Jul 31
விடுபட்டவை 31 ஜூலை 08
சரியோ, தப்போ.. எனக்கு தெரிந்தவற்றை, தேடி சேகரித்தவைகளை கதை போல சொல்ல முயன்று இருக்கிறேன். தோழமை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் என் நெடுங்கதை நூலின் பெயர் “அவன் -அது = அவள்”. திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் அவல நிலையை எழுத்தில் கொண்டு வர முயன்று இருக்கிறேன். சென்னையில் பிரபலமான அனேக கடைகளில் கிடைக்கிறது. ஆன் லைன் வியாபாரத்திற்கு எனி- இந்தியன் தளத்தினை நம்பி இருந்தது பயன் தரவில்லை. அவர்கள் கைக்கு நூல் கிடைத்து பதினைந்து நாட்களாகியும் அப் டேட் செய்யமுடியாமல் அவதிப்படுகிறார்கள். ஹரனிடம் போனில் பேசியும் வழியைக்காணோம். நண்பர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்த போது தான், உடுமலை டாக் காம் பற்றி தகவலைச் சொன்னார். பதிப்பகரிடம் சொல்லி இருக்கிறேன். விற்பனைக்கு ஆன் லைனில் ஏற்றப்பட்டவுடன் அதன் சுட்டியை தருகிறேன்.
-OoO-
சென்னையில் நடந்த தொடர் கொலைகளுக்கான பரபரப்பு இப்போது வேறு பக்கம் திரும்பி இருக்கிறது. மக்கள் கவனத்தில் இப்போது குண்டு வெடிப்பு குறித்தான அச்சமும், பீதியும் ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக திவிரவாதிகள் என சிலரின் கைதும் அதை அதிகரிக்கச் செய்திருக்கிறது. சைக்கோ கொலைகாரனை சுட்டாவது பிடிப்போம் என்று காவல் துறை சொன்னதாக சில செய்தித்தாள்களில் செய்தி வந்த பின் எந்த கொலையும் நிகழவில்லை. (சைக்கோ.. பேப்பர் படிக்கிற ஆசாமி போல..!) தொடர்கொலைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தோன்றுகிறது. ஆயினும்.. காவல் துறையின் அலட்சியப்போக்கு மாநகரவாசிகளின் உறக்கத்தை கெடுத்திருப்பது உண்மை.
-oOo-
நான் புதியதாக வாங்கிய சோனி எரிக்சன் K790i யில் எடுக்கப்படும் படங்களை அப்படியே ப்ளாக் செய்யமுடியும் என்று அறிந்து கடந்த வாரத்தில் கைபேசியில் இணைய இணைப்பு பெற்று போகிற இடங்களில் எல்லாம் எடுக்கும் படங்களை http://balafotos.blogspot.com என்ற முகவரியில் வலையேற்றி வந்தேன். அப்புறம் போர் அடிக்க, அதனை விட்டு விட்டேன். விரைவில் இதனை தொடர்வேன். ஆங்கிலத்தில் தலப்பு வைப்பது தான் செம கடியாக இருக்கிறது.
-OoO-
ஏகப்பட்ட குழப்பங்கள். பொருள் தேடி, நிம்மதி தேடி, தோழமை தேடி, பணிச்சுமைகளுக்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிறேன். நேரம் தவறி சாப்பிடுவது, உறங்குவதற்கும் எழுவதற்குமான நேரங்களின் ஒழுங்கின்மை என வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு.
அதனாலோ என்னவோ தலைப்பில் குளறுபடி. வழக்கம் போல மன்னிக்க…!
Popularity: 2% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
25 responses so far விடுபட்டவை

Write in Indian Languages..
பொன்ஸ்
தேதி தப்பா இருக்கே…
//சைக்கோ கொலைகாரனை சுட்டாவது பிடிப்போம் என்று காவல் துறை சொன்னதாக சில செய்தித்தாள்களில் செய்தி வந்த பின் எந்த கொலையும் நிகழவில்லை. (சைக்கோ.. பேப்பர் படிக்கிற ஆசாமி போல..!)//
(சைக்கோ.. பேப்பர் படிக்கிற ஆசாமி போல..!)
அப்படியும் இருக்கலாம்
ஒரு வேலை புத்தகம் எழுதும் ஆசாமியாகவும் இருக்கலாம்.
இல்லை இல்லை புத்தகம் படிப்பவராக,
ஒருவேளை இப்படியிருக்குமோ
இல்லை அப்படியிருக்குமோ
(நல்லவேளை நான் சென்னையில் இல்லை, இருந்தால் என்னை பிடித்து போயிருப்பார்கள்)
வால்பையன்
பத்திரிகையாளர் சார்!
குசேலன் படத்துக்கு ஏதாவது டிக்கெட் ஏற்பாடு பண்ணுங்க சார்!
சரவணகுமரன், தேதியை சரி செய்துவிட்டேன். தவறுக்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
தேதியைப் பார்த்து பயந்துவிட்டேன் என்னடா நாட்டின் சுதந்திர தினத்தை கூட மறந்துவிட்டேனா என.. ரிப்ரேஸ் செய்து பார்த்ததும் மாறிவிட்டது… தொடர் கொலைகளை பற்றி நானும் படித்தேன்… அந்நியன் அவதரித்து விட்டானோ என நினைத்தேன்…
பாலா ரொம்ப அவசரமா?
அதென்ன ஒரு மாசத்தை ஒரே லாங் ஜம்ப்?
ஒலிம்பிக் ரிகர்ஸலா?
புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
//ஏகப்பட்ட குழப்பங்கள். பொருள் தேடி, நிம்மதி தேடி, தோழமை தேடி, பணிச்சுமைகளுக்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிறேன். நேரம் தவறி சாப்பிடுவது, உறங்குவதற்கும் எழுவதற்குமான நேரங்களின் ஒழுங்கின்மை என வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு.//
உங்களுக்காவது எழுத்து மூலம் வடிகால் கிடைக்கிறது. சிலருக்கு அந்த வாய்ப்புமில்லாமல் அல்லாடுவதே வாழ்க்கையாக இருக்கிறது.
”கலங்காதே மனமே-உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே” – கண்ணதாசன்
\\ ஏகப்பட்ட குழப்பங்கள். பொருள் தேடி, நிம்மதி தேடி, தோழமை தேடி, பணிச்சுமைகளுக்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிறேன் \\
அப்பப்ப மூச்சு வாங்கிட்டு ஓடுங்க பெரியவரே
வயசாயிருச்சில்ல
//வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு//
தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஏதாச்சும் தெரியுதா பாருங்க !
தலை அப்பப்ப வந்துட்டுப்போங்க
போட்டோக்கள் அருமை.. ஏன் நிறுத்தினீர்கள்..
//ஏகப்பட்ட குழப்பங்கள். பொருள் தேடி, நிம்மதி தேடி, தோழமை தேடி, பணிச்சுமைகளுக்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிறேன். நேரம் தவறி சாப்பிடுவது, உறங்குவதற்கும் எழுவதற்குமான நேரங்களின் ஒழுங்கின்மை என வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு//
புரிகிறது. இந்த மாதம் முழுக்கவே நான்கே பதிவுகள்தான். நாங்கள் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம் என்பதற்கு சாட்சியாக இந்த இடுகை தமிழ்மணத்தின் சூடான இடுகைப் பட்டியலில்.
//வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு//
தல. ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்
//ஏகப்பட்ட குழப்பங்கள். பொருள் தேடி, நிம்மதி தேடி, தோழமை தேடி, பணிச்சுமைகளுக்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிறேன். நேரம் தவறி சாப்பிடுவது, உறங்குவதற்கும் எழுவதற்குமான நேரங்களின் ஒழுங்கின்மை என வாழ்க்கை அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நேரம், தேதி, கிழமை, மாதம் என எல்லாவற்றையும் கடந்தவனாய் வாழ்வது போன்ற ஒரு உணர்வு//
நீங்கள் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் !.
அனைத்துப் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் ஒரே இடத்தில் காண்பீர்கள்
அதான் தொலைப்பேசியில் பிடிக்கமுடியலையா??
ஒரு உதவிக்காக போன் பண்ணேன்,பரவாயில்லை இனிமேல் தேவைப்படுமா என்று தெரியவில்லை.
\
ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்
\
அதை நானும் வன்மையாக ரிப்பீட்டுகிறேன்ன்
//அனைத்துப் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் ஒரே இடத்தில் காண்பீர்கள்
//
அய்யா சாமீ… அனைத்துப் பிரச்சனைகளும் ஒரே இடத்தில் தான் தோன்றுகின்றன என்ற உண்மையும் அதன் மூலம் புரிபடலாம்.
