1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
–
2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.
-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.
–
நண்பர்களே..
குமுதம் இதழில் வெளி வந்திருக்கும் செய்தி குறித்து மேற்கொண்டு சொல்லுவதற்கு ஏதுமில்லை என்று விட்டு விட முடிவதில்லை.
இணையத்தில் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பின் பத்திரிக்கைகளின் இணையதளங்களுக்கான ஹிட் குறைந்து வருகிறது என்ற எரிச்சல் தான் இப்படி எல்லாம் அவர்களை எழுதத்தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை.
அதே சமயம் இதனை எழுதியவர்களையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்லுவதற்கு ஒன்று இருக்கிறது. ‘ச்சீசீ.. இந்த பழம் புளிக்கும்’ என்று நரி சொல்லிய கதை நமக்குத் தெரியும். இவர்களுக்கு பிழைப்பாகிப் போனதால் பத்திரிக்கையில் எழுதி வருகிறார்கள். அவ்வளவே! (முன்பு ஒரு முறை பிரபல பத்திரிக்கையாளரும் எங்கள் வலைப்பதிவருமான ஜி.கௌதம் அவர்கள் கூட சொல்லி இருந்தார். பத்திரிக்கையில் இருப்பவர்களை விட வலைப்பதிவர்கள் படு சுவாரஸ்யமாக எழுதுகிறார்கள், நல்ல ப்ளாட்பார்ம் கிடைத்தால் அடிச்சு ஆட வைக்கலாம் என்று..)
ஒரு வலைப் பதிவர் என்ற முறையில் இவர்களுக்கு நான் விடும் சவாலாக கூட இது இருக்கட்டும். இங்கு பிரபலமான வலைப்பதிவராக சுவைபட இணையத்தில் எழுதிவரும் அனேகருக்கு பத்திரிக்கையில் எழுதிய அனுபவமிருக்காது தான், அதே சமயம் நீங்கள் வேலைபார்க்கும் குமுதம் போன்ற பெரிய பேனரை வைத்துக்கொண்டு எழுதித்தள்ளும் ஆட்கள் அல்ல பதிவர்கள். அந்த குமுதம் போன்ற பெரிய பேனர் இல்லை எனில் உங்களில் எழுத்துக்களை ஒருவரும் சீண்டக்கூட மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்களுக்கு திறமை இருந்தால்.. கைகுட்டை போட்டு இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, பத்திரிக்கையாளன் அடையாளத்தி துறந்துவிட்டு, எங்களுடன் களத்தில் இறங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் யாருடைய எழுத்து திறமையானது என்று.
சும்மா… நொண்டி விடுறது அப்புறம் குத்துதே குடையுதேன்னு கத்துறது… இதே பொழப்புப்பா உங்களுக்கு!
குறிப்பு:-
திரு. ஞாநியின் விகடன் ஓ!பக்க கட்டுரையாகட்டும், ஜெமோ அழித்த அந்த இருகட்டுரையாகட்டும், சுஜாதாவின் அயோத்தியாமண்டபமாகட்டும், பத்திரிக்கை உலகில் வந்து பரபரபாகும் முன்னே அது பற்ரிய சர்ச்சையை கிளப்பியது எங்கள் வலைப்பதிவு சமூகம் தான். இவர்கள் பத்திரிக்கையில் எழுதும் பத்திரிக்கையாளர்களாக இல்லாமல் இருக்கலாம். பலர் உங்களை விட கூர்மையான பார்வையுடையவர்கள் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
கடைசியாக ஒன்று:-
வலைப்பதிவர்கள் உங்களைப்போன்று பக்கத்தை நிரப்பவும், பாக்கெட்டையும் நிரப்பவும் எழுதுபவர்கள் அல்ல. தங்களின் எண்ணங்களை அப்படியே பதிவு செய்திட நினைப்பவர்கள் – என்பதையும் உங்களுக்கு நினைவு படுத்து விடும்புகிறேன்.
Popularity: 11% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: அரசு பதில்கள், குமுதம், சுஜாதா, ஞாநி, வலைப்பதிவர்
பொன்ஸ்
பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உள்ள முக்கிய இலக்கு காசு. அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதத்தான் செய்வார்கள். வலைப்பதிவர்கள் எவரும் காசுக்காக எழுதுவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு வலைப்பதிவர்களை பார்த்தால் மனநிலை பிறழ்ந்த இளிச்சவாயர்களாக தான் தெரிவார்கள்.
இது சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் கதை தான்.
