Image and video hosting by TinyPic

நடிகை புவனேஸ்வரி இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட செய்தி.. ஊடகங்களின் புண்ணியத்தால் நம்மில் பலரும் படித்திருப்போம்.

இரு வழக்கறினர்கள் அவருக்காக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனால் அவரின் ஜாமின் மீதான வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

நடிகை புவனேஸ்வரியின் கைது செய்தி அறிந்தபோது இயல்பாகவே வருத்தப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன். அதற்கு சில காரணங்கள் இருந்தன. அவரின் வயது வந்த மகன், ஏற்கனவே இது போன்ற வழக்கில் கைதானவர். (2000ம் ஆண்டு போடப்பட்ட அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.) கொஞ்ச நாட்களுக்கு முன்னமே அவரை போலீசார் எச்சரித்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் அப்போது கேட்டிருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி இப்படி மீண்டும் மாட்டிக்கொண்டாரே என்ற வருத்தம் எழுந்தது உண்மை.

காலை சுமார் பத்து மணி அளவில் போலீசாரிடம் மாட்டிக்கொண்ட அவர், சிந்தாதரிப்பேட்டையில் இருந்து அவர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் மதிய வேளையில் தான் செய்தி வெளியே வந்து பத்திரிக்கையாளர்கள் கூடியிருக்கிறார்கள்.

அதனால் அன்றைய மதிய செய்தித்தாள்களில் கூட இந்த செய்தியை பார்த்திருக்க முடியாது. அவர் காவல்துறையினரிடம் கூறியதாக வெளிவந்த செய்தியில் உண்மை இருக்கிறதா.. அல்லது அது திரிக்கப்பட்டதா என்பது பற்றியும் அறியேன்.

ஆனால்.. அடுத்த நாள் எல்லா நாளிதழ்களிலும்.. “சி” நடிகை, “ஷ”நடிகை, கணவனைப் பிரிந்த “ந”நடிகை, கலைக்குடும்பத்து பழைய நாயகியான “ம” நடிகை என்று கிசு கிசு பாணியில் செய்தி வந்திருந்தது.

ஒரே ஒரு நாளிதழில் மட்டும் அடைப்புக்குறிக்குள் நடிகைகளின் பெயரையே போட்டு இருந்தார்கள். கூடவே சில நடிகைகளின் படங்களையும்.

சில பத்திரிக்கை நண்பர்களிடம் பேசி அதை எழுதிய செய்தியாளருக்கு தொலைபேசியில் என்னப்பா இப்படி பண்ணீட்ட.. என்று விபரம் கேட்டேன். அதற்கு அவர் வருத்தத்துடன் சொன்னார். “நானும் சி, ந, ம, என்று தான் மொட்டையாக எழுதிக் கொடுத்தேன். ஆனால் சப்-எடிட்டர் இப்படி மொட்டையாக எழுதினா எப்படி.. அந்த நடிகைகள் யாருன்னு நாங்களாவது தெரிஞ்சுக்கிறோம். நீ பிராக்கேட்டில் நிஜ பெயரை எழுதி வைத்துவிட்டுப் போ நான் பார்த்துட்டு, திருத்தி அனுப்பி விடுகிறேன்- என்று சொன்னாராம். இவரும் எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு போய் விட.., அந்த சப்- எடிட்டர் அந்த செய்தியை அப்படியே அச்சுக்கு கொடுத்து விட்டார். செய்தியை பார்த்த லே-அவுட் நபர், செய்திக்கு தகுந்த மாதிரி நடிகைகளின் படத்தை போட்டு விட்டார்” என்று அந்த செய்தியாளர் சொன்னார்.

பொதுவாக எந்த செய்தியாக இருந்தாலும் அதன் செய்தி ஆசிரியர் அனுமதி இல்லாமல் அச்சுக்கோ, விஷ்வலாகவோ வெளியே போக முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.அதன் வெளியீட்டாரின் பங்கும் முக்கியமானது.

இந்த செய்தி விவகாரம் செய்தி வெளியான ஞாயிற்றுக்கிழமையே பெரிய பிரச்சனையாக வெடிக்கவும். திங்கட்கிழமை மறுப்பும் போட்டிருக்கிறது அந்த படம் போட்டு செய்தி வெளியிட்ட நாளிதழ்.

