November 26th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய நேர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அதே துண்டு பயன்படும் விதம் குறித்து எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள். அதிலும் பெண்குழந்தைகளால் பயன்படுத்தப்படும் விதம் அலாதியானது.
பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகளில் பலர் துண்டை தலையில் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். கூந்தலை அள்ளி கொண்டை போடுவது போலவோ, முன்பக்கம் கூந்தலைப் போடுவது போலவோ துண்டை பயன்படுத்துவதை […]
November 26th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
ஊரை விட்டு காசிக்கு போவது என்று முடிவு செய்ததும்.. யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. தொலை தூர பயணம். அதுவும் மொழி தெரியாத வடக்கு தேசத்தை நோக்கி போகப்போகிறோம். தனியாளாகப் போய் அவதி படுவதைக்காட்டிலும் கூட்டுக்கு ஆள் இருந்தால் சிரமம் தெரியாது. அவரின் அழைப்பை ஏற்று, உடன் வர சம்மதித்தவர்கள் இருவர்.
ஒருவர் ராமசாமியின் தங்கையின் கணவர். மற்றொருவர் நணபர். மூவருமாக ஈரோட்டை விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து […]
November 12th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
என்ன ஏது என்று அறிய முடிவதற்குள் குழந்தை இறந்து போனது. பத்துமாசம் சுமந்து பெற்ற சிசு.. ஆறு மாதகாலம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்டு உணர்ந்து ரசித்து மகிழ்ந்த நிமிடங்கள்.. அச்சிசுவின் சிரிப்பு, அதன் கண்கள், முகச்சாயல் என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்த கணம்.. எல்லாம் சேர்ந்து மனதை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் இழப்பை நினைத்து துவண்டு போய் இருக்கும் நாகம்மையின் முன்னால் தனது சோகத்தை காட்டிக்கொள்ளக்கூடாது என்று ராமசாமி முடிவுக்கு வருகிறார். தன் […]