நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும் தேதியும் உறுதி செய்யப்பட்டபின் இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

முன்பே விஷயம் தெரிந்தும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களாக அறிவிக்கும் வரை ரகசியம் காத்த நண்பர்களுக்கு நன்றி. ஜிடாக்,மெயில், போன் என முடிந்த வகையிலெல்லாம் செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. :)  

எங்களின் உறுதிக்கு உரமளித்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.


எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Popularity: 11% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

109 Comments to “ஒரு முக்கிய அறிவிப்பு”

  1. TBCD says:

    இந்த வாழனும் என்கிற ஆசை வந்துச்சுன்னு சொல்லும் போதே லேசா யோசிச்சேன்… :P

    உளம் கனிந்த தி(இ)ரு மண(ன) நாள் வாழ்த்துக்கள்….(உண்மையாக இருந்தாலும்…பொய்யாக இருந்தாலும்…)

  2. அண்ணனுக்கும், அண்ணிக்கும் எனது வாழ்த்துகள்! :)

    என் கிட்டே கூட கல்யாணம் ஆனதை சொல்லவேயில்லை என்பது தான் வருத்தம் :(

  3. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலா & லக்ஷ்மி…

    //கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.//

    அது வெறும் சடங்கல்ல என்பது உங்களுக்கு வெகு விரைவில் புரியும் பாலா :)

    அட்வான்ஸ் 25ம் ஆண்டு மணநாள், 50ம் ஆண்டு மணநாள், நூறாம் ஆண்டு மணநாளிற்கான வாழ்த்துக்கள்.. ஹையா.. மீ த பஷ்டூ..

  4. surveysan says:

    பெஸ்ட் விஷ்ஷஸ்!

  5. வாழ்த்துகள் தலை….

    மற்றவை தொலைபேசியில் :-)

  6. pari says:

    Mr.Bala kirsh iyyar val,
    vazuthugal.
    Best of ur future.

  7. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஆசிப் அண்ணாச்சி, பாகச வ கலைச்சுட்டு பாகுச ஆரம்பிச்சுரலாம். தலயோட மனைவியும் பதிவர் தானே. ஒரு பிரச்சனையும் இல்ல. ஸ்டார்ட் ம்யூஜிக்…

  8. உங்களுக்கும் சகோதரிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்…!

  9. leosuresh says:

    இருவருக்கும் வாழ்த்துக்கள்…தல..
    செப்டம்பர் நான்காம் தேதிக்குப் பிறகு சந்திக்கலாமா?
    லியோ சுரேஷ்
    துபாய்

  10. தல , உங்களை திருமண கோலத்தில பார்க்க இந்த சின்ன பசங்க(ஆசிப் உட்பட) ஆசைபடுறோம். ஒரு போட்டோ போடுங்களேன் பாய்!!

  11. இனிய இனிய மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்த்துக்கள்

  12. சந்தோஷமான செய்தி.. வாழ்த்துக்கள் பால பாரதி.

  13. ங்கொய்யால…………….இந்த ரகசியத்தை என் கிட்ட முதல்லயே சொல்லியிருந்தா இந் நேரம் தூள் கிளப்பியிருப்பேனே!

    வாழ்த்துக்கள் தல! லெஷ்மிக்கும் வாழ்த்துக்கள்!!!!

  14. மனமார்ந்த வாழ்த்துகள்

  15. அடடா! அடடா!!! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! :)

    இதயம் கனிந்த திருமண வாழ்த்துகள்!!!

  16. வாழ்த்துக்கள்

  17. சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே

  18. வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி

  19. தூயா says:

    என் வாழ்த்து மறுபடியும் பாலாண்ணா..
    ரகசியம் காத்ததற்காக நான் வரும் போது தேனீர் விருந்து வைக்காமல் குளிர்களி விருந்து வைப்பீர்கள் என நம்புகின்றேன்..

  20. காசி says:

    //வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி//

    :ditto:

    :-)

  21. S. Ramanathan says:

    வாழ்த்துக்கள்

  22. முதல் முறையா உங்க பதிவுக்குள்ள நுழையறேன். சந்தோஷமான
    செய்தி…. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. :)
    தோழி லக்ஷ்மிக்கும் வாழ்த்துக்கள்.

