August 14th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
♖ ♗ ♘ ♙ ♚ ♛ ♜ ♝ ♞ ♟
வணக்கம் நண்பர்களே!
வித்லோகா- புத்தகக் கடையில் வேலை பார்த்து வந்த நான் இன்று வேலையை ராஜினாமா செய்து விட்டேன். பத்ரி சாரின் வாழ்த்துக்களுடன் புதிய இடத்தில், புதிய பணியில் அமரப்போகிறேன்.
ஆகவே.. நண்பர்கள் யாரும் என்னைத்தேடி வித்லோகா வந்து ஏமாற வேண்டாம் என்று அறிவிக்கவே இந்த பதிவு.
நாடோடி நான். ஒரே இடத்தில் அதிக காலம் இருக்க முடியாது.
August 14th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
சிறுவயதில் திக்குவாயனாக இருந்த சமயங்களில் பாட்டுப்பாட நிறைய ஆசை இருக்கும். ஆனால்.. முதல் பல்லவி முடிவதற்குள் தாவு தீர்ந்து விடும் (கேக்க்குறவங்களுக்குத் தான்).
காயிலே புளிப்பதென்ன.. க்க..க்க..க்க…….. கண்ண பெருமானே! என்று நான் படுத்தும் கொடுமைக்காகவே.. என்னை எங்குமே எவருமே பாட விடுவதில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. :). தொடர்ந்து.. செய்த பயிற்சி+ முயற்சிகளால் திக்குவாய் வெகுவாக குறைந்து விட்டது.
இப்போவும் என் இஷ்டத்திற்கு.. பிரபலமான பாடல்களை என் மெட்டுக்கு மாற்றி கொலை செய்வதை வழக்கமாக […]