பர பார்ட்டி… அதனால் இதையெல்லாம் பத்திரிகையில் வெளியிட முடியாது என்பதால், ஓ.கே. சார் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டேன்.

  14. ஜேபி says:

    சினிமா பார்த்து நேரத்தையும் , காசையும் வீனாக்காதீங்கடானு, எம்புட்டு வழியில சொன்னாலும் விடமாடீங்க போல ….

  15. சத்யம் நமக்கான தியேட்டர் இல்லை. லக்கி கருத்தை வழிமொழிகிறென்

  16. jackisekar says:

    கற்றது தமிழ் படத்தில் ஒரு வசனம் வரும் இங்க ரெண்டு போ்தான், சத்தியம் தியேட்டர் உள்ள போய் படம் பாக்கிறவன், வெளியில நின்னு வேடிக்கை பார்கிறவன். நாமல வெளியில நின்னு வேடிக்கை பாற்க்கிற ரகம் சரி தானே???

  17. Abul says:

    மாயாஜாலில் ஆன்லைன் டிக்கெட் கிடைக்கிறது.. ரூ.220 மட்டுமே.

    -அபுல்

  18. [...] Balabharathi reported suspicious activity at Sathyam Cinemas in [...]

  19. rachinnathurai says:

    adappaavikal.kandippathoodu vittuvidaamal thantikkavum ventum.appoothuthaan thirunthuvaarkal.

  20. பாலா,

    தியட்டர் தொழில் இந்த 15 வருடங்களில் நசிந்து வருகிறது. புதிதாக பெரிய அளவில் யாரும் கட்டுவதில்லை. வரி விகுதமும் அதிகம். கட்டுபடியாகமல் பல ஊர்களில் கல்யாண மண்டபங்களாகவும், காம்ப்லெக்ஸ்களாகவும் மாற்றபடுகின்றன.

    டிக்கட் விலைகளை தியட்டர்களே இஸ்டம் போல் நிர்னியக்க அனுமதிக்க வேண்டும்.
    ஹிட் படங்கள், முதல் வாரங்கள், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் போன்ற நாட்களில் ஏல முறையில் நல்ல விலையுல் விற்று நேர்மையாக‌ லாபம் பார்பது தான் முறையானது. சோசியலிச கட்டுப்பாடுகள் இன்னும் இந்த விசியத்தில் நீடிப்பதால் தான் இந்த கருப்பு மார்கெட் உடையும். தியேட்டர்காரகளே செய்ய வேண்டிய அவலம்.

    நஸ்டம் அதிகமானால், தியட்டர்/ சினிமா தொழில் தொடராது என்பது அடிப்படை பொருளாதார விதி. 1970கள் போல் லாபம் இனி கிடைக்காது. அதனால் தியட்டர்கள் பெரும்பாலும் நல்ல நிலைமையில் இல்லை.

    ச‌ந்தை பொருளாதார‌ விலை நிர்னய‌ம் அனும‌திக்காம‌ல் தீர்வில்லை.
    வ‌ச‌தி குறைந்த‌வ‌ர்க‌ள் சில‌ வார‌ங்க‌ள் க‌ழித்து ப‌ட‌ம் பார்க்க‌லாம். ஒன்னும் குடி முழுகி விடாது.

    திருட்டு வீசிட், இன்டெர்னெர் டௌவுன் லோடிங்கும் திரை தொழிலை ஒரு வ‌ழி ப‌ண்ணுகிற‌து. த‌யாரிப்பாளார் ம‌ற்றும் திய‌ட்ட‌ர்கார‌ர்க‌ளின் வ‌ருவாயை இது விழுங்கிற‌து.
    என்ன‌ செய்ய‌ ?

  21. Prabhu Rajadurai says:

    இரண்டு நாள் கழிச்சிப் போனா, 50 ரூபாய்க்கு பார்க்கக் கூடிய படத்துக்கு 350 ரூபாய் கொடுப்பதை நொந்து கொள்வதா, இல்லை ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு பெரிய ஆராய்ச்சியில் இறங்கிய பாலபாரதி, உங்களை நொந்து கொள்வதா?

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over a year and a half old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.