விடுபட்டவை 2ஜூலை 2008
கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி இருந்ததால்.. நான் மட்டும் நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினேன். பத்தடி தூரம் போனதும் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இனோவா வண்டி ஒன்று எதன்மீதோ மோதி, தடுமாறி ஓடத்தொடங்கியது. கடக் என்ற அந்த மோதல் சத்தம்.. இப்போதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வண்டி போன பின் சாலையைப் பார்த்தால்.. ஒரு நாய். அதன் மீது தான் இனோவா ஏறி இறங்கி ஓடியது. அந்த ஜீவனால் கத்தக்கூட முடியவில்லை. நானோ சாலையில் வலது புறத்தில் இருக்கிறேன். அந்த நாயோ இடது புறம் அடிபட்டு துடிக்கிறது. இந்த பக்கம் நானும் அந்த பக்கம் இன்னொரு நபரும் மட்டும் தான் நாயை பார்த்தபடி நின்றோம். நடந்தும், வாகனத்திலும் போவோர் எல்லோருக்கும் ஏதோவொரு அவசரகாரியமிருப்பது போன்று விரைந்து கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் துடிதுடித்து நாய் இறந்து போனது. சாலையில் கிடந்த அதன் உடலை ஓரமாக ஒதுக்கிப் போட்டால்.. நசுங்காமலாவது இருக்கும் என்று நான் நினைத்து.. சாலையை கடக்க முனைந்த போது.. அந்த பக்கம் இருந்த நபர்.., இறந்து போன நாயின் கால் பற்றி ஓரமாகப் போட்டு விட்டு தன் திசை நோக்கி நடக்கலானார். நானும் பேருந்து நிறுத்தம் போனேன். அதன் எதிரில்.. வனத்துறையினரால் ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. “மான்கள் உலாவும் பகுதி.. வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள்”
-OoO-
“எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்தது.. எது…” இப்படி துவங்கும் ஒரு வசனத்தை, குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் கண்ணன் கூற, அர்ஜுனன் கேட்பது மாதிரியான வரையப்பட்ட படத்தில் பார்த்து இருப்பீர்கள். நம்மில் பலரும் அது கீதையில் கண்ணன் கூறியது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு வாசகம் பகவத்கீதையில் எங்குமே காணக்கிடைக்க வில்லை.
இது குறித்து, பாஜக அமைப்பாளர் ஒருவரிடம் பேசியபோது அவர் சொன்ன தகவல் மிகவும் வியப்பானதாக இருந்தது. உண்மையில் இப்படி ஒரு வாசகம் கீதையில் இல்லை என்று ஒப்புக்கொண்டார். இதனை பரப்பிவிட்டவர்கள் கம்யூனிஸ்ட் காரர்கள் தான் என்றும் சொன்னார். எது எப்படியோ.. கீதையில் இல்லாத வாசகம்.. கிதையில் இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை ஏன் இவர் எதிர்த்து ஒரு வழக்கோ, ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை என்பதுதான் எனக்குள் எழும் கேள்வி.
-oOo-
என்னிடம் இருந்த K750i மொபைல் போனுக்கு வயசாகி விட்டது. போட்டோ எடுக்க முடியவில்லை. சில பல பட்டன்கள் செயல்படவில்லை. அதை எக்சேஞ்சில் மாற்றி விடவும் மனதில்லை. அது நான் நேசிக்கும் ஒருவரின் பரிசு. பேசாமல் அதை பத்திரப்படுத்தி விட்டேன். இன்னொரு நேசிப்பாளரின் உதவியால் கடனில் K790i என்ற சோனி மாடலை வாங்கி விட்டேன்.
சுமிக்ஷா மொபைலில் தான் வாங்கினேன். அவர்களின் வியாபரத்தனம் இப்போது தான் புரிந்தது. முழு பணத்தை கொடுத்து வாங்கினால்.. VAT போடாமல் பில் தருகிறார்கள். கிரிடிட்கார்ட் மூலம் வாங்கினால்.. வாட், கார்டுக்கு சர்விஸ் டாக்ஸ் 2% என்று தீட்டுகிறார்கள். இதை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது, சென்னைசில்க்ஸ் ஜுவல்லரி மாதிரியான பெரிய நகைக்கடைகளிலும் கூட இப்படித்தான் நடக்கிறது என்றார். அரசை ஏமாற்ற நம்மவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும். என்னமோ போங்க!