ஆனா.. நாங்க சராசரி இல்லை. அடிச்சு ஆடுவோம்… !
//வடுவூர் குமார் July 31st, 2008 at 5:14 pm Edit Comment
அதான் தொலைப்பேசியில் பிடிக்கமுடியலையா??
//
போன் பண்ணீங்களா…? சிங்கையிலிருந்தா… அபடி ஏதும் எண் வந்ததாக நினைவு இல்லையே தல! பிசின்னு சொன்னா பிச்சுடுவாய்ங்களே.. அதனால தான் இப்படி புலம்ப வேண்டி இருக்கு!
மன்னிக்க!
//தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஏதாச்சும் தெரியுதா பாருங்க !
//
யார் தலைய சுத்தின்னு சொல்லலையே சேவியர்..!
//உங்களுக்காவது எழுத்து மூலம் வடிகால் கிடைக்கிறது. சிலருக்கு அந்த வாய்ப்புமில்லாமல் அல்லாடுவதே வாழ்க்கையாக இருக்கிறது.
”கலங்காதே மனமே-உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே” – கண்ணதாசன்
//
சரி தான் வேலன்.. நாம நிலை பரவாயில்லை தான்.
திரு. பாலபாரதிக்கு,
புதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமில் மாதம் இருமுறை (முதல், பதினைந்து தேதிவாக்கில்) வலையேற்றுகிறோம். எங்கள் வலைத்தளத்தில் இல்லாத புத்தகங்களைக்கூட Custom Order வழியாக வாங்க முடியுமென்பதால் புதிய புத்தகங்களை மாதம் இருமுறை மட்டுமே வலையேற்றுவதால் நுகர்வோருக்குச் சிரமம் ஏதுமில்லை. ஆனாலும், நண்பர்கள் மற்றும் பதிவர்கள் புத்தகங்கள் எழுதி அதை எனிஇந்தியனில் விற்கச் சொல்லும்போது, கூடுமானவரை அவர்களுக்கு உதவியே வந்துள்ளோம். மேலும், வலைப்பதிவர்கள் எழுதிய புத்தகங்களை எனிஇந்தியன்.காமின் முதல் பக்கத்தில் வைத்து ஆதரவளித்திருக்கிறோம். (உதாரணம்: மயிலிறகால் ஒரு காதல், சித்திரம் கரையும் வெளி, மருதம், கஜல், கானா, மு.க.)
‘அவன் – அது = அவள்’ என்கிற உங்கள் புத்தகம் எங்கள் கைகளுக்கு ஜூலை பதினைந்தாம் தேதிக்குப் பின்னரே பதிப்பாளர் மூலம் வந்தது. அதனால் அடுத்தமுறை புத்தகங்களை வலையேற்றும்போது (ஆகஸ்ட் 1 வாக்கில்) வலையேற்ற முடிவுசெய்யலாம் என்றிருந்தோம். நீங்கள் என்னைத் தொலைபேசியில் 25ம் தேதி (காலை 11:30 மணிக்கு) அழைத்து அப்புத்தகத்தை எனிஇந்தியன்.காமில் ஏற்றச் சொன்னீர்கள். அப்போதே நான் உங்களிடம் ‘வார்த்தை’ இதழ் தயாரிப்பில் இருக்கும் வேலைப்பளுவையும் பரபரப்பையும் சொல்லி, ஆனாலும் இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். பதினைந்து நாள்களுக்கொருமுறை மட்டுமே நாங்கள் வலையேற்றுவதென்றாலும், நீங்கள் அழைத்தபோது இரண்டு நாள்களில் ஏற்றுவதாகச் சொன்னேன். அப்போது நீங்கள் இன்னும் அவசரம் என்று சொன்னபோது, இயன்ற அளவு எவ்வளவு சீக்கிரம் ஏற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வலையேற்றுகிறேன் என்றே சொன்னேன். அதன் பின்னர், உங்கள் புத்தகத்தின் தலைப்பு ‘அவன் – அது = அவள்’ என்பது insensitive ஆக இருப்பதோடு மட்டுமில்லாமல் திருநங்கைகளையும் பெண்களையும் அவமதிப்பதாகவும் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. உங்கள் புத்தகம் திருநங்கைகளுக்கு ஆதரவானது என்றாலும் ஆண் பாலியல் குறி இல்லையென்றால் பெண் என்ற பொருள் வரும் அவன் – அவள் = அது என்ற தலைப்பு தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று பெண்களும் திருநங்கைகளும் சொல்லக் கூடுமோ என்று எனிஇந்தியன் நிர்வாகம் யோசித்தது. அதனாலேயே உங்கள் புத்தகத்தை வலையேற்றுவது குறித்து முடிவு செய்ய இரண்டு நாட்களுக்கு மேலானது.
