Mar 08
மனிதர்கள் – கமிஷனர் எஸ்.ஆர் ஜாங்கிட்
சம்பவம்-1

பொதுமக்கள் குறைகேட்பு
ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய அந்த பகுதி காவல் நிலையத்தார், பையனின் அண்ணனை அள்ளிக்கொண்டு வந்து ஸ்டேசனில் வைத்துவிட்டார்கள்.
புதுமணத்தம்பதியினர் தஞ்சம் அடைந்த இடம் புறநகர் காவல் ஆணையாளர் அலுவலகம். தாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டதாகவும், பையனின் அண்ணன் சிறைபட்டிருக்கும் செய்தியையும் புறநகர் கமிஷனரிடம் புகாராக தெரிவிக்கின்றனர். அவர்களின் எதிரிலேயே மைக்கில் (வாக்கி டாக்கி), அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை அழைக்கிறார் கமிஷனர். அவர் இல்லை. உடனடியாக அவரது செல்போனில் தொடர்புகொண்டு, இப்புகார் குறித்து கேட்கிறார். மென்று முழுங்கி எதிரிலிருந்து பதில் வருகிறது.
“மொதல்ல அந்த பையனை அனுப்புங்க.. இனிமேலும் இப்படி தப்பு பண்ணாதீங்க.., இவர்கள் இருவரும் மேஜர். அவர்கள் விரும்பி திருமணம் செய்துகொள்ள சட்ட்த்தில் இடம் இருக்கு. உடனடியாக பிடித்து வைத்திருக்கும் பையனை வெளியே அனுப்புங்க.., இங்கே இருந்து கல்யாணம் செய்துகிட்ட பொண்ணும், பையனும் வருவாங்க அவர்களிடமும் ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு அனுப்பீடுங்க.. இனியும் இப்படி தப்பா ஏதாச்சும் செய்யாதீங்க” என்று கொஞ்சம் கடுமையாகவே சாடுகிறார் கமிஷனர்.
புகார் கொடுக்க வந்தவர்கள் நன்றி சொல்லி திருப்தியுடன் செல்கிறனர்.
—-
சம்பவம்-2.

உடனடி ஆக்ஷன் - வாக்கி டாக்கியில் பேசும் கமிஷனர் ஜாங்கிட்
ஒர் அம்மாவும், பையனும் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். அவர் ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவர் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடமுடியும். அக்கட்சியின் அடையாள அட்டையை கழுத்தில் மாலை மாதிரி தொங்க விட்டிருந்தார். அவர்கள் முறை வந்ததும் அந்த அரசியல்வாதி பெண் கமிஷனரிடம் வந்து, வந்திருந்த அம்மா, பையனின் பிரச்சனைகள் குறித்து விளக்கினார். அவரின் அடையாள அட்டையை கவனித்தவர் கேட்டார்.
‘நீங்க யாரு?’
‘நான்.. —-கட்சியில…’
‘நீங்க அப்படி ஓரமாக போய் உட்காருங்க.. நான் பார்த்துக்கிறேன்.’
அந்த பெண்ணை அனுப்பி விட்டு, அவரை ஏன் அழைத்து வந்தீர்கள்.. உங்க பிரச்சனைக்கு நீங்க வந்தா போதும். சிபாரிசுக்கு யாரையும் அழைத்து வரவேண்டாம்’ என்று அறிவுறுத்தினார் கமிஷனர்.
————–

நன்றி சொல்லும் பெண்கள் கூட்டம்
மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நான் புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் நேரில் பார்த்தவை.
பகுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லை எனில் மேல் முறையீடு செய்வதற்கு காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். அப்படி இங்கு வருபவர்களின் பிரச்சனைகள் இரண்டொரு நாளில் தீர்த்துவைக்கப்படுகின்றன. நேரடியாகவே கமிஷனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உத்தரவிடுவதால்.. இது சாத்தியமாகிறது. தினம் குறைந்தது 50 முதல் 100 புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.
போலீசாரின் நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறையை இரண்டாக பிரிக்கிறார் முதல்வர் கருணாநிதி. அப்படி 2008 ஆண்டு சென்னை புறநகர் பகுதியில் உதயமாகிறது சென்னை புறநகர் காவல் ஆணையர் அலுவலகம். அதன் முதல் ஆணையராக பெறுப்பேற்றுக்கொண்டவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்- ஐபிஎஸ்.

சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்
சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்ட பின் 2008ம் ஆண்டு 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஒரு கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 636 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 366 (97 சதவீதம்) வழக்குகள் கண்டறியப் பட்டு, ஒரு கோடியே 55 லட்சத்து 57 ஆயிரத்து 964 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. 2009ம் ஆண்டு 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 348 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 747 (81 சதவீதம்) வழக்குகள் கண்டறியப்பட்டு, ஒரு கோடியே 79 லட்சத்து 99 ஆயிரத்து 830 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. (ஆதாரம்- தினமலர். )
சென்னையோடு ஒப்பிடும் போது மீட்கப்பட்ட பெருட்களின் எண்ணிக்கை, கண்டுபிடிக்கப்பட குற்றவாளிகளின் எண்ணிக்கையும் புறநகரில் அதிகம். அதற்கு முக்கிய காரணமே புறநகர் ஆணையர் ஜாங்கிட் தான் என்று சொல்லுகின்றனர் பத்திரிக்கை நண்பர்கள்.
தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் கடந்த ஆண்டு அறிக்கை கூட இதனை உறுதி செய்கிறது.

புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்
பொதுமக்களின் குறை நிவர்த்திக்கு அதிக அக்கரை செலுத்தும் இவரை தினமும்(ஞாயிறு நீங்களாக) மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை சந்திக்கலாம்.
சென்னையை விட புறநகர் பெரிய பகுதி, அதிலும் மக்கள் தொகை அதிகம் நிறைந்த ஏரியாக்கள் கொண்ட பகுதி இதில் இவ்வளவு சிறப்பாக பணியாற்றி வரும் ஆணையர் ஜாங்கிட்-க்கு ஒரு ராயல் சல்யூட்! புறநகர் வாசியா நீங்கள்.. காவல் நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை இல்லையா.. புறப்படுங்கள் சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட் -ஐ பார்ப்பதற்கு!
————–
Popularity: 12% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்
/*அந்த பெண்ணை அனுப்பி விட்டு, அவரை ஏன் அழைத்து வந்தீர்கள்.. உங்க பிரச்சனைக்கு நீங்க வந்தா போதும். சிபாரிசுக்கு யாரையும் அழைத்து வரவேண்டாம்*/
உண்மையிலேயே இவர் வித்தியாசமானவர்.. அறியப்பட வேண்டியவர்… பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா..
இதை தொடர்ந்தால் சந்தோசம்! நன்றி பகிர்ந்தமைக்கு
மனிதர் பற்றிய தகவலைப் பதிந்தமைக்கு நன்றி தல……..
காவல்துறையில் கடமை உணர்வுள்ள அதிகாரிகள் வரவு பெருகட்டும். அப்படியாவது வேண்டாத ‘சனியன்கள்’ ஒழியுமா பார்க்கலாம்.
அப்படியே சுகாதாரத் துறையிலும் நல்லவர்கள் வரணும். எங்கே பார்த்தாலும் அழுக்கும் குப்பையுமா ஒரே கலீஜா இருக்கு சிங்காரச்சென்னை:(
Nice post, thanks for sharing.
I have experienced one more good incident. One of a student from Madippakkam was trying for his passport., His police verification was delayed and he had to travel to UK to join his college higer course. He directly went to Commissioner’s office (in bat road) and met Mr.jankit. He arranged for immedaite police verification and also gave a letter to the passport office to speed up his passport.
எந்தப் பக்கம் இருககு ஆபிஸ்? ஆசார்கானா சமீபமா அல்லது பட் ரோடு பக்கமா?
இதைப் போல சில காவலர்கள் மட்டும் இருந்தால் போதும்… நாட்டில் எந்த தீவிரவாதமும் வளராது..
கந்தசாமி
இவரை போல் அரசும் செயல்பட்டால் எப்படி இருக்கும்?
ஜாக்கிட்டுக்கு ஒரு ராயல் சல்யூட்
மிக அருமையான பகிர்வு..
சிறந்த காவல் அதிகாரிக்கும் வணக்கம்
வாழ்த்துக்கள் என்று சொல்வதைவிட நன்றிகள் ஜாங்கிட் சார்.
இவரைப் போன்ற ஆட்களைப்பற்றிய செய்திகள் வெளியில் தெரிய வேண்டும்…அப்போதுதான் அந்த பயன் இன்னும் விரிவடையும்!!!
பகிர்வுக்கு நன்றி தல…
you are my role model jangid sir i will come like you after 4 years i wanna become as an ips officer like you and i will come i love you jangid sir1000 kisses to you