செய்தியை எழுதிய செய்தியாளனை இன்று அலுவலகத்திற்கு அழைத்து, தவறான செய்தியை தந்தமைக்காக நடவடிக்கை எடுப்பதாகச்சொல்லி, வேலைக்கு உலை வைத்து விட்டது நிர்வாகம். இப்போது அந்த செய்தியாளருக்கு வேலை போய் விட்டது. :(

இவர் தப்பு செய்ய வில்லை என்பதல்ல என் வாதம். ஆனால் அந்த சிறு தப்பை பெரிய தவறாக மாற்றிய சப்- எடிட்டரும், எடிட்டரும் நிம்மதியாக ஏசி அறைக்குள் இருக்கிறார்கள் என்பது தான் வேதனை.உண்மையில் இது போன்ற செய்திகளை வெளியிட ஊக்கமளிக்கும் நிர்வாகம் தப்பித்துக்கொள்கிறது

இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த இன்னொன்று அனுபவத்தையும் சொல்லியாகவேண்டும், இப்போது புவனேஸ்வரி அப்படி சொல்லவே இல்லை என்கிறது போலீஸ் வட்டாரம்.ஒரு வேளை அவர் சொல்லாமல் இருக்கலாம். செய்தியாளர்களாக பேசி வைத்துக்கொண்டு இப்படி கதை கட்டி இருக்கலாம். முன்பு ஒரு சயமம். இப்படி கதை கட்டும் செய்தியை நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட, அந்த கட்டுக்கதை அடுத்த நாள் செய்தியாக வந்த போது, என் ஆசிரியரிடம் டோஸ் வாங்கி, இரண்டு நாள் சஸ்பெண்ட் ஆன கதையும் எனக்கு உண்டு. (இது போல பலரும் அவர்களின் எடிட்டர்களிடம் வாங்கிக் கட்டி இருக்கிறார்கள்) இன்னொருவன் எழுதும் போது நீயும் எழுதனும்ய்யா.. அப்பத்தான் அது செய்தி. உண்மையா பொய்யான்னு பார்க்கிறது நம்ம வேலை இல்லை. அது மக்களும், போலீசும் செய்யவேண்டிய வேலை. நமக்கு கிடைத்த தகவலை நாம முந்தி கொடுக்கனும்” என்று எனக்கு அட்வைஸ் பண்ணிய ஆசிரியர்களும் உண்டு. இதன் காரணமாகத்தான் அந்த செய்தியாளன் புவனேஸ்வரி செய்தியைக்கொடுத்திருக்கிறார் என்று திடமாக நம்புகிறேன்.

உலகில் பலரும் மதிப்பளிக்கும் மீடியா உலகம் பற்றிய இன்னொரு பக்கம் மிகவும் கேவலமானது. அது பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

Popularity: 100% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

24 Comments to “புவனேஸ்வரியும் ஒரு பலிகிடாயும்..”

  1. ila says:

    இப்படி ஒரு சங்கதி இருக்கா?

  2. கொடுமையான விசயம்!
    ‘இந்த விசயத்தில் காவல்துறை உடனுக்குடன் தகவல்களை வெளியிட்டால் இதுபோன்ற பிரச்சனைகளே வராது’ இல்லையா அண்ணே?

  3. தெகா says:

    உலகில் பலரும் மதிப்பளிக்கும் மீடியா உலகம் பற்றிய இன்னொரு பக்கம் மிகவும் கேவலமானது. அது பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.//

    பாலா, அது கொஞ்சம் கஷ்டமான காரியமாப்படுதே. அதெப்படி அதே துறையில் இருந்து கொண்டு அதனையே விமர்சிக்க முடியும் ;-) ?

  4. பீர் says:

    மீடியாவின் கேவலமான பக்கத்தையும் வாசிக்க காத்திருக்கிறேன்.

  5. gulf-tamilan says:

    /அது பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.//

    அவசியம் எழுதவும் !!!

  6. ரவி says:

    //உலகில் பலரும் மதிப்பளிக்கும் மீடியா உலகம் பற்றிய இன்னொரு பக்கம் மிகவும் கேவலமானது.//

    :(

  7. ஓர் அப்-டேட்:-

    புவனேஸ்வரி சொன்னதாக செய்தி வெளியிட்டதற்கு -தமிழிக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தினமலர் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் திரு லெனின், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இன்று(07.10.09)கைது செய்யப்பட்டார். அவருக்கு வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

  8. ரவி says:

    பலிகடா ஆக்கப்பட்ட நிருபர் தான் லெனினா? இல்லை மேற்பொறுப்பில் இருந்தவரா?

  9. இல்லை ரவி, பலி கிடா ஆக்கப்பட்டவர் அல்ல லெனின். அவர் தன் சொந்த ஊருக்கு போய் விட்டார். வேலையில்லாமல் சென்னையில் எப்படி நாட்களை கடத்தமுடியும்..?

    லெனின் அந்த செய்தியை பிரசுரிக்க(கடைசி கட்ட லே-அவுட் உட்பட) சரிபார்த்து ஓகே செய்யாக்கூடிய நிலையில் இருப்பவர்.

