பார்வை
May 3rd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை நான். ஆனால், கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. அது அவளாக இருக்குமோ? சே, எப்படி அது அவளாக இருக்குமென்று மனதில் நியாயமான கேள்வி எழுந்தாலும் இன்னொரு புறம் ஏன் அது அவளாக இருக்கக் கூடாதென்றொரு காட்டுமிராண்டித்தனமான சிந்தனையும் பிறக்காமல் இல்லை.
எதைப் பற்றிப் பேசுகிறேன் என்கிறீர்களா? அதுதான் முக்கியமான பிரச்னை. அன்றும் எல்லா நாளைப் போலத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திங்கட் கிழமை. திட்டப்பணிகள் குறித்து எல்லா ஒப்பந்தக்காரர்களிடமும் கலந்தாலோசனை. எல்லாப் […]







