Apr 21
கருணாநிதிக்கு ஓர் கவிதை
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே…!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே – இனி
எப்போதும் மறவாது தமிழினம் – உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! – எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! – உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று – இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! – இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!
தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் – இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
http://www.youtube.com/watch?v=KTakS5ChnSY
————–
பலரும் பார்த்திருக்கக்கூடும். இன்று தான் மின்னஞ்சலில் வந்தது. பதிவாக பலரின் பார்வைக்கும் வைத்திருக்கிறேன்.
Popularity: 1% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்
இதனை கருணாநிதியின் அடிவருடும் பதிவர்களுக்கும் அனுப்புங்கள்.
எங்கள் தம்பிரான் தோழர், சி.கபிலன் ஐயா எழுதிய “கலைஞர் ஒரு கொலைஞர்” என்ற இந்தக் கவிதையை பதிப்பித்ததற்கு மிக்க நன்றி. சி.கபிலன் ஐயாவின் பெயரையாவது நீங்கள் குறிப்பிட்டுருக்கலாம்.
இத்தோடு கலைஞரின் கதை முடிந்தது, இனி எங்கள் தங்கத்தாரகை தரணித் தமிழற் காக்கும் தன்னிகரில்லாப் புரட்சித் தலைவியின் ஆட்சி மலர்ந்து தமிழற்கெல்லாம் சாதனை வரலாறு படைக்கப் போகிறார். அணணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க.
//இனி எங்கள் தங்கத்தாரகை தரணித் தமிழற் காக்கும் தன்னிகரில்லாப் புரட்சித் தலைவியின் ஆட்சி மலர்ந்து தமிழற்கெல்லாம் சாதனை வரலாறு படைக்கப் போகிறார். //
அப்படினு சொன்னாங்களா??
இதைவிட மோசமா ஒரு மயிரும் நடக்க முடியாது இனிமேல்.. அதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்னு தான்..
என்னமோ இவங்க ஆட்சில எல்லாம் நடந்து கிழிஞ்ச மாதிரி ஒரு பீலா…
கொலைஞர் கும்பலை தோற்கடிக்க வேண்டியது அவர்கள் செய்து கொண்டிருக்கும் பச்சோந்தி அயோக்கிய அரசியலுக்காக.. அவ்வளவே…
ஆனா இதுக்கெல்லாம் ஒரு மாற்று இல்லையே. அதுதானே இங்கே பிரச்சினை.
தல.. உங்க அட்வைஸ்படி பதிவெழுத ஆரம்பிச்சாச்சு…. வழிநடத்தவும்..
http://broadwaypaiyan.blogspot.com
படிக்கும் போது மயிர்க்கால்கள் சிலிர்க்கும் நல்ல கவிதை!
ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி நல்ல கவிதைபடிச்சு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது என் நன்பன் எழுதிய ஒரு
கவிதையை நினைவு படுத்தியது பதிவுக்கு நன்றி