February 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
ஆம் நண்பர்களே! நான் சொல்லுவதெல்லாம் உண்மை. மேலே படத்தில் பார்க்கும் அந்த பெண் தான் கொலையானவர். இவர் பெயர் உமாராணி. இவரை எனக்கு எப்படி தெரியும்.. இவரின் கொலையில் நான் எப்படி சம்பந்தப்பட்டிருப்பேன் என்பது குறித்து அதிகம் குழம்ப வேண்டாம் நானே சொல்கிறேன்.
தற்போது செய்திப் பிரிவில் நான் வேலை பார்த்து வருவதால்.. அடிக்கடி அலுவலகத்தை விட்டு வெளியே செய்திக்காக போவது வழக்கம். அப்படி ஒர் அரசியல்வாதியின் நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான்.. உமாராணியை சந்தித்தேன். (அந்த அரசியல்வாதியிடம் […]
February 12th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.
நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.
வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.
மொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த […]