August 30th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

மீண்டும் தலை தூக்கி இருக்கிறது போலிப் பிரச்சனை. மூர்த்தி தான் போலி என அடையாளம் கண்டு பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. (மூர்த்தி மட்டும் தானா போலி என்பது வேறு விசயம்).
போலிப் பிரச்சனைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டாமை முத்து தமிழினியுடன் சேர்ந்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டு தோற்றவர்களில் நானும் ஒருவன்.
தொடர்ச்சியாக பல மெயில்கள். ஆனால் இம்மியளவும் போலியிடம் மாறுதல் தெரியாத காரணத்தால், அவனுக்கு அனுப்பும் மெயில்களை நிறுத்திக் கொண்டேன்.
தொடர்ச்சியான என்னுடைய முயற்சிகள் தோல்வியைத் தந்ததோடு மட்டுமல்லாது போலி […]

August 24th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

மலர்கொத்து ஒன்றை “பொக்கே” கடைக்காரன் கொண்டு போய் கொடுப்பதை விட.. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேசங்களுக்கு நாமே நேரடியாகப் போய் கொடுப்பது ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
வாழ்த்துவதற்கு என்று தனி இடத்தை நண்பர்கள் வைத்திருந்தாலும்.. இந்த சமயத்தில் என்னால் அங்கு போய் தகவல் தர முடியவில்லை.
இன்று பிறந்தநாள் காணும் அன்புத்தம்பி லக்கிக்கு வாழ்த்துக்கள்.

August 21st, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

மேல இருக்கும் விடியோ படத்தை புது வீட்டில் ஏற்றுவதில் நுட்பம் அறியாத குழப்பம் இருப்பதால்… ஓடாமல் போகலாம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்.. நண்பர்கள் இந்த சுட்டியைச் சொடுக்கி அந்த விடியோவைப் பார்க்கலாம்.
குறிப்பு:-
நண்பரும், பத்திரிக்கையாளருமான டி. அருள் எழிலன் அனுப்பிய சுட்டி மூலம் காணக்கிடைத்த படம்.