நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!
June 16th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
* தமிழ்ச்செல்வி என்று நாமகரம் சூட்டப்பெற்ற நாயகி ஸ்ரேயா எல்லா பாடல்காட்சிகளிலும் மேலாடையின்றி, பாலிவுட் நடிகை மல்லிகாஷெராவத்தை நினைவு […]