குமுதம் சொன்ன கருத்து அவர்களின் ஆசிரியர் குழுவை மனதில் வைத்தே சொன்ன கருத்தாக இருக்கலாம்.பொதுவாக அச்சு ஊடகத்தில் எதிர்காலம் குறைந்து கொண்டே வருகிறது.அதாவது அச்சு ஊடகமழிந்து விடும் என நான் சொல்லவில்லை.கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி குமுதமோஆனந்த விகடனோ எரும்பாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
அது மட்டுமல்ல குமுதம் ஆனந்த விகடன் இராண்டையும் பற்றி பேசும் பல நண்பர்கள் குமுதம் கேவலமானது என்றும் ஆனந்த விகடன் கொஞ்சம்பரவாயில்லை என்றோ குமுதத்தை விட ந்ல்லபத்திரிகை என்றோ விவாதித்து வருகிறார்கள்.
குமுதம் ஆனந்த விகடன் இரண்டுமே தமிழ்க் கலாசாரத்தின் பீ வண்டிகள் நண்பர்களே! ஆமாம் இந்த இரு பீ வண்டிகளிலும் சிறந்த பீ வண்டி எது சாதுவான பீ வண்டி எது என வேண்டுமானால்விவாத்க்கலாம்.
இந்த இரண்டிலுமே வேலைபார்க்கும் நிர்வாகிகள் நிருபர்கள் பெரும்பாலானாவர்கள் முட்டாள்கள்.இணைய தளத்திலிருந்து டவுண் லோட் செய்து எழுதுபவர்கள்.சொந்த புத்தி இல்லாதவர்கள் எந்த விதமான வாசிப்பு அனுபவமோ அனுபவ அறிவோ இல்லாதவர்கள்.
இணைய தளம்செயலிழந்து விட்டால் பாதி பத்திரிகையாளர்கள் வீட்டுக்க்குச் சென்று விடுவார்களிதுதான் நிலைமை.
உண்மையில் இணையத்தில் எழுதுபவர்கள் குமுதம் ஆனந்த விகடனை விட புத்தி உள்லவர்கள்தான்.பலநேரங்களில் குமுதம் ஆனந்தவிடனை விட ஆழமான ரசமான கட்டுரைகள்பலதையும் நான் தமிழ் மணத்தில் படித்திருக்கிறேன்.
ஒரு வணிக இதழில் வேலை பார்க்கும் நான் சொல்கிறேன்.வணிக இதழகளை புறக்கணியுங்கள்.இவர்கள் அழிந்து போவதால் யாருக்கு என்ன நஷ்டமும் கிடையாது.இரண்டு கேவலமான முதலாளிகளுக்கு ஒரு தொழில் நஷ்டம் அவளவுதான்.மற்றபடி குமுதமும் ஆனந்த விகடனும் இல்லாது போனால் தமிழ் மக்களொன்றும் குடிமுழுகி போய் விட மாட்டார்கள்.
//வலைப்பதிவர்கள் எவரும் காசுக்காக எழுதுவதில்லை //
Hi..Hi..Good comedy… Most of the Tamil bloggers write for Pinnoottam…! That is why Tamil Manam had to remove”Soodaana Idugai” out of its page.
//எரும்பாகிக்
இராண்டையும்
ந்ல்லபத்திரிகை
விவாத்க்கலாம்.
டவுண் லோட்
உள்லவர்கள்தான்
யாருக்கு என்ன நஷ்டமும்
அவளவுதான்.//
* குறைந்தபட்சம் எழுத்துப்பிழைகளாவது இல்லாத எழுத்துக்கள் பத்திரிக்கைகளில் கிடைக்கும்!
* மேலும் மேற்படி மறுமொழிகளில் உள்ள சில ஆட்சேபத்திற்குரிய சொற்பிரயோகங்கள் வெளிப்பட்டு தர்மசங்கடங்களுக்கு ஆளாக நேரிடாது.
//மற்றபடி குமுதமும் ஆனந்த விகடனும் இல்லாது போனால் தமிழ் மக்களொன்றும் குடிமுழுகிp போய் விட மாட்டார்கள்.//
இவை 98% வலைப்பதிவுகளுக்கும் பொருந்தும்!
தற்போது இருப்பதில் 98% வலைப்பதிவுகள் இல்லாது போனால் தமிழ் மக்களொன்றும் குடிமுழுகி போய் விட மாட்டார்கள்!