புத்தகங்களை வலையேற்றுவது குறித்து வரையறுக்கப்பட்டிருக்கிற திட்டப்படி எனிஇந்தியன்.காம் செயற்படுகிறது. ஆனாலும் பல நேரங்களில் பதிப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இவ்விஷயத்தில் உதவும்பொருட்டுச் சிலநேரங்களில் புத்தகங்களை மாதத்தில் பலமுறைகூட வலையேற்றுகிறோம். இப்படிப் பலமுறை வலையேற்றுவது எங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொருத்தது. ஆனால், இதுகுறித்து யாரும் எனிஇந்தியன்.காமுக்கு நெருக்குதல் தருவது சரியில்லை. புத்தகங்களை உடனடியாக வலையேற்ற வேண்டும் என்ற தங்கள் அவஸ்தையில் நாங்கள் பதினைந்து நாட்களுக்கு மேலாக புத்தகங்களை வலையேற்றாமல் அவதிப்பட்டதாகத் தாங்கள் சொல்வது உண்மையில்லை.
நாங்கள் முடிவெடுப்பதற்குள் தாங்கள் முடிவுசெய்து புத்தகம் வேறு தளங்களில் கிடைக்கும் என்று அறிவித்த செய்தியை வாசித்தோம். தங்கள் புத்தகம் அத்தளங்களின் வழியே சிறப்பாக விற்பனையாகவும் வெற்றியடையவும் எனிஇந்தியன்.காமின் வாழ்த்துகள்.
ஹரன் பிரசன்னா
இயக்குநர்
எனிஇந்தியன்.காம்
//ஆண் பாலியல் குறி இல்லையென்றால் பெண் என்ற பொருள் வரும் அவன் – அவள் = அது என்ற தலைப்பு தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று பெண்களும் திருநங்கைகளும் சொல்லக் கூடுமோ என்று எனிஇந்தியன் நிர்வாகம் யோசித்தது. அதனாலேயே உங்கள் புத்தகத்தை வலையேற்றுவது குறித்து முடிவு செய்ய இரண்டு நாட்களுக்கு மேலானது.
//
அவன் – அது = அவள் என்று இருக்கவேண்டும். தவறுக்கு மன்னிக்கவும்.
- ஹரன்பிரசன்னா
இனிய ஹரன்,
உங்களின் பின்னூட்டம் தங்களின் நிறுவனத்தின் நிலைபாட்டை விளக்கியது. நன்றி!
ஒரு படைப்பாளியாக என் நூல் எல்லா இடங்களிலும்/எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடே தங்களிடம் தொலைபேசியது கூட. சில வெளிநாட்டு வாழ் தமிழ்நண்பர்களுக்கு நானே நூலை அனுப்பும் நேரமோ, விலை விபரமோ தெரியாத போது.. ஒரு நிறுவத்தை அனுகுவது என்பது இயல்பு.
அந்த சில நண்பர்களின் தொடர் வர்புறுத்தலினால் இணையத்தில் விற்கும் இன்னொரு கடையை அனுகும் படி பதிப்பகத்தாருக்கு ஆலோசனை சொன்னேன். மற்றபடி எந்த கடையாக இருந்தாலும் எனக்கு வித்தியாசமில்லை.
தங்களின் புரிந்துணர்வு வாழ்த்துக்கு.. நன்றி!!
தலைவா..
நான்கூட புத்தக விஷ்யமாய் அலைச்சலில் இருப்பதால் எழுய்தவில்லையென நினைத்தேன்!
வெயிலானை சென்னை அனுப்பு (??) – ஸாரி அவரு வந்திருந்தபோது வாங்கச் சொல்லியிருந்தோம். விரைவில் கோவையில் கிடைக்க ஏற்பாடு செய்வதாய் சொன்னீர்களென்றார்.
என்னால் ஏதாவது உங்களுக்கு உதவ முடியுமா? ப்ளீஸ்… மெயிலுங்களேன் (அ) அழையுங்கள்..
ஒரு கூட்டமே காத்திருக்கு!
புகைப்படங்களை அவசியம் தொடர்வும். புத்தகத்திற்கு வாழ்த்து