July 17th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
நண்பர்களே!
ஆளாளுக்கு பதிவர்குறித்த விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ.. நானும் ஒரு விளையாட்டை தொடங்கி வைக்கிறேன். அது தான் ஒன்று.(முன்னமே சிலர் எட்டு போட அழைத்திருக்கிறார்கள். அதை எழுதுவது அலுப்பாகவும், சலிப்பாகவும் இருக்கு. என் புலம்பல்கள் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஒரு காரணம்)
ஏற்கனவே சுற்றில் வந்த பதிவுகள் போலத்தான்.. இந்த ஒன்று என்றாலும்.. இதில் ஒரே ஒரு கேள்வி கேட்கனும். அதுவும் ஒருத்தர் கிட்ட மட்டும். அந்த ஒரு கேள்விக்கு பதிலை ஒரு வரியிலையும் சொல்லலாம். ஒரு […]
July 7th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
நண்பர்களே!
சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பதிவர் பட்டறை நடக்க இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புதியவர்கள் பழையவர்கள் என்று மொத்தம் 150 பேருக்கு மட்டுமே அனுமதி.
அதிலும் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் அனுமதி.
முன்பதிவு செய்ய http://tamilbloggers.org என்ற பக்கத்திற்கு செல்லவும். இந்த தளம்.. விக்கி மொன்பொருளை கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த தளத்தின் இடது ஓரம் இருக்கும் பங்கேற்போர் என்பதனை சொடுக்கினால் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே இடது ஓரத்தின் மேல் பகுதியில் எடிட் பொத்தான் […]
July 6th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
ஒருபோதும் சோர்ந்து போனதில்லை
மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில்
சோகங்கள்
துரோகங்கள்
வருத்தம்
மகிழ்ச்சி
என எதுபற்றியேனும்
பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
பல சமயங்களில்
முன் சிரித்து
பின் கூறு போடுபவர்கள்
இருக்கின்ற போதிலும்
இவர்களை ஒதுக்கிவிட
தோன்றியதில்லை
பூனை,நாய்,கிளி
ஏன் கடவுள்களே கூட
பதில் பேசாமலிருக்கையில்
ஏதாவது பேசும்
மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.