அண்ணன் சுரதா யாழ்வாணன் கவனத்திற்கு..
மிகவும் சிரமமான முறை என்றாலும் கைக்கு ஒன்றாய் ஒற்றை விரல் வைத்து தட்டச்சு செய்து வந்தவன் நான். இப்போது பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறையால்.. எட்டு விரல்களைக்கொண்டு தட்டச்சு செய்து வருகிறேன். அந்த வகையில் இந்த தட்டச்சு முறைக்கு ஒரு ஓ போட்டுக்கிறேன்.
மிகவும் சிரமப்பட்டு தமிழ்99 க்கு மாறிய பின் சிப்ட் பொத்தான் அமுக்கும் தொல்லைகள் இன்றி தட்டச்சு இலகுவாய் இருந்தது. (அதுக்கு வெறும் ஓ தான், தமிழ்99 க்குத்தான் என் ஓட்டு.)
ஆனால், நான் புதிதாக பணிக்கு அமர்ந்த இடத்தில் பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறை மட்டும் தான் இருந்தது. அதையும் கற்றுத்தேறியாச்சு. அண்ணன் சுரதா யாழ்வாணன் யேர்மணியில் இருந்து தொலைபேசி என் தட்டச்சு சிரமம் குறித்து விசாரித்த பாவத்திற்காக… அவரிடமே என் கோரிக்கையை வைக்கிறேன். இப்பம் நான் தட்டச்சு செய்து வரும் முறை பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறை. இதனை முரசு அஞ்சல் மட்டும் கொடுத்திருக்கிறது.
தங்களின் ஆன் லைன் தட்டச்சு செயலியில் பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறையையும் சேர்க்க முடிந்தால் நலம். பாமினி முறை என்பது புதிய டைப்ரேட்டர் தட்டச்சு முறை. அதாவது, ஒரு எழுத்தை தட்டச்சு செய்த பின் புள்ளி வைப்பது. பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறையில் முதலில் புள்ளியை தட்டச்சு செய்த பின் எழுத்தை அடிக்க வேண்டும். இங்கே தமிழகத்தில் பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறையை கற்றுக்கொண்டு, அதையே அலுவலகத்திலும், வீடுகளிலும் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். நிறைய தட்டச்சு பயிற்சி மையங்களில் கூட இன்னும் பழைய
டைப்ரேட்டர் தட்டச்சு முறை தான் போதிக்கப் படுகிறதாம்,அதனால் கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு, ஜாஃப்னா லைப்ரேரியில் பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுக்கவே இந்த பதிவு.








அண்ணாத்தே தொல்லை தாங்க முடியலியே
இதையும் மொக்கைப் பதிவென்றே தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுக் கொள்ளும்!
பழைய தமிழ் முறை என பாமினியையும் புதிய ரைப்ரைட்டர்முறை என தினகரன் அமுதம் முறையும்தான் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் புதிய புரளியொன்றைக் கிளப்பியுள்ளீர்கள்:)
கீபோர்ட் தட்டச்சு செய்யும் முறையை எனக்கு அனுப்பினால் முயல்கிறேன்.
சில விடயங்களை தனிப்பட்ட முறையில் அஞ்சலில் அனுப்பலாம்தான் .எனினும் வேறு யாரும் கருத்து சொல்ல இதுபோல பதிவுகள் உதவும்.
Guys,
I second Bala Bharathy. I’m also still using Old Typewriter Model. Let us hope Suratha & Mugunth will bring a solution.
Thanks Bala
anbudan, Ramki
பாலபாரதி,
ஆகா! அருமையான பதிவு! :-))
அவ்வ்வ்வ்வ்வ்வ்….
அன்பின் பாலபாரதி,
கடந்த வாரம் கோவையில் திரு.முகுந்த்தை சந்தித்த போதும் இகலப்பையில் பழைய,புதிய தட்டச்சு முறையை இணைக்க சொல்லி மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தில் பல்லாயிரம் பேர் வருடம் தோறும் தமிழ் தட்டச்சு முறையை கற்று தேர்வு எழுதி வருகின்றனர். அவ்வளவு பயிற்சி எடுக்கப் பட்டுள்ள ஒரு முறையை முற்றிலும் புறக்கணிக்க இயலாது. தமிழகத்தில் DTP மையங்களில் இகலப்பை மற்றும் யுனிகோடு அறிமுகம் செய்ய முயன்ற போது இந்த பிரச்சினையை அதிகம் சந்திக்க வேண்டி வருகிறது.
