January 28th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை.
ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம்
எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது இரண்டு இடங்கள். […]
January 25th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.
சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவா போகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.. பசி.. காதை அடைக்க.., வேறு வழியின்றி.. ஒற்றை ஆடையுடன் வலம் வரும் தன் தோற்றத்தை வைத்து பிச்சை எடுத்து சில நாட்கள் கழித்தார் ராமசாமி.
மடங்களில் சாமியார்கள் […]
January 18th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
இருக்கின்ற பணிச்சுழலில் வலைப்பக்கமே வர முடியாமல் போய்க்கொண்டிருக்கிறேன். பின் எப்படி தொடர்ந்து எழுதுவதாம்.. தொடரப்பட்ட பெரியாரே காத்துக்கொண்டிருக்கிறார். அவரை காசியில் இன்னும் கஷ்டப்பட வைத்திருக்கிறேன். விரைவில் அவரை தென்னகம் கொண்டு வரவேண்டிய வேலையும் இருக்கிறது. அதுகுறித்து அவ்வப்போது யோசனை செய்தபடி இருந்த போதுதான்..
பேராசிரியர் தருமி எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கு முதலில் நன்றிகள். நான் எழுதியவற்றியில் பிடித்தவைகளை மட்டும் பட்டியலிடச்சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் குறைவாக கொடுத்திருக்கும் போது நான் மட்டும் எப்படி அடுக்கிக்கொண்டே […]