தீடீரென ஒரு பதிவரிடமிருந்து போன் வந்தது,
“தல.. எப்ப வெள்ளைக்காரன மாறினீங்க..?”
‘என்னங்க சொல்லூறீங்க?’
”மதம் மாறுவாங்கன்னு தெரியும்.. நீங்க ஒரு படத்துல விவேக்கு மலையாளியா மாறின மாதிரி.. வெள்ளைக்காரன மாறீட்டீங்களோன்னு சந்தேகமா இருக்கு?”
‘ஏதாவது புரியுற மாதிரி பேசுங்க தல.., என்னத்துக்கு இப்படி ஓட்டுறீங்க?’ என்றேன் கொஞ்சம் கடுப்புடன்.
”ஒங்க வலைப்பக்கம் போய் பார்த்தா.. ஏதேதோ எழுதி இருக்கு.. போட்டோவெல்லாம் போட்டு இருக்கு.. விசயம் என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் போன் போட்டேன்.”
சும்ம கலாய்க்கிறதுக்காக பேசுகிறார் என்று விட்டு விட்டேன். ஆதான் பலரிடமிருந்து போன் வரவே..
எனக்கு பகீரென்றது. லக்கியை போனில் பிடித்து விபரத்தை கூறினேன். யூசர் அடி, பாஸ்வேர்ட் விபரங்கள் கொடுத்தும் வலைப்பக்கத்தை திறக்க முடியவில்லை என்றார்.
சம்பவத்துக்கு முதல் நாள்தான் http://periyar.balabharathi.net/ என்ற டொமைன் ஏற்படுத்தி அதை ப்ளாகருக்கு மாற்றிவிடும் வேலையை ஒரு நண்பர் உதவியுடன் செய்து கொண்டிருந்தேன். அந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, balabharathi.net, blog.balabharathi.net ஆகிய பெயரில் இருந்த தளங்களை ஏதோ ஸ்பேனிஷ்காரனோ ப்ரெஞ்சுக் காரனோ அமுக்கி வச்சுகிட்டான் போலன்னு நினைச்சுகிட்டேன். நாம்தான் கணிணி கைநாட்டு ஆச்சே? இதை விட பயங்கரமவா யோசிச்சுற முடியும்?
சர்வரில் ஏதாவது கோளாறு இருக்கலாம் என்று மேலே உதவிய அந்த நண்பர் சொல்ல, அண்ணன் முகுந்த் அவர்களை பிராண்டி எடுத்ததின் பயனாக தளம் மீண்டும் கிடைத்தது. நிறைய டெக்னிக்கல் வார்த்தைகளைத் தூவி இது ஓர் உள்நாட்டுக் குழப்பம் என்றும், எந்த ப்ரெஞ்சு/ஸ்பேனிஷ்க் காரனுக்கும் இதில் தொடர்பில்லை என்றும் தெளிவு படுத்தினார்கள். நேற்று இரவே தவறுகள் களையப் பட்டு 24 மணி நேரத்தில் தளம் மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்றார் அண்ணன் முகுந்த். அவருக்கு என் நன்றிகள். அந்த சகலகலா வல்ல நண்பருக்கும் நன்றியோ நன்றி.
இப்போதைக்கு சுபம்!!!
ப்பு:- தொலைபேசியில் தொடர்ச்சியாக வலைநலம் விசாரித்த நண்பர்களுக்கு என்றும் நன்றி. இந்த சமயத்தில் என்னை யாரும் மறந்துவிடக் கூடாது என்ற கொலைவெறியுடன் பாகசவைத் தட்டியெழுப்பும் சிபிக்கு எனது கண்டனங்கள். (கெட்ட வார்த்தை பயன்படுத்தினா தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தால் ப்பு மட்டுமே போடப் பட்டுள்ளது, _ விடுபட்டுள்ளது.
)
Popularity: 2% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பொன்ஸ்
(கெட்ட வார்த்தை பயன்படுத்தினா தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தால் ப்பு மட்டுமே போடப் பட்டுள்ளது, _ விடுபட்டுள்ளது. )
ஹி ஹி ஹி
//கெட்ட வார்த்தை பயன்படுத்தினா தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்கிற…..//
இதற்கெல்லாம் பயப்படுகிற ஆசாமியில்லையே நீங்கள் !, உண்மையில் இது உங்கள் பதிவுதானா…ஹி….ஹி….
அப்ப அந்த “ஆப்பரேஷன் பாலபாரதி” பதிவை வெளியிட வேணாமா
//இந்த சமயத்தில் என்னை யாரும் மறந்துவிடக் கூடாது என்ற கொலைவெறியுடன் பாகசவைத் தட்டியெழுப்பும் சிபிக்கு எனது கண்டனங்கள்.//
பாகச அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் தலயின் கருத்தை கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்
சரிங்க தலை,
இந்த தபா தப்பிச்சுட்டிங்க, அடுத்ததடவ மொத்தமா தூக்குறோம் இருங்க.
பாகச கொலைவெறிப்படை,
சிங்கை கிளை.
//(கெட்ட வார்த்தை பயன்படுத்தினா தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தால் ப்பு மட்டுமே போடப் பட்டுள்ளது, _ விடுபட்டுள்ளது.
)//
நம்ம எல்லா பின்நவீனத்துவ வியதி உள்ளங்க, நமக்கு என்ன தல கெட்ட வார்த்தை, நல்ல வார்த்தை எடுத்து நாளைவீச வேண்டியது தானே!! எங்களுக்கும் ஏதாவது மேட்டர் கிடைக்கு பா.க.சவுக்கு புது பதிவா போட… மீள்பதிவு படிச்சு படிச்சு போர் அடிச்சு போச்சு தல…
//balabharathi.net, blog.balabharathi.net ஆகிய பெயரில் இருந்த தளங்களை ஏதோ ஸ்பேனிஷ்காரனோ ப்ரெஞ்சுக் காரனோ அமுக்கி வச்சுகிட்டான் போலன்னு நினைச்சுகிட்டேன். நாம்தான் கணிணி கைநாட்டு ஆச்சே? இதை விட பயங்கரமவா யோசிச்சுற முடியும்? //
நன்றி,நன்றி ன்னு தலைப்பிற்கு பதில் அயல்நாட்டு சதி ன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம்.
என்ன பண்ணீங்க தல? நம்ம பூக்கிரி கூட கண்ணாலத்துக்குப் போய் வந்து பார்த்தா காணாம பூடுச்சு!
avan vaazga!