இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!” என்றும் ஆளும் அரசை விமர்சிக்கின்ற பாடல்கள். கொஞ்சம் நின்று கவனித்தால் தான் தெரியும் இவை கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின் போது அ.தி.மு.க அரசை விமர்சித்து எழுதப்பட்டவைகள் என்று! இல்லாவிட்டால்.. நடப்பு அரசுக்கும் பொருந்துகின்ற மாதிரித்தான் இருக்கிறது வரிகள். :) இதை எல்லாம் விட காமெடி, கருணாநிதி என்றோ.. பேசிய பேச்சுக்களையும் பல இடங்களில் ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில், ”…மானங்கெட்ட இந்த காங்கிரஸ்காரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்..” என்று காங்கிரசை விளாசிக்கொண்டிருந்தார். :) )

(இப்போது தி.மு.க காங்கிரசுடன் கூட்டனியில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்)

-OoO-

1975 ஜூன் 25 ல் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட எமெர்ஜென்சி காலத்தை பற்றி ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறிய பல சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. அப்போது அவர் பள்ளி மாணவனாக இருந்தாராம். அவரோடு பேசியதில் அன்றைய நிலை குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. 1975ல் நன்கு விபரம் தெரிந்த வயதில் இருந்த பதிவர்கள்.. அப்போது நெருக்கடி நிலையை தமிழக மக்கள் எப்படி உணர்ந்தார்கள்.. எதிர்கொண்டார்கள். என்னென்ன அடக்குமுறைகள் இங்கு நிகழ்தது என்பதை எழுதலாம். என் போன்ற விபரம் தெரியாத பலருக்கும் அது உபயோகமானதாக இருக்கும். அச்சமயம் தமிழக சூழல் குறித்து சரியான பதிவுகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

-oOo-

விழுப்புரம் பயிரலங்கு போய் இருந்த போது தூரிகா வெங்கடேஷ் கூகிள் ரீடர் பற்றிய வகுப்பு எடுத்தார். அதில் ஒருவரின் பதிவுகள் எவ்வளவு பேரால்.. சேர்க்கப்பட்டிருக்குன்னு பார்க்க முடியும்னு சொன்னார். சரி.. நம்ப பதிவை எத்தன பேரு ரீடர் மூலம் படிக்கிறாங்கன்னு சோதிச்சுப் பார்த்தேன். http://blog.balabharathi.net/feed/ (இது தான் சரியான ஃபீட்) என்ற முகவரியில் 29 பேரும்! http://blog.balabharathi.net/ என்ற முகவரியில் 9 பேரும் இருந்தாங்க! ஆக.. 38 பேர் என் பதிவையும் பார்க்கிறார்கள் என்ற போது கொஞ்சம் மகிழ்ச்சி வரத்தான் செய்தது. :)

உண்மையில் எல்லோரும் இந்த தின குறிப்புகள் நல்லா இருக்குன்னு சொல்லும் போது கொஞ்சம் பயம் வருது. ஒரே மாதிரியே எழுதனுமேன்னு. யாருக்காகவும் நான் இதை எழுத வில்லை. என் மன ஆறுதலுக்காகவே எழுதுகிறேன்னு சொல்லிகிட்டு எழுத வேண்டியதிருக்கு. அதனால.. சுவாரஸ்யம் இல்லைன்னு யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க! :) எனக்கு நேரமும், மனசும் ஒத்துழைச்சா.. தினம் என் எண்ணங்களை பதிவு செய்து கிட்டே இருப்பேன். பின்னூட்டங்கள் இல்லைன்னாலும் கூட எழுதிகிட்டே இருப்பேன்!

-OoO-

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கமும் ஒருவர். அவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் மிகவும் பிடிக்கும். அது போல எல்லாம் என்னால எழுதமுடியுமான்னு தெரியலை. அவரின் 77 சிறுகதை கொண்ட தொகுப்பின் மின்னூல் வடிவம் நூலகம். டாட் காமில் கிடைக்கிறது. அதன் சுட்டி இதோ!

-oOo-

Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

14 Comments to “விடுபட்டவை 03 ஜூன் 2008”

  1. அதில் ஒருவரின் பதிவுகள் எவ்வளவு பேரால்.. சேர்க்கப்பட்டிருக்குன்னு பார்க்க முடியும்னு சொன்னார்.

    எப்பிடி எனச் சொன்னால் – நாங்களும் பார்ப்போமே..