  10. ரவி says:

    //அவர் தன் சொந்த ஊருக்கு போய் விட்டார். வேலையில்லாமல் சென்னையில் எப்படி நாட்களை கடத்தமுடியும்..?//

    :(

    தெளிவுபடுத்தியமைக்கு நன்றி பாலா.

  11. மிக வருத்தமளிக்கும் செய்தி. ஊடகத்தின் மறுபக்கத்தையும் தொடர்ந்து எழுதுங்கள்.

  12. உண்மையா பொய்யான்னு பார்க்கிறது நம்ம வேலை இல்லை. அது மக்களும், போலீசும் செய்யவேண்டிய வேலை. நமக்கு கிடைத்த தகவலை நாம முந்தி கொடுக்கனும்”//

    கொடுமை…நடப்பவைகளை திரிக்காமல் நடுநிலைமையுடன் சொல்லவேண்டும் என்ற நிலையில் உள்ள செய்தி தாள்கள் வியாபாரத்துக்காக இப்படி செய்யலாமா? அவர்கள் தங்கள் சொந்தக் கர௫உதுக்கலிந்படி எழுதினாலே சார்புடையதாகி விடும் நிலையில்,இல்லாததையும் பொல்லாததையும் எழுதினால்…

  13. shanmughapriyan says:

    நான் அறியாத உலகம் இது.பகிர்ந்தமைக்கு நன்றி,பாலபாரதி.உங்கள் பதிவுகளை எப்பாடிfollow பண்ணுவது?அதற்கான ஆப்ஷ்னே இல்லையே,நண்பரே?

  14. அண்ணே,

    //உலகில் பலரும் மதிப்பளிக்கும் மீடியா உலகம் பற்றிய இன்னொரு பக்கம் மிகவும் கேவலமானது//

    உலக மீடியாவுக்கு என்னைக்குமே மதிப்பு உண்டு. ஆனா, கேவலமான, அருவருப்பான இந்திய மீடியா பத்தி எழுதுங்கண்ணே.

  15. மிக அரிதானா, ஆனால் அறிய வேண்டிய செய்தி இது.

  16. Anika says:

    “பலிகிடாய்” என்பது தவறான சொல்லாடல்!

    “பலிகடா” என்பதே சரியான சொல்!

    தயவுசெய்து திருத்திக்கொள்ளவும்!

  17. vinu says:

    உலகறிந்த உண்மை ஒன்று , தினமலரில் வந்ததுதான், அவர்களுக்கு வருத்தம்,மூன்றடி நடந்தாலே மூச்சி வாங்கும் வயதான hero , அவருக்கு 15 வயது பெண் குழந்தை ஜோடி, கிட்டதட்ட அவரின் பேத்தி வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் அவருக்கு தேவை.இது ஒரு, child abuse. இதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும்.
    ஹீரோ , ஹீரோயின் இடைய வயது வித்தியாசம் அதிக பட்சம் 10 வருடம் என சட்டம் கொண்டுவரவேண்டும்.
    தமிழ் வாலிபர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கும் ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும். கலாசார சிரழிவின் முக்கிய காரணமான சினிமாவை தடை செய்ய வேண்டும் .
    கதாநாயகி அணியும் உடைகளுக்கு அளவு நிர்ணயம் செய்யவேண்டும்.
    முக்கியமாக திரைப்படங்களை consumer துறையின் கீழ் வர வகை செய்ய வேண்டும்.
    தரமில்லா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .

  18. krish says:

    Freedom of press is for the publisher of the newspaper என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது.

  19. Sai Ram says:

    எழுதுங்க! எழுதுங்க! காத்திருக்கிறேன்.

  20. நேற்று (09.10.09) மாலை நடந்த கூட்டத்தில் அந்த செய்தியாளனை பணி நீக்கம் செய்தது தொடர்பான கேள்விக்கு, அவர் எங்களுடன் தான் இருக்கிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம். பணி நீக்கம் செய்யப்படவில்லை- என்று அந்த நிறுவனத்தின் முதன்மை நிருபர் தெரிவித்திருக்கிறார்.(மீண்டும் பணியமர்த்தப்படுவார் என்றே நினைக்கிறேன்) இது பொய்யாக இருக்கும் நிலையில்.. பாதிக்கப்பட்ட செய்தியாளனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். பொருத்திருந்து பார்ப்போம்.

  21. பின்னூட்டமிட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!

    சாய்.. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் பயம் வருது. ;)

  22. kanagu says:

    இந்த தகவல்களுக்கு ரொம்ப நன்றிங்க…

    பத்திரிக்கை துறை எப்படி இயங்குகிறது என சிறிது புரிந்து கொள்ள முடிந்தது…

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over 5 months old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.