Aug 14

நான் கொலை பண்ணி இருக்கேன்!! சொல்லுவதெல்லாம் உண்மை!!

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Aug 14 2007 at 06:49 am

சிறுவயதில் திக்குவாயனாக இருந்த சமயங்களில் பாட்டுப்பாட நிறைய ஆசை இருக்கும். ஆனால்.. முதல் பல்லவி முடிவதற்குள் தாவு தீர்ந்து விடும் (கேக்க்குறவங்களுக்குத் தான்).

காயிலே புளிப்பதென்ன.. க்க..க்க..க்க…….. கண்ண பெருமானே! என்று நான் படுத்தும் கொடுமைக்காகவே.. என்னை எங்குமே எவருமே பாட விடுவதில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. :) . தொடர்ந்து.. செய்த பயிற்சி+ முயற்சிகளால் திக்குவாய் வெகுவாக குறைந்து விட்டது.

இப்போவும் என் இஷ்டத்திற்கு.. பிரபலமான பாடல்களை என் மெட்டுக்கு மாற்றி கொலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதோ.. அப்படி சமீபத்தில் நான் கொலை செய்த பாடலின் பதிவு இது.

Get this widget | Share | Track details

இதனை கேட்கும் தகிரியம் இருந்தால் மட்டும் கேட்கவும். அப்புறம் ஆட்டோ அனுப்புற வேலை எல்லாம் வேணாம். இப்பவே சொல்லிடுறேன். நான் பாட்டை கொலைபண்ணி இருக்கேன்.

Popularity: 2% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

23 Responses to “நான் கொலை பண்ணி இருக்கேன்!! சொல்லுவதெல்லாம் உண்மை!!”

  1. poorna says:

    பா.க.ச ஆண்டுவிழாப் போட்டிக்கு இதை விடச் சிறந்த பதிவு கிடைக்காது.. இதை அங்கே கொடுத்துவிடுங்களேன்…

  2. கேட்க முடியவில்லை………………………esinip க்கும் நம்ம கணினிக்கும் கொஞ்ச நாளாக பிணக்கு…

  3. திரு says:

    பாட்டு நல்லா படிச்சிருக்கீங்க… :) ) ரொம்பதான் உருகி பாடியிருக்கார் பாடகர் ;)

  4. தாமோதர் சந்துரு says:

    அய்யோ அப்பா ஆளை விடுங்க சாமி. தாங்க முடியலை.
    வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

  5. டெம்ப்ளேட் படு கேவலமாக ப்ளோரசண்ட் கலரில் இருக்கிறது. பாட்டை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். உங்கள் டெம்ப்ளேட்டை விட அது ரொம்ப மோசம்.

  6. குசும்பன் says:

    எனக்கு காதை ஏன் டா படைச்ச ஆண்டவா?
    “தகரம் இப்போ தங்கமாச்சு…”

    என் காது இப்போ செவுடு ஆச்சு…

    “கார் காலம் வந்தால் என்னா? கடும் கோடை வந்தால் என்ன?”

    இதுபோல் ஒரு ராகு காலம் வராமல் இருந்தால் சரி…

    “கண்ணீர் காதல்”
    இரத்த கண்ணீர்ய்யா!!!!

    கடைசியில் பெரிய பேச்சாளர் மாதிரி பேச்சு பாட்ட பத்தி, அட கொடுமையே!!!

  7. சர்வ நிச்சயமாக “கொலை” தான்.நீங்களே ஒத்துக்கிட்டதாலே விடுதலை செய்கிறோம்.
    நம்ம யுவன் கொஞ்சம் நிம்மதியாக இருப்பதால் அவருக்கு அனுப்பி பின் இசை சேர்க்கச்சொல்கிறேன். :-) )

  8. மின்னுது மின்னல் says:

    பாட்டு கேட்கல :)

    டெம்பிலேட் சூப்பர்

  9. [...] Mokkai Murder by Balabharathy பாலபாரதியின் ஒப்புதல் வாக்குமூலம் [...]

  10. rudra says:

    enna kodumai sir ethu
    please dont kill us

  11. மாம்ஸ்,

    இந்த ழ,ல,ள’ன்னு தமிழிலே சில பதங்கள் இருக்கு…. அதை தயவு செய்து அழிச்சிறாதீங்க…. :)

    அப்புறம் இந்த டெம்பிளேட் கலரை பார்த்ததும் ஒங்க ராமேஸ்வரத்து சிநேகிதர் சொன்னது சரியா தான் இருக்கு…..