  2. //கொஞ்சம் நின்று கவனித்தால் தான் தெரியும் இவை கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின் போது அ.தி.மு.க அரசை விமர்சித்து எழுதப்பட்டவைகள் என்று! இல்லாவிட்டால்.. நடப்பு அரசுக்கும் பொருந்துகின்ற மாதிரித்தான் இருக்கிறது வரிகள்.//

    காலத்தால் அழியாத காவியப் பாடல்கள்னு சொல்லுங்க. :)

    //சூழல் குறித்து சரியான பதிவுகள் இல்லை//
    அப்ப “பதிவுகளே” இல்லையே. :) சீரியசா நடப்பு அரசியல், வாழ்க்கை, கலாச்சாரம் என பதிவுகள் தொடர்ந்து பதிவது அவசியம். இன்றைக்கு அவை ஒன்றுமில்லாமல் போனாலும் பின்னர் உபயோகமாகலாம். இந்தவகையில் பதிவர்கள் நிகழ்வுகளை பொறுப்புடன் கவனிப்பவர்களாயும், பொறுப்புடன் பதிப்பவர்களாயும் இருத்தல் அவசியம்.

    முத்துலிங்கம் புத்தகச் சுட்டிக்கு நன்றி.

  3. சயந்தன்..
    ரீடரை ஸ்க்ரீனில் பார்க்கும் போது வலது கை ஓரம்.. LIST VIEW வுக்கு கீழே! SHOW DETAILS என்று இருக்கும். அதனை அழுத்தினால்.. விபரங்களை பார்க்கலாம்.

  4. தல,

    29 பேர்ல நானும் ஒருத்தன். ஆனா நீங்க சொன்ன பிறகு தான் நம்ம பதிவ எத்தனை பேர் பாக்கிறாங்கனு பார்த்தா 43 னு இருக்கு.

    ம்……நிறைய எழுதணும் போல இருக்கே!

    நம்ம லிஸ்ட்ல அதிகம் யாருக்கு தெரியுமா?
    பிகேபி 175, அடுத்து லக்கி லுக்குக்குத் தான் – 162

    புதிய விசயப்பகிர்தலுக்கு நன்றி!

  5. Divya says:

    \\எனக்கு நேரமும், மனசும் ஒத்துழைச்சா.. தினம் என் எண்ணங்களை பதிவு செய்து கிட்டே இருப்பேன். பின்னூட்டங்கள் இல்லைன்னாலும் கூட எழுதிகிட்டே இருப்பேன்!\\

    Thats the spirit of the writer:))

    தொடர்ந்து உங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக எங்கள் பார்வைக்கு பதிவிட வாழ்த்துக்கள்:))))

  6. Divya says:

    \\77 சிறுகதை கொண்ட தொகுப்பின் மின்னூல் வடிவம் நூலகம். டாட் காமில் கிடைக்கிறது. அதன் சுட்டி இதோ!\\

    Thanks for sharing the link.

  7. //////”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!”/////

    இது இன்று சப்ஜாடா எல்லா அரசியல்கட்சிகளையுமே குறிக்கும் நண்பரே!

  8. Sridhar Narayanan says:

    //அவரின் 77 சிறுகதை கொண்ட தொகுப்பின் மின்னூல் வடிவம் நூலகம். டாட் காமில் கிடைக்கிறது. அதன் சுட்டி இதோ!
    //

    இப்படி ‘சுட்டி’கள் கொடுக்கும்பொழுது கவனமாக இருங்கள். எனக்குத் தெரிந்தவரை அவரின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப் படவில்லை. இப்படி இலவசமாக விநியோகிப்பது காப்பிரைட் சட்டத்தின் கீழ் தவறாக இருக்க வாய்ப்புகள் இருக்கலாம்.

    பதிப்பகம், புத்தக விற்பனை போன்றவற்றில் நீங்கள் அனுபவம் உடையவராக இருப்பதால் இதை நீங்கள் பரிசீலித்து செய்யலாம்.

  9. \\அச்சமயம் தமிழக சூழல் குறித்து சரியான பதிவுகள் இல்லை என்றே நினைக்கிறேன்\\
    நம் மூத்த பதிவர்கள் (வயதில்) அனைவரையும் கேட்டுக் கொள்வோம் அதை பகிர்ந்து கொள்ள

  10. Your tamil is simply super and impressing every one.
    And I wish to thankyou for a link of Muthulingam’s shortstories provided in your post.

    Thanks a lot.

  11. rachinnathurai says:

    nanRu …nanRu !ennangkaLai thodarnthu ezuthungkal…!

  12. Athisha says:

    தினமும் எழுத எப்படிணா உங்களுக்கு மட்டும் மேட்டர் கிடைக்குது,

  13. பாலா,
    Add subscription பக்கத்தில் இருக்கிற Discoverஐ கிளிக்கி பாருங்க!!

  14. நானும் கூகிள் ரீடர் மூலம் தான் படிக்கிறேன்.

    தினம் ஒரு நூலாக பகிர்கிறீர்கள். நன்றி.

    //நூலகம். டாட் காமில் கிடைக்கிறது.//
    ‘நூலகம். டாட் நெட்டில்’ http://noolaham.net/

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over a year and a half old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.