தாவணிக்கனவுகள்
குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய நேர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அதே துண்டு பயன்படும் விதம் குறித்து எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள். அதிலும் பெண்குழந்தைகளால் பயன்படுத்தப்படும் விதம் அலாதியானது.
பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகளில் பலர் துண்டை தலையில் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். கூந்தலை அள்ளி கொண்டை போடுவது போலவோ, முன்பக்கம் கூந்தலைப் போடுவது போலவோ துண்டை பயன்படுத்துவதை […]