    என்னாதா?? நீங்கதான் அகில இந்திய ராமராஜன் ரசிகர் மன்றத்து ராமேஸ்வரத்து கிளை தலிவர்’மாமே…. :)

  12. சும்மாவே ஆளாளுக்கு உங்களப் பத்தி மொக்கைப் பதிவாப் போட்டுட்டு இருக்கிறாங்ங!
    இதுல சொந்த பதிவுல சூனியம் வச்சுருக்கீங்களே!

    மொதல்ல பேச வேண்டியத கடசியில சேத்துருக்கீங்க. கே.ஜெ. ஜேசுதாஸ, ஜெ.கே. ஜேசுதாஸா மாத்தீட்டீங்க!

    எல்லாரும் சொல்ற மாதிரி அடங்க மாட்டீங்க போல!

  13. வெற்றி says:

    பாலபாரதி,
    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    /* இதனை கேட்கும் தகிரியம் இருந்தால் மட்டும் கேட்கவும்.*/

    எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்தான் திராவிடத் தமிழினம். இதையெல்லாம் தாங்க மாட்டோமா?! :-) )

    “ரொம்பதான் உருகி பாடியிருக்கார் பாடகர்” – திரு
    “டெம்ப்ளேட் படு கேவலமாக ப்ளோரசண்ட் கலரில் இருக்கிறது” – லக்கி

    நண்பர்கள் திரு, லக்கி போன்றோரின் கருத்தை வழிமொழிகிறேன். :-)

  14. nakkiran says:

    ayyio ayyio

    SPB thooku maatikitaaraan…

  15. ஆ.. கடவுளே!!

    இதுக்கு பொன்ஸ் பாடுறதையே ஒன்ஸ்மோர் சொல்லிக் கேக்கலாம்.

    :D

    -மதி

  16. மதி… கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  17. ஈஈஈ

    ஈஈஈஈ
    இஈஈஈஈஈஈஈ

    தல எத்தன ஈ

    எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆம்

    எத்தன ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    பாஆஆஆஆதீஈ

    இதில ஏஏஏஏஏஏஏ வேற

    பயங்கரம் தல

  18. SurveySan says:

    நான் கேக்கும்போது பாடிக் கொடுத்திருந்தா, பல்லக் கடிச்சிட்டு, ‘அருமை’ன்னு சொல்லியிருப்பேன் :)
    இப்ப நோ obligations. so, நேர்மையா ஒரு கருத்து சொல்லலாம்.

    அதாவது, பாட்டு பாடரது உங்களுக்கு ஒத்து வராத வேலை. அதுக்குதான நாங்க இருக்கோம். நாங்க பாத்துக்கரோம். :)

    ரியலி, நன்னால்ல. சாரி ;)

  19. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..வூ

    தல, ஏன் தல, ஏன்??????????????

  20. ஏன் தல இந்த கொலவெறி!!

    எனக்கு தமிழ் எழுதும் போது டேமேஜ் ஆகும், உங்களுக்கு பாடும்போதா???

    அது யாரு தல ஏ.கே ஜேசுதாஸ்? கே.ஜே.ஜேசுதாஸ் கேள்வி பட்டிருக்கேன், இந்த ஏ.கே ஜேசுதாஸ், ஏ.கே மூர்த்தியோட ரிலேஷனா??

    ஒன்னும் பிரியலையே தல!!!

    ஆனாலும் உங்க தகிரியம் யாருக்கு வரும்!!!

    இது பா.க.ச ஆண்டுவிழா போட்டிக்காகவா?? ஏன் எங்கயும் மென்ஷன் பண்ணல??

    வாள்க பாலாபாய் டமிள்! வழர்க பாலாபாய் டமிள்!!

    நா ஜெயசங்கர்
    பா.க.ச தலிம கலகம்
    சென்னை

  21. யப்பா.. என்ன கொடுராமான சிந்தனை இது..?

  22. ஆஹா அற்புதம்!

    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

    உங்கள் குரலுக்காகவும் இந்த உலகம் ஒரு நாள் காத்து கிடக்கும்

    இன்னிசை வேந்தே தொடருட்டும் இந்தப் பணி.

  23. சிவஞானம்ஜி says:

    அய்யோ அய்யோ அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்யோ…………………

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly