நண்பர்களே…!
இச்சமூகத்தை புரட்டிப்போடக்கூடிய வலைப்பதிவர்களாகிய நாம்..! {அடடே..ஆச்சரியக்குறி} (புரட்டிப் போட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது அடுத்தகட்ட விஜாரனை!)
ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட், சென்னை மாநகராச்சி பட்ஜெட்.. வரவிருக்கும் தமிழக பட்ஜெட்.. என்று விவாதிக்க ஏகப்பட்ட விஜயங்கள் இருக்கிறது என்றாலும் நாம் அதைப்பற்றி எல்லாம் பேஜி… ரெண்டும் ஆகிவிடப்போவதில்லை என்பதால்… ஒன்லி மொக்கைஸ்!
மொக்கை மட்டும் போட விருப்பம் கொல்பவர்கள்.. இந்த சந்திப்புக்கு வரலாம்.
இடம்:- காக்கைகளை விரட்ட தடியோடு நிற்கும் ”தாத்தா”காந்தி சிலை சைடில்..மெரினா கடற்கரை.
நேரம்:- காக்கைகள் கூடு திரும்பும் மாலை- 5.02 மணிக்கு தொடங்கி.. 7.33 வரை.
நாள்:- 30 மார்ச் 2008,ஞாயிற்றுக்கிழமை.
சிறப்பு மொக்கையர்கள்:-
தம்பி – குசும்பன்
அண்ணன் – அபிஅப்பா
அப்பால.. நீங்க நாங்க.. என எல்லா மொக்கை ஆர்வலர்களும்…
குறிப்பு:- எந்த விதமான தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈவிர கருத்துக்களோடு வந்து ஏமாந்து போகவேண்டாம்.. என டவுஜர் கிழிப்பவர்களைவும், தாவு தீர்ப்பவர்களையும் தம்பி லக்கி சார்பாக கேட்டுக்கொல்கிறேன்.
நினைவுக்கு:- ஆபாசமான சொற்களை இடம் பெறும் பதிவுகள் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்படும் என்ற தேவையில்லாத அச்சம் தோன்றியதால்… சில சொற்களை அடித்து விட்டேனாக்கும்… ஹிஹிஹி… இனி எவன் மஞ்ச முக்கோணத்தை அமுக்குறான்னு பாக்குறேன்… ஹிஹிஹி!!
இது டெக்னிகல் மேட்டரு.. இப்பதிவு விண்டோஸ் லைவ் ரைட்டர் மூலம் வலையேற்றப்பட்டுள்ளது.
Popularity: 4% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பொன்ஸ்
உள்ளேன் ஐயா.
//இடம்:- காக்கைகளை விரட்ட தடியோடு நிற்கும் ”தாத்தா”காந்தி சிலை சைடில்..மெரினா கடற்கரை.//
லேப்ட் சைடா?! ரைட் சைடா?!
// நேரம்:- காக்கைகள் கூடு திரும்பும் மாலை- 5.02 மணிக்கு தொடங்கி.. 7.33 வரை. //
அடுத்த நாள் , தாத்தாக்கள் வாக்கிங்கிங் செல்லும் காலை 7.33 வரையா?!
நீங்க அடிக்க மறந்த பல கண்டனத்துக்குரிய சொற்கள் இன்னும் இருக்கின்றன.. பாத்து செய்யுங்க.
சந்திப்புக்கு வாழ்த்துகள்.
yes yes yes we will meet we will meet
சந்தோஷம்…. மகிழ்ச்சி
)))
இந்த மொக்கை சந்திப்பில் வலையுலக சம்பிரதாயப்படி போண்டா பரிமாறப்படுமா? After meet மாதிரியான ஏதேனும் சொல்லிக் கொள்ளும்படியான ”சரக்கு” உண்டா? என்று பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
உள்ளேன் பாலா!
//{அடடே..ஆச்சரியக்குறி}//
////மொக்கை மட்டும் போட விருப்பம் கொல்பவர்கள்.. இந்த சந்திப்புக்கு வரலாம்.///
நானும் வர்ரேன். ஆனால் சீரியஸாக பேசாமல் கும்மியடிப்பது எப்படி என்று யாராவது ஒரு அருமையான பதிவு போடுங்க மக்கா… (சுகுணாவின் பழைய பதிவிற்க்கு எதிர் விணை போல்) ….
பின்னூட்ட மொக்கைத்தனம்!
//லக்கிலுக் said..
