இது வலைப்பதிவுகளின் காலம். பத்திரிக்கை உலகிற்கு எழுதி அனுப்பி விட்டு, காத்திருந்த காலம் மலையேறி வருகிறது. பத்திரிக்கைகள் வலைப் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நல்ல எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றன.
ப்ளாக் வைத்து, அதில் எழுதுவதைக்கொண்டே.. பத்திரிக்கை உலகில் நுழைந்து முழுநேர பத்திரிக்கையாளர்களாக மாறிய சிலரையும் நான் சென்னையில் பார்த்திருக்கிறேன்.
பிரபலமான அனைத்துப் பத்திரிக்கைகளிலும் எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள்.. வலை உலகினை நோக்கி படையெடுக்கத்தொடங்கி இருக்கிறார்கள். இன்று குறுகிய அளவில் இருக்கும் அவர்களின் எண்ணிக்கை நாளை நிச்சயம் அதிகரிக்கும் என்றே நம்பலாம்.
சுஜாதாவின் அயோத்யாமண்டபமாகட்டும், ஞாநியின் மு.க குறித்த கட்டுரையாகட்டும், ஜெயமோகனின் வலைப்பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட அந்த இரு இடுக்கையாகட்டும்.. தமிழகச்சூழலில் எதிர்ப்பு கிளம்புவதற்கு முன்.. முதல் எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் நம் வலைப்பதிவர்கள் என்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
எந்தவொரு பிம்பங்களுக்கும் மயங்கிவிடாமல் தைரியமாக எதிர்ப்பை பதிவு செய்யும் நம்மவர்களின் எழுத்து.. சுவாரஸியத்திற்கும் பிரபலங்களோடு போட்டி போடுவது எவராலும் மறுக்கவியலா உண்மை.
பத்திரிக்கைகளுக்கான சுவாரஸ்யத்தோடு அட்டகாசமான தகவல்களை புதைத்து வைத்திருக்கின்றன இணையப் பக்கங்கள். அவற்றிலிருந்து.. என்ற அறிமுகத்தோடு ஏப்ரல்2008 “மல்லிகைமகள்” இதழில்.. ”வலை வீசம்மா..வலைவீசு” என்ற பகுதியை தொடங்கி இருக்கிறார்கள்.
மா.சிவக்குமார், புதுகைத்தென்றல், பாரதி(எ)தமிழ்நிதி - ஆகிய மூவரின் படைப்புகள் வந்துள்ளது. மூவருக்கும் வாழ்த்துக்கள்.
வலைப்பதிவுகளில் இருந்து பல்வேறு செய்திகளை தொடர்ந்து தொகுக்கப் போகிறார்கள். இதோ.. இந்த மாத இதழின் சுட்டி இங்கே.. இதனை கிளிக் செய்தும் படிக்கலாம். அல்லது ரைட்கிளிக் செய்து,சேவ் அஸ் கொடுத்து சேமிக்கவும் (சேமித்தும் படிக்கலாம்) செய்யலாம்.
ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரும் மல்லிகைமகளின் ஏழாவது இதழ் இது. விகடன் குழுமத்தில் இருந்து வெளி வந்துகொண்டிருக்கும் அவள்விகடனின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் இவர். ஓர் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்.. அவள் விகடனின் புது வடிவம் இவரது எண்ணமே!
பெரிய நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மல்லிகைமகளில் ஜொலிக்கிறது. வி.உஷாவின் தொடர்கதை வருகிறது. கேள்வி பதில் பகுதி, சோதிடம், சமையல் என்று எல்லாமே இருக்கிறது. பெண்களுக்கான இதழ் என்றாலும் பொதுவான பல்சுவை நோக்கிலும் இருப்பதால் ஆண்களும் விரும்பும் படியான இதழாகவே மல்லிகைமகள் இருக்கிறது.
தொடர்பு முகவரி:-
மல்லிகைமகள்,
8, சுப்பரணியநகர் பிரதான சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600024.
தொலைபேசி044-24803253.
மின்னஞ்சல்:- malligaidesk@gmail.com
Popularity: 2% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: பதிவர்கள், மல்லிகைமகள், விளம்பரம், tamilblogger
பொன்ஸ்
மிக்க நன்றி.
சுட்டிக்கு நன்றி பாலா சார். அருமையான தேர்வுகள்.
மா.சிவக்குமார், புதுகைத்தென்றல் மற்றும் பாரதி[எ] தமிழ்நிதி மூவருக்கும் வாழ்த்துகள்.
மா.சிவக்குமார், புதுகைத்தென்றல் மற்றும் தமிழ்நிதி மூவருக்கும் எனது வாழ்த்துகள்.
//இது வலைப்பதிவுகளின் காலம். பத்திரிக்கை உலகிற்கு எழுதி அனுப்பி விட்டு, காத்திருந்த காலம் மலையேறி வருகிறது. பத்திரிக்கைகள் வலைப் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நல்ல எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றன.//
மிக அருமையான செய்தி. மகிழ்ச்சி. பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வலைப்பதிவர்ணு சொன்னாலே சும்மா அதிருதுண்றீங்க… நல்லது
//வினையூக்கி on 04 Apr 2008 at 11:47 pm #
மா.சிவக்குமார், புதுகைத்தென்றல் மற்றும் பாரதி[எ] தமிழ்நிதி மூவருக்கும் வாழ்த்துகள்
//
repeattu
எதிர்காலத்தில் வலைப்பதிவுகளே வெகுசன ரசனையைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்கப்போகிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம்
வாவ்.. திறன்மிக்க வலைப்பதிவர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல செய்தி…
மா.சிவக்குமார், புதுகைத்தென்றல் மற்றும் பாரதி[எ] தமிழ்நிதி மூவருக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் மா.சி, புதுகைத்தென்றல் மற்றும் தமிழ்நிதி
சுட்டிக்கு நன்றி பாலா