January 18th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

ருக்கின்ற பணிச்சுழலில் வலைப்பக்கமே வர முடியாமல் போய்க்கொண்டிருக்கிறேன். பின் எப்படி தொடர்ந்து எழுதுவதாம்.. தொடரப்பட்ட பெரியாரே காத்துக்கொண்டிருக்கிறார். அவரை காசியில் இன்னும் கஷ்டப்பட வைத்திருக்கிறேன். விரைவில் அவரை தென்னகம் கொண்டு வரவேண்டிய வேலையும் இருக்கிறது. அதுகுறித்து அவ்வப்போது யோசனை செய்தபடி இருந்த போதுதான்..

பேராசிரியர் தருமி எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கு முதலில் நன்றிகள். நான் எழுதியவற்றியில் பிடித்தவைகளை மட்டும் பட்டியலிடச்சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் குறைவாக கொடுத்திருக்கும் போது நான் மட்டும் எப்படி அடுக்கிக்கொண்டே போக முடியும் என்பதால்.. நானும் 5 பதிவுகளை மட்டும் இங்கு வைக்கிறேன். பொதுவாக பிடித்தவைகளைத்தான் எழுதுகிறோம் என்றாலும்.. எனக்கும் மற்றவர்களுக்கும் பிடித்த(மற்றவர்கள் சொல்ல அறிந்த..) பதிவுகள் இவை.

லிவிங் ஸ்மைல் “வித்யா” வலை உலகிற்கு வந்த புதிது. அவரது அதிரடியான சொற்களும், அவரது கோபமும் மற்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியாத சமயமது. ஸ்மைலியின் எழுத்தின் மீது கோபம் கொண்ட இரு பதிவர்கள் அவரின் இடுகை ஒன்றினை குறித்து ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களின் (அப்போது அவர்களிருவரும் எனக்கு நட்பாகவில்லை) இடுகையை நையாண்டி செய்து, சென்னைபட்டின நண்பர்களுடன் இணைந்து ஆடிய அனானி ஆட்டம் இன்றும் மறக்க முடியாதது. இதில் சம்பந்தப்பட்டவர்களும் கலந்துகொண்டு கும்மி அடித்தார்கள் என்பது பிறகு தான் தெரிந்தது. இது தான் நான் ஆடிய முதல் அனானி ஆட்டம்.

http://balabharathi.blogspot.com/2006/08/blog-post_18.html 

சாகரன் ஆரம்பித்த சுடர் விளையாட்டில் என்னை இழுத்து வந்து நடுவில் நிற்கவைத்தார் பலூன் மாமா. அந்த சுடர்.. என் குட்டி சுயபுராணம்.

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_3859.html

நீண்டகால சந்தேகங்களை கேள்விகளாக வைத்த இந்த பதிவு இன்னும் சரியான விடைகளை தேடியபடி இருக்கிறது. பலருக்கு என் மீது அதீக கோபம் கொள்ளச்செய்த பதிவு இது. http://balabharathi.blogspot.com/2007/02/faq.html

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்ற என் கனவை நினைவாக்க..  எழுதத்தொடங்கிய பெரியாரின் வாழ்க்கை வரலாற்றின் சுட்டி இதோ! இங்கே!

http://blog.balabharathi.net/wp-rss2.php?cat=14

என் அனுபவங்களை கதைகளாக சொல்ல முனைந்துள்ளேன். அதற்கான சுட்டி.. சிலவற்றைத்தான் இங்கே கொடுத்துள்ளேன். பழைய ப்ளாக்கரில் இருக்கு மிச்சம்.

http://blog.balabharathi.net/wp-rss2.php?cat=4

**** 

நானும் சிலரை அழைக்க வேண்டிய மரபு இருப்பதால்..

1. ஸ்மைலி
2. லக்கிலுக்
3. ஆழியூரான்

மானத்தை காப்பாற்றுங்கள் மக்களே!

4 Responses to “பேராசிரியர் தருமிக்கு நன்றி!!”

  1. வாத்தியாரைய்யா… எனக்கு இந்த விளையாட்டின் விதிகள் பற்றி எல்லாம் தெரியாது. உங்க பதிவை மட்டும் தான் படித்தேன். அதுவும் மாடலுக்கு! உங்க பதிவுகளை நீங்களே சுட்டி கொடுத்து எழுதி இருப்பதாக மட்டும் நினைத்து எழுதி விட்டேன்.

    நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு விபரமே தெரிய வருது. தவறுகளுக்கு மன்னிக்கவும்.

    தோழன்
    பாலா

  2. நல்ல தொகுப்பு, பாலா!
    குறிப்பாக சுடர் விளையாட்டு பதிவு… (அங்கிருந்து பல சுட்டிகளுக்கு இழுத்து சென்று விட்டது :)

    நன்றி.. யாருக்கு சொல்லணும்…. உங்களுக்கா… பேராசிரியருக்கா?? ;)

  3. நான் ஏற்கனவே வெட்டிப்பயலின் அழைப்பை ஏற்று ‘எழுதியதில் பிடிச்சது’ எழுதிட்டேனே? :(

  4. //லக்கிலுக் on 19 Jan 2008 at 10:42 am #

    நான் ஏற்கனவே வெட்டிப்பயலின் அழைப்பை ஏற்று ‘எழுதியதில் பிடிச்சது’ எழுதிட்டேனே?//

    தல பாலபாரதிக்கா இன்னொரு தபா!

Leave a Reply