December 24th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

எங்களின் அன்புத் தோழன் நந்தா வின் தகப்பனார் இன்று(டிசம்பர் 24.2007) காலை ஒன்பது மணியளவில் அமரர் ஆனார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் சொல்லில் வடிக்கவியலா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகப்பனை இழந்து நிற்கும் தனையனுக்கும் அவர்தம் குடும்பத்தினற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

December 13th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

சென்னை வந்து இரண்டு வருடங்கள் முழுமையாகி விட்டது. மும்பையில் இருந்து 2005 செப்டம்பர் கடைசி வாரத்தில் வந்திறங்கினேன். மும்பையிலேயே பழக்கமாகி விட்ட நண்பன் ஒருவன் இருந்ததால் அவனுடன் ஜாகையை வைத்துக்கொண்டாகி விட்டது. சென்னை வந்து நிறைய நண்பர்களையும் பெற்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அறை நண்பனுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக இன்னும் நாள் குறிக்கப்படாத அவனுடைய திருமணம் வரும் 2008 மே மாதம் இருக்கலாம். எனக்கும் அவனுக்கும் சரியான புரிதல் இருந்ததால்.. வேறு எவரையும் பாட்னராக சேர்த்துக்கொள்ளாமல்.. […]

December 10th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம். பசி என்று எவரும் இருந்து விட முடியாது.. செல்வந்தர்கள் பல அன்னதான சத்திரங்களை உருவாக்கி வருவோர், போவோர் […]