-OoO-
பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி. என்ன செய்தாலும் நிலைகொள்ள மறுக்கும் மனதை தேற்ற தெரியவில்லை. வலி எதிர் தரப்பிலும் இருக்கலாம். காலம் ரணங்களுக்கு மருந்திடும். மிச்சமிருக்கும் வடுக்களை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது.
அதுவரை.., கவிதை எழுதலாம்.. ஏதாவது படிக்கலாம்… இல்லை எனில் பேசாமல் தண்ணியடிச்சுட்டு படுத்துக்கிடலாம். எந்த வேலையும் ஓடாமல்.. மூளையை தின்றுகொண்டிருக்கிறது நினைவுகள். எதையும் வெளிப்படையாக சொல்லக்கூட முடிவதில்லை என்ற எண்ணமே பெரிய அசூயையை ஏற்படுத்துகிறது. மீண்டு வர முயற்சிக்க வேண்டும். ஒரு இடத்தில்.. கிடைக்காதது இன்னொரு இடத்தில் கிடைக்கும் போது பாழும் மனது ஆசுவாசப்படலாம். முன்பு எழுதிய அனுப்ப மறந்த கவிதைகளை திரும்பவும் படித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
-oOo-








______________
:-)))
______________
:-)))))
______________
//சுமிக்ஷா மொபைலில் தான் வாங்கினேன். அவர்களின் வியாபரத்தனம் இப்போது தான் புரிந்தது. முழு பணத்தை கொடுத்து வாங்கினால்.. VAT போடாமல் பில் தருகிறார்கள். கிரிடிட்கார்ட் மூலம் வாங்கினால்.. வாட், கார்டுக்கு சர்விஸ் டாக்ஸ் 2% என்று தீட்டுகிறார்கள். இதை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது, சென்னைசில்க்ஸ் ஜுவல்லரி மாதிரியான பெரிய நகைக்கடைகளிலும் கூட இப்படித்தான் நடக்கிறது என்றார். அரசை ஏமாற்ற நம்மவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும். என்னமோ போங்க!//
VAT போடாமல் பில் போடமுடியாது. அப்படி போட்டாலும் அது சட்டரீதியான பில்லாக இருக்க முடியாது.
சட்டரீதியான பில் இருந்தால்தான் நீங்கள் வாங்கிய பொருளில் குறை இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். பில் இல்லாவிட்டால் நுகர்வோருக்கான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே வணிகர்கள் ஏமாற்றுவது அரசை மட்டுமல்ல. நுகர்வோராகிய நம்மையும்தான்.
*********
//“மான்கள் உலாவும் பகுதி.. வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள்” //
உண்மையிலேயே அங்கு மான்கள் சில காலம் முன்புவரை உலாவின. உணவில்லாமல் குப்பையை மேய்ந்த மான்களை நான் பார்த்திருக்கிறேன்.
அவற்றில் சில பிளாஸ்டிக் பைகளைக்கூட தின்றிருக்கக்கூடும். அவற்றின் தற்போதைய நிலை என்னவோ தெரியவில்லை. இப்போது அப்பகுதியில் ஒரு மானைக்கூட பார்க்க முடியவில்லை.
சாலையில் அடிபட்ட நாய் - வருத்தமான செய்தி. ஒரு முறை பெங்களூர் ஹோசூர் சாலையில் இப்படித்தான் நான் சென்று கொண்டிருந்ததற்கு எதிர் திசையில் ஒரு நாய் நட்ட நடு சாலையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. என்ன இப்படி அமர்ந்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்தினேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, சென்ற வேலை முடிந்து திரும்புகையில், அதே இடத்தில் அந்த நாய் பிணமாகியிருந்தது. விலங்குகளுக்கு போக்குவரத்து விதிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாகன ஓட்டுனர்களையும் குறை கூறுவதா என்றுத் தெரியவில்லை. அவ்வப்போது முன்னே சென்று கொண்டிருக்கும் கார்களில் “I brake for animals” போன்ற ஒட்டிகளைப் பார்க்கும் போது ஆறுதலாக இருக்கும், ஒரு சிலராவது இருக்கிறார்களே, விலங்குகளின் மீது கரிசனம் காட்டுவதற்கு என்று.
கடைசி குறிப்பு பற்றி - விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள்.
நன்றாக எழுதுகிறீர்கள். அந்த நாயின் கதை பரிதாபம் எனினும் குற்றுயுரில் தப்பி அவதியுருவதைவிட இறப்பே பரவாயில்லை. ம்ம் நிராகரிப்பின் வலி கடினம்தான். ஆயினும் மனந்தளராது மீள்முயல்வதே ஒரே வழி.
அனுஜன்யா
:))))))
//இதனை பரப்பிவிட்டவர்கள் கம்யூனிஸ்ட் காரர்கள் தான்//
;)))
“இப்போதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது”
Balabharathi please check your ear in a good ENT Doctor
:-))))))))))))
puduvai siva
//நம்மில் பலரும் அது கீதையில் கண்ணன் கூறியது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.// இது கீதையில் சொல்லப் பட்டது அல்ல. இது கீதாச்சாரம் என்று சொல்லப் படுவது. அதாவது பகவத் கீதையின் சாரம்.
//இதனை பரப்பிவிட்டவர்கள் கம்யூனிஸ்ட் காரர்கள் தான் என்றும் சொன்னார்// அவர் ஏதோ காமெடி செய்திருக்கிறார்.
//அந்த பக்கம் இருந்த நபர்.., இறந்து போன நாயின் கால் பற்றி ஓரமாகப் போட்டு விட்டு தன் திசை நோக்கி நடக்கலானார்//
ஆச்சர்யம் தான். இப்படி கூட செய்கிறார்களா..
//நம்மில் பலரும் அது கீதையில் கண்ணன் கூறியது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்//
ஆமாம்..நானும் தான்..
//அப்படி ஒரு வாசகம் பகவத்கீதையில் எங்குமே காணக்கிடைக்க வில்லை.//
நம்ப முடியலையே ..
//பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி//
உணர்ந்தவர்கள் மட்டுமே அறிவார்கள்….
//VAT போடாமல் பில் போடமுடியாது. அப்படி போட்டாலும் அது சட்டரீதியான பில்லாக இருக்க முடியாது.
சட்டரீதியான பில் இருந்தால்தான் நீங்கள் வாங்கிய பொருளில் குறை இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். பில் இல்லாவிட்டால் நுகர்வோருக்கான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே வணிகர்கள் ஏமாற்றுவது அரசை மட்டுமல்ல. நுகர்வோராகிய நம்மையும்தான்
//
உண்மை தான் தல… அதனால தான் நாம வாட் கட்டி வாங்கினேன்.
//அப்படி ஒரு வாசகம் பகவத்கீதையில் எங்குமே காணக்கிடைக்க வில்லை.// நிசமாவா..
//உண்மையில் இப்படி ஒரு வாசகம் கீதையில் இல்லை என்று ஒப்புக்கொண்டார். இதனை பரப்பிவிட்டவர்கள் கம்யூனிஸ்ட் காரர்கள் தான் என்றும் சொன்னார்.//
அவ்ளோ நல்லவங்களா அவுங்க..
vaNakkam, naNba…
ungkaLudaiya ninaivukaLai dhinru konRirukkum, anuppa maraintha varikaLai vaasidhdhu paardhen… dholvi enRa onRu varumpodhu adhu ellorukkum appadiyaakadhdhaan irukkiRadhu.. irunthu varukiRadhu.. autograph padadhdhil oru vasanam varum… ellaa vidhamaana dholvikaLukkum oru marunthu uNdu.. kaalam kadakka kadakka ellaamume maarividum.. enakku antha vasanam muzumaiyaaka ninaivil illai enRalum adhan saaraamsam idhudhaan…
nalla vaardhdhaikaLai pirayokam seydhirukkiReerkaL…
ungkaLudaiya ‘vidupaddavai edhdhanaiyo murai vaasidhdhu irunthaalum mudhan mudhalaaka ennudaiya karudhdhukkaLaiyum padhivu seyya veNdum enRa unthudhalai eRpadudhdhiyadhu … nanri… inimel dhodaruven…
(http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm தளம் மூலம் தமிழ் படுத்தி இருக்கிறேன்;
வணக்கம், நண்பா…
உங்களுடைய நினைவுகளை தின்று கொன்றிருக்கும் அனுப்ப முடிந்த வரிகளை வாசித்து பார்தேன்… தோல்வி என்ற ஒன்று வரும் பொது அது எல்லோருக்கும் அப்படியாகத்தான் இருக்கிறது.. இருந்து வருகிறது..
நல்ல வார்த்தைகளை பிரயோகம் செய்திருக்கிறீர்கள்…
உங்களுடைய ‘விடுபட்டவை’களை எத்தனையோ முறை வாசித்து இருந்தாலும் முதன் முதலாக என்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலை எற்படுத்தியது … நன்றி… இனிமேல் தொடருவேன்.. )
\பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி. என்ன செய்தாலும் நிலைகொள்ள மறுக்கும் மனதை தேற்ற தெரியவில்லை. வலி எதிர் தரப்பிலும் இருக்கலாம். காலம் ரணங்களுக்கு மருந்திடும். மிச்சமிருக்கும் வடுக்களை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது.\
என் மனதை பிரதிபலிக்கும் வரிகள், நெகிழ்ந்தேன்:(
பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி//
எதற்கும் எனது பத்துக்கட்டளைகளில் பத்தாவதைப் பாருங்கள்/a> காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கும்…
//\பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி. என்ன செய்தாலும் நிலைகொள்ள மறுக்கும் மனதை தேற்ற தெரியவில்லை. வலி எதிர் தரப்பிலும் இருக்கலாம். காலம் ரணங்களுக்கு மருந்திடும். மிச்சமிருக்கும் வடுக்களை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது.\
என் மனதை பிரதிபலிக்கும் வரிகள், நெகிழ்ந்தேன்:(//
என்னாச்சி பாலா?
//பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி.//
கல்யாணராமன் அழகாய்ச் சொல்லுவார்..
அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி
என்று.
வலி எதுவாயினும் மீண்டு(ம்) வாருங்கள்.
ஒவ்வொரு வலியிலும், புதிய நட்போ- புதிய அனுபவமோ-புதிய எதிரியோ-புதிய உந்துதலோ கிடைக்கக் கூடும். அவை உங்களுக்கு பலம் தரும். பல வேளைகளில் ஆறுதல் சொல்ல ஆளிருக்கும்போது, அழுவது கூட சுகம்தான்.
ஒரு வீயட்நாம் பாடலின் வரிகள்..
I do my thing and
You do your thing
I am not in the world to
live up to your expectations
And you are not in the world
to live up to mine.
You are You
I am I
And If by chance we
find each other
IT IS BEAUTIFUL!!
காதல், நட்பு என்று பலப்பொழுதும் நான் நிராகரிக்கப்படும்போது இதை நினைத்துக் கொள்வேன்.. நாளை என்னுடைய பதிவில் போட நினைத்திருந்தேன்.. உங்களுக்காக இங்கே.. இப்போதே..
மனசு என்னமோ பண்ணுது பாலா… உங்க கடைசி பாரவைப் படித்து!
//பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி. என்ன செய்தாலும் நிலைகொள்ள மறுக்கும் மனதை தேற்ற தெரியவில்லை. //
தங்கள் மனதை ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருப்பதை எனது திண்ணைப் பதிவின் பின்னூட்டத்திலும் உணர்ந்தேன்.
//காலம் ரணங்களுக்கு மருந்திடும்.//
//மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.//
அந்த முயற்சியில் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.
என்னை பொறுத்தவரை நிராகரிப்பு பெரிய தண்டனை. நிராகரித்தவரால் கொடுக்கப்பட்டது. அந்த தண்டனை காலத்தை முடிவு செய்ய வேண்டியது நிராகரிக்கப்பட்டவர் மட்டும்தான். இத்துடன் உலகம் முடிந்துவிடவில்லை இனிமேல்தான் நாம் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்ற கோனத்தில் நிராகரிப்பை அனுகினால், விரைவில் தண்டனையை முடித்துக்கொள்ள முடியும்.
சில பல வருடங்களுக்கு முன் நான் பாதிக்கப்பட்டு விரைவில் மீண்டு வந்தவன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன். மத்தபடி தண்ணி போடுவது எல்லாம் சுத்த பேத்தல்.
நட்புடன்
நித்தில்
//எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது……//
கீதையிலிருந்து சுட்ட வரிகள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வரிகளுக்காக
கீதையையே சுட்டிருக்கிறார்கள் என்பது இப்போதல்லவா தெரிகிறது.
பாலபாரதி!
என்னோட திண்ணையையும் உங்கள் திண்னை பதிவில்
இணைத்துக்கொள்ளவும்.
http://9-west.blogspot.com/2008/07/blog-post_11.html
சுட்டி கொடுத்திருக்கிறேன். நன்றி!!