  23. தாமோதர் சந்துரு says:

    வாழ்த்துக்கள் தல. மணமக்கள் நீடூலி வாழ்க.

    //செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது என முடிவு செய்திருக்கிறோம்.\\

    தேநீர் விருந்துக்கு அவசியம் வந்துவிடுவேன்.

  24. தலைவனுக்கும், தலைவிக்கும் வாழ்த்துகள்.

  25. வாழ்த்துக்கள் பாலா………..முதன் முறை பார்க்கும் போதே பட்சி சொல்லுச்சு………..

    :‍-))))))))

  26. தாமிரா says:

    இருவருமே பதிவர்கள் என்பதால் ஒருவர் மனதில் ஒருவரைப் பதிந்து, சில பின்னூட்டங்களைப்பெற்று (ரெண்டு போதும்) சிறப்புற வாழ வாழ்த்துகள்.!

  27. Rex says:

    ada paavame, andha ponnukku vera nalla maaple kedaikkalaiyaa?!?

    just kidding! All the best Bala & Lakshmi, wish you a happy married life!

    P.S: Lakshmi seems to be an avid reader, wow!

  28. dharumi says:

    ஹே! இங்க பாருப்பா … ரொம்ப சந்தோஷமய்யா ..

    இருவருக்கும் இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

  29. பாலராஜன்கீதா says:

    பாலபாரதி மலர்வனம் லக்ஷ்மி இருவருக்கும் வாழ்த்துகள். தாங்கள் இருவரும் எங்கள் இல்லத்திற்கு வர இங்கே அழைக்கிறேன்.

  30. வாழ்த்துக்கள் பாலா. ஹூம் கடைசில நீங்களும் சிக்கிட்டீங்களா?

  31. வாழ்த்துக்கள் பாலா.ஹூம் கடைசில நீங்களும் சிக்கிட்டிங்க போல?

  32. வாழ்த்துக்கள்!

    எல்லா வளமும் பெற்று நலமோடு… வாழ்க பல்லாண்டு!!

  33. அன்பின் தோழருக்கு,

    நீங்களும் உங்கள் மனைவியும் பல்லான்டு வாரிசுகள் பல பெற்று நலம் வாழ வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    முகவைத்தமிழன்

    (மறுபடிக்கும் முகவை பிரச்சினையை கௌப்ப வேண்டாம்)

  34. Suriya says:

    Vaazhthukkal thiru matrum thriumathi balabharathi

  35. King... says:

    வாழ்த்துக்கள் தல…:)

  36. வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி!

  37. pedharayudu says:

    வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி.

  38. Ramesh says:

    Wishing you a very happy married life!

  39. பாலா.

    வாழ்த்துக்கள்.

  40. என் இதயம் கனிந்த திருமண வாழ்த்துகள்

  41. உறவிலும் தோழமை காக்க வாழ்த்துகள்!

  42. கென் says:

    விடுபட்டவை – மலர்வனமாச்சு

    என்று எல்லாருக்கும் க்ளூ கொடுத்த நல்லவன் நாந்தான் நாந்தான்

    ஒரு சதுரங்கக் குதிரை தப்பிச்சிடுச்சி :)

    பாக்கலாம்

    வாழ்த்துகள் மாம்ஸ் :)

  43. வாழ்த்துக்கள் தல :)

  44. வாழ்த்துக்கள், நண்பர்களே!

    அன்புடன்
    நடராஜன்.

  45. Nithiyanantham says:

    என் இதயம் கனிந்த திருமண வாழ்த்துகள்

  46. வெற்றி says:

    பாலபாரதி & இலட்சுமி
    இருவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  47. பாலா,

    அன்றைக்கு தொலைபேசிய போது இந்தப் பதிவை கண்டிருக்கவில்லை. மன்னிக்க வேண்டும்.

    இனிய மண வாழ்க்கைக்கு எங்களது உளமார்ந்து வாழ்த்துக்கள்!!

    அன்புடன்,
    செல்லமுத்து குப்புசாமி

  48. அண்ணா திருமணவாழ்த்துக்கள்..அண்ணிக்கும்

  49. நூறு நூ்று நூறு

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over a year and a half old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.