May 31st, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு இருக்கிறது. என் வீட்டில் எட்டாவது பையனாகிப் போனதால்.. நான் செய்யும் எதுவுமே அவர்களுக்கு புதியதாக படவில்லை. (முன்னோர்களால்.. ஏற்கனவே செய்யப்பட்டவைகளாக அவை இருந்திருக்கும் […]

May 31st, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

உங்களில் பலருக்கும் கென் தெரிந்தவராக இருக்கலாம். அனேக குழுமங்களில் சண்டைக்கோழி சேவலாக வலம் வரும் கோபக்காரன். ஆனால்.. மெல்லிய மனதுக்கு சொந்தகாரன். எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில் அவனுக்கு தகராறு உண்டு. அது அன்பாக இருக்கட்டும், கோபமாக இருக்கட்டும். கவிதைகள் மட்டுமே தன் வலைப்புக்களில் எழுதிக்கொண்டிருக்கும் கென், அவ்வப்போது உரைநடைபக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு. கவிதைகளை விட அவனது உரைநடைக்கு நான் வாசகன்.
இந்த வாரத்தில் பண்புடன் குழுமத்தில் அவன் எழுதி இருந்ததை பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
-OoO-
ஒன்றாம் வகுப்பு முதல் […]

May 30th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

சென்னைக்கு வரும் பதிவர்கள் பலரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தாலும், அதனை பதிவு நாம் போட்டு அறிவித்தாலும்.. எல்லோரின் கண்ணிலும் அப்பதிவு படுவதில்லை. விளைவு சந்திப்புக்கு முன்பாக எஸ்.எம்.எஸ் வழியாகவோ, தொலைபேசியோ சென்னையில் இருப்பவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பதிவு போட்டால் தானே பார்க்க முடியாமல் போகிறது.. மெயிலாக அனுப்பிவிட்டால்.. என்ற ரோசனையை செயல்படுத்த உடனடியாக(!) ஒரு குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது.

Homepage:

http://groups.google.com/group/chennaibloggersmeet

Group email:

chennaibloggersmeet@googlegroups.com

இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் நிர்வாகி மட்டுமே போஸ்ட் போட முடியும். […]