சிறுகதை : கடந்து போதல்
April 5th, 2006 by ♠யெஸ்.பாலபாரதி
இந்த மாத(ஏப்-1-15) புதிய பார்வை இதழில் வெளியான என் சிறுகதை இது.————————————————————————-
கடந்து போதல்…
பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி.
எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. னால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி […]