Jokes Apart, இத்தகைய ஒரு மறுமொழி (2 பத்திகளில் 8 எழுத்துப்பிழைகள் இருப்பதனால் சொல்கிறேன்.), ஒரு வணிக இதழில் வேலை பார்ப்பதாக கூறிக்கொள்பவருக்கு அழகாய்த் தெரியவில்லை! மேலும் ஒருமுறை லக்கிலுக் கூறியுள்ளது (http://madippakkam.blogspot.co.....st_20.html) போல் இன்னும் பத்திரிகை பாணியில் (சுவாரசியம், கிசுகிசு, அரசியல், திரை, படங்களை போட்டு ஒப்பேற்றுதல் என)தான் பெரும்பாலான பதிவுகள், இடுகைகள் உள்ளன. பரபரப்புக்கு உள்ளான விவகாரங்களை (ஞாநி, சுஜாதா, ஜெயமோகன்) முதலில் வெளிச்சம் போட்டுக் கொள்வதனால் மட்டுமே நாம் வளர்ந்து விட்டோம் என மார்தட்டிக்கொள்வது சரியாகப் படவில்லை!
ஆயினும் பாலபாரதியின் ஒரு கருத்தை மிகவும் ஆதரிக்கிறேன் – வெகுஜன ஊடகங்களின் முகத்திரைகள் ஒவ்வொன்றாய் கிழிந்து கொண்டிருப்பது சத்தியமே. உதாரணத்திற்கு தமிழ்நதி பேட்டி விஷயம் – அவர் ஒரு வலைப்பதிவரால் உள்ள காரணத்தினாலேயே சாத்தியமாயிற்று; விகடன் அவரது மறுப்பை வெளியிட்டது!அச்சு ஊடகங்கள் தற்போதுள்ள “குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது” பாணியையே கடைபிடித்தால் தாக்கு இடிப்பது மிகவும் சிரமமே! அது எவருக்கும் பொருந்தும்.
நன்றி
வெங்கட்ரமணன்
வணக்கம் தல மேட்டர் தெரியுமா? முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மதுவும் மே 1- லிருந்து மனநோயாளி ஆய்ட்டராம். ஆங் அதாவது சொந்தமா blog தொறந்திட்டராம். http://www.chedet.com தான் மகாதீர் முஹம்மதுவேட தளம். நான் பார்த்தபொழுது 699 பின்னனூட்டம் ஒரே நாளில் வாங்கி இருந்தார். அப்ப குமுதம் அரசு கணக்கு படி மலேசியால ஒரே நாளில் 1+699=700 மனநோயாளி உருவாய்ட்டங்களா? ரொம்ப நல்லது,
தல நான் ஓரு ஐடியா தாரேன். ஓரு strip Gelusil வாங்கி, ம்ம்ம் பத்தாது! பத்தாது!! பத்தாது!!! ஓரு பாக்கெட்டாக வாங்கி நம்ம பதிவர் கோணம்
) சார்பாக குமுதம் அரசுவிற்க்கு அனுப்பி வைக்கவும். எப்பல்லாம் கும்பி எரியுதே அப்பல்லாம் ஒண்ணு போட்டுக்கட்டும். அதென்ன பதிவர் வட்டம், பதிவர் சதுரம்
) ன்னுக்கிட்டு. பதிவர் கோணம் தான் நம்ம ஆளுங்களுக்கு சரியா பொருந்தும். ஏனென்றால் ஓரு விவாதமே அல்லது பிரச்சினையே எதுவாக இருந்தாலும் ஆளுக்கொரு கோணத்தில்/Angle அதை பிடித்து இழுத்து ஒருவழி பண்ணிடறங்ப்பா! அதனால் தான் பதிவர் கோணம்
) எப்படி? .உஸ்ஸ்ஸ் அப்பாடா ! ஒரு வழியா வெயில்ல வந்த டென்ஷனை இங்க இறக்கி வச்சுட்டேம்பா!!!.
அப்படியானால் நிறைய உலகம் முழுவதும் மனநோயளிகள் எண்ணிக்கை கட்டக்கடங்காமல் ஆகி விடுமே!!
//அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்//
பதில் அளித்த நபரின் வக்கிர புத்தியை காட்டகின்றது இந்த பதில்.
ஒருவேளை போலியால் பாதிக்கப்பட்டவராக இருக்குமோ?
எனக்கு தெரிந்து குப்பையான எழுத்துகளை சுமந்துவரும் ஒரெ பத்திரிக்கை குமுதம் தான்,இப்பொது தரமான எழுத்துகளை இணையத்தில் வலைப்பதிவுகளின் வழி படிக்க முடிகிறது
அதனால் தன் காண்டு.