December 13th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

சென்னை வந்து இரண்டு வருடங்கள் முழுமையாகி விட்டது. மும்பையில் இருந்து 2005 செப்டம்பர் கடைசி வாரத்தில் வந்திறங்கினேன். மும்பையிலேயே பழக்கமாகி விட்ட நண்பன் ஒருவன் இருந்ததால் அவனுடன் ஜாகையை வைத்துக்கொண்டாகி விட்டது. சென்னை வந்து நிறைய நண்பர்களையும் பெற்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அறை நண்பனுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக இன்னும் நாள் குறிக்கப்படாத அவனுடைய திருமணம் வரும் 2008 மே மாதம் இருக்கலாம். எனக்கும் அவனுக்கும் சரியான புரிதல் இருந்ததால்.. வேறு எவரையும் பாட்னராக சேர்த்துக்கொள்ளாமல்.. […]