பின்னூட்ட மொக்கைத்தனம்!//
இங்கேயுமா? அநியாயமா இருக்கே..
மாம்ஸு வந்துடுறேன்…………..
காண்டு கஜேந்திரன் கூட அங்கையே சல்பேட்டா அடிக்கலாமா ?
பின்னூட்ட பெயரிலித்தனம்!
பாலா..May I Come in Please
செல்வம்! பீச்சு தானே? யாரு வேணும்னாலும் வரலாம்.. கும்மியடிக்கலாம்!!
இது ஃபார்மலான சந்திப்பு இல்லை என்று அறிவித்து விட்டதால் கும்மியடிக்கும் எண்ணத்தோடே வரவும்!!
அதே நேரத்தில் ரோசாவசந்த், சுகுணா போன்ற செட்டு ஒன்று சேர்ந்தால் இலக்கிய, பின்நவீனத்துவ, சமூக கும்மியும் அடிக்கப்படும் என்பது வழக்கமான ஒன்று!
இங்கே தினமும் ஒரு பின்னூட்டக்கயமை செய்யப்போவதாக தகரநெடுங்குழைகாதனிடம் வேண்டுதல்…
உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா பாலாண்ணா?
பாலா அண்ணே நானும் வரலாமா?
அப்புறம் அபி அப்பா ஒரு 5 லிட்டர் கேன் இங்கிருந்து வாங்கி போய் இருப்பதால் அவர்
“மீட்டிங்” அப்புறம் உள்ளதை பார்த்துப்பார் என்பதை ரகசியமாக சொல்லிக்கிறேன்.
//அப்புறம் அபி அப்பா ஒரு 5 லிட்டர் கேன் இங்கிருந்து வாங்கி போய் இருப்பதால் அவர்
“மீட்டிங்” அப்புறம் உள்ளதை பார்த்துப்பார் என்பதை ரகசியமாக சொல்லிக்கிறேன்.//
அஞ்சி லிட்டர் கேன் ரெடி என்பதால் சரக்கு ரயில் கடற்கரை வரை வரும் என்பது உறுதியாகிறது. நன்றி குசும்பன்!
உள்ளேன் அய்யா.
ரேடியோ மிர்ச்சி அணி , இந்த சந்திப்பில் கலந்துகொள்ளலாமா?
நான் இப்போதான் பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கேன் நானும் கூட இந்த சந்திப்புல கலந்துக்கலாமா?
//Athisha…
நான் இப்போதான் பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கேன் நானும் கூட இந்த சந்திப்புல கலந்துக்கலாமா?
//
yes..pls… welcome!
BAALAA said:
//yes.. pls…welcome!//
என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை……?
கூட்டமா கும்மி அடிக்க போறீங்க, வாழ்த்துக்கள்
முயற்சி பன்னுறேன் தல…
//
Athisha on 19 Mar 2008 at 4:55 pm #
நான் இப்போதான் பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கேன் நானும் கூட இந்த சந்திப்புல கலந்துக்கலாமா?
//
நீங்க ஏன் வீணா பாலாகிட்டே எல்லாம் அனுமதி கேட்டுகிட்டு , பாலா கூட்டும் மொக்கை சந்திப்புக்கு பாலாவே வரும்போது , நீங்க தாராளமா வரலாம்.
என்ன புரியலையா?! எனக்கும்தான் புரியல…எல்லாம் எழவு பாலாவோட பதிவை படிச்ச பாதிப்பு , காண்டு கஜேந்திரனை கன்சல்ட் பண்ணினா சரியா போயிடும்…
யோவ் , பாலா காந்தி சிலைக்கு பக்கத்துல நம்ம நமீதா ஆன்டிக்கும் சிலை வைக்கிறீரா… சொல்லும், நான் ஒரு 10 பேர மொக்கை போட கூட்டியாரேன்.
//நமீதா ஆன்டிக்கும்//
ஆன்டி? வன்மையாக கண்டிக்கிறேன்.
உங்க விளக்கத்தால் திருப்தி அடைந்தோம்!
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
நாங்களும் வருவோம்!!
பதிவர் சந்திப்பு ஆர்வத்தனம்
நண்பர்களே…
சந்திப்புக்கு வந்து…
குசும்பனையும்,அபி அப்பாவையும்
மகிழ்ச்சி பொங்கச் செய்த
நல்ல உள்ளங்களுக்கு நன்றி !
தோழன்
பாலா
pongada.nalla kallmpurangaiya.parida mapalla