September 21st, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
பத்திரிக்கையில் குப்பை கொட்டி பழகிய நான் தற்போது விஷ்வல் மீடியா ஒன்றில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறேன். பணிக்கு போக ஆரம்பித்த இரண்டாவது நாள்.. அலுவகத்தில் பலரும் ‘ஏர் போக’ என்று திட்டிக்கொண்டார்கள்.
முதன்முதலில் அப்படியான ஒரு வசவு வார்த்தையை நான் கேட்கிறேன். ஆனால் திட்டியவரும் சரி, திட்டு வாங்கியவரும் சரி.. முகத்தியில் உணர்ச்சியற்று அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து விடுவதையும் கண்டு நிறையவே குழம்பிப்போனேன். ‘கட்டையில போக..’, ‘பாடையில் போக..’, என்று திட்டிக்கொள்ளுபவர்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு ‘ஏர்ல […]
September 19th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
மிகவும் சிரமமான முறை என்றாலும் கைக்கு ஒன்றாய் ஒற்றை விரல் வைத்து தட்டச்சு செய்து வந்தவன் நான். இப்போது பழைய டைப்ரேட்டர் தட்டச்சு முறையால்.. எட்டு விரல்களைக்கொண்டு தட்டச்சு செய்து வருகிறேன். அந்த வகையில் இந்த தட்டச்சு முறைக்கு ஒரு ஓ போட்டுக்கிறேன்.
மிகவும் சிரமப்பட்டு தமிழ்99 க்கு மாறிய பின் சிப்ட் பொத்தான் அமுக்கும் தொல்லைகள் இன்றி தட்டச்சு இலகுவாய் இருந்தது. (அதுக்கு வெறும் ஓ தான், தமிழ்99 க்குத்தான் என் ஓட்டு.)
ஆனால், நான் புதிதாக பணிக்கு […]
September 10th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
வணக்கம் நண்பர்களே!
நீண்ட நாட்களாக பதிவுகள் பக்கம் வரமுடியவில்லை, புதிய அலுவலகத்தில் இணையத்தில் உட்கார முடிவதில்லை.
தவிரவும், பழைய தட்டச்சு முறையில்(இது மட்டும் தான் இருக்கு) அங்கு தட்டச்சு பழகி வருவதால்.. பழைய வேகம் பிடிக்க நாட்களாகும் என்பதால் நீங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு தப்பித்தீர்கள். அதுவரை என்சாய்… மக்கள்ஸ்…