குறள் செயலி இது வரை இரு தட்டச்சு முறையினையும் கொடுத்து வந்தது. சமீபத்தில் அதுவும் விற்பனைக்கு என்று விலை சொல்லி விட்டார்கள். அனேகமாக விரைவில் இகலப்பை போன்ற இலவச செயலிகளிலும் இந்த முறை இணைக்க படக்கூடும்.
நன்றி.
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
பார்த்துங்க..
பல விதங்களில் தட்டச்சு செய்து கை/விரல் சுளுக்கிக்க போவுது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்…
ஒரு சின்ன பின்னூட்டக் கயமைத்தனம்!
எப்படி இப்படி மாத்தி மாத்தி அடிச்சும் தெளிவா இருக்கீங்க..உங்க அலுவலகத்தில எ-கலப்பை நிறுவ முடியாதா? இல்லை, ஒருங்குறி இல்லாம வேறு குறிமுறை பயன்பாட்டில் இருக்கிறதா? விவரம் தெரிந்த நீங்களாவது உங்கள் அலுவகத்தைச் சரியான முறைக்கு மாற்றப் பார்க்கலாமே?
பாலா,
தமிழ் விசை நீட்சியில் பழைய/புதிய தட்டச்சு முறைகள் இருக்கின்றன எனினும் நீங்கள் தொலைபேசியில் சொன்ன (கொம்புக்கு பின் மெய் தட்டச்சும் போது இட/வலம் மாறி தோன்றும்) வழு இருக்கிறது. அடுத்த வெளியீட்டில் சரி செய்துவிடுகிறேன்.
பழைய தட்டச்சு முறையில் எந்தெந்த உயிரொலியை மெய்க்கு முன்பாகவே தட்டச்சிடுகிறார்கள் என்பது பற்றி தெளிவாக எனக்கு ஒரு மின்மடல் அனுப்புங்கள்.
//விவரம் தெரிந்த நீங்களாவது உங்கள் அலுவலகத்தைச் சரியான முறைக்கு மாற்றப் பார்க்கலாமே?//
சபாஷ்.. சூப்பர், நல்ல, அருமையான, தெளிவான யோசனை..
தம்பி பாலபாரதி இம்முயற்சியில் பெரும் வெற்றி பெற்று, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைப்பார் என்று கட்டியம் கூறுகிறேன்..
(யார், யாரோ பின்னூட்டக் கயமைத்தனம் செய்யும்போது நான் செய்றதுக்கென்ன?)
S.Saravanan அவர்களே!
பின்னூட்ட கயமை மட்டுமா? வேறென்ன கயமையெல்லாம் செஞ்சீங்கன்னு எங்களுக்கு தானே தெரியும்?
ரவிசங்கர்:விவரம் தெரிந்த நீங்களாவது……..
அடப்பாவமே! ரவிசங்கர் இவ்வளவு நல்லவருங்களா?
அதான் போன் பண்ணார்ல.. அதுலயே சொல்லிருக்கலாம்ல?! இத்தனை பெரிய பதிவு,.. அதுவும் எனக்குப் பாதி புரியவே இல்ல!
ஆமாம், போன்லயாவது சுரதான்னு பேரைச் சொல்லி பேசினாரா? இல்லை அங்கயும் அகிலனின் நண்பர்னு ப்ராக்ஸி தானா?
//கோபி
பழைய தட்டச்சு முறையில் எந்தெந்த உயிரொலியை மெய்க்கு முன்பாகவே தட்டச்சிடுகிறார்கள் என்பது பற்றி தெளிவாக எனக்கு ஒரு மின்மடல் அனுப்புங்கள்.//
எனக்கும் அதை அனுப்புங்கள்.இணையத்தில் எந்தமுறையில் முதல் குற்றை போட்டுவிட்டு பின்னர் க அல்லது த அடிக்கிறார்கள் த்தன்னா அல்லது க்கன்னாவிற்கு பதிலாக ??
என கண்டுபிடிக்கமுடியவில்லை.முடிந்தால் இல்லை யாராவது தெரிந்தால் கீபோர்ட் லேயவுட் காண்பிக்கவும்.
//பொன்ஸ்
இல்லை அங்கயும் அகிலனின் நண்பர்னு ப்ராக்ஸி தானா? //