May 09

100% மொக்கை 0% விவாதம்- மே.18ம் தேதி பதிவர் சந்திப்பு!

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on May 09 2008 at 01:30 pm

ஆம் நண்பர்களே..

விடுமுறை காலம் தொடங்கி விட்டது. வெளிநாட்டு பதிவர்களில் பலர் தாயகம் வரக்கூடிய தருணம் என்பதால்.. இனி கொஞ்ச நாட்களுக்கு சந்திப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் நடக்கும். அதன் முதல் கட்டமாக..

வரும் மே 18ம் தேதி சிங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகை தரும் பதிவர் கோவி.கண்ணன் அவர்கள், பதிவர்களை சந்திக்கும் ஆவலை வெளிப்படுத்தியதன் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்:- வழக்கம் போல காந்தி சிலை, மெரீனா கடற்கரை.

நேரம்:- மாலை 5.30 மணி முதல் 7.30 வரை.
அவசியம் வாங்க…!! மொக்கை பெருமாளின் அருள் பெருக…!!

Popularity: 2% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

16 Responses to “100% மொக்கை 0% விவாதம்- மே.18ம் தேதி பதிவர் சந்திப்பு!”

  1. TBCD says:

    கோவியாரை சந்திக்க சிலர் தானிகளில் வரக்கூடும் என்பதால், இரானுவ பாதுக்காப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

    கோவி.கண்ணன் ஐயங்கார்,

    இரானுவ பாதுகாப்பிற்கு இணையாக லக்கி லுக் போன்ற அதிரடி வீரர்கள் வந்தால் பரிசீலிக்கவும்.

  2. மூக்கறுந்த சூர்பனகை says:

    நான் வரலாமா..அவர் மட்டும் தான் என்னை நினைச்சி பதிவு போட்டு இருக்கார்..

  3. டவுசர் says:

    சந்திப்பில் நிறைய கிழிஞ்சா, நாங்க தேவைப்படுவோமே, நாங்களும் வருவோம்…

  4. கும்பி says:

    அங்கே கும்பி அலோவ்டா….?

  5. சென்ற முறை அறிவிப்பின்றி வந்தேன், அதானால் சிலரை சந்திக்க முடிந்தது, இந்த முறை பல பதிவர்களை ஒரே இடத்தில் பாபாவின் (நம்ம தலதான்) அருளாசியால் சந்திக்க முடியும் என்று நினைக்கிறேன். அறிவிப்புக் கொடுத்த தலைக்கு நன்றி.

    எனது சந்திப்பு நிகழ்ச்சியில் ‘பதிவர் ரத்னா லக்கிலுக் !’ சிறப்புரையாற்றுவார். அனைவரும் வருக அருளாசி பெருக !

  6. போனமுறை இதே காந்திசிலைக்கு அருகே குசும்பனுக்காக நடந்த சந்திப்பில் தெளிக்கப்பட்ட பின்நவீனத்துவ அபிஷேக நீரால் ஏற்பட்ட ஜலதோஷமே இன்னும் தீரவில்லை. மறுபடியுமா? :(

    ஓக்கே! கும்மு கும்முன்னு கும்மிடலாம்!!!

  7. சுண்டல் முறுக்கு டீக்கு ஸ்பான்சர் ரெடியா?

  8. தூயா says:

    பாலாண்ணா நான் வரும் போது மேள தாளத்துடன் வரவேற்பீர்களா?

  9. நியூ ஜெர்சி -லிருந்து எந்த சிட்டி பஸ் புடிச்சா காந்தி சிலை ஸ்டாப்பிங்கில் இறங்கலாம். ஆட்டோ சார்ஜ் என்ன?

  10. ila says:

    சிபி சென்னையிலதானே இருக்காரு, இதுக்கு தனியா பதிவா வேற போடனுமா?

    மதி,
    ஆட்டோ அனுப்புவாங்கன்னு கேள்விப்பட்டுஇருக்கேன், சார்ஜயும் சேர்த்து தருவாங்கன்னு இப்போதான் தெரியும்.

  11. /மொக்கை பெருமாளின் அருள் பெருக…!!/

    பாகசவுக்கு வாய்ப்பளிக்காமல் பாலபாரதி தன்னைத்தானே கலாய்த்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  12. //எனது சந்திப்பு நிகழ்ச்சியில் ‘பதிவர் ரத்னா லக்கிலுக் !’ சிறப்புரையாற்றுவார்.//
    என்ன இது
    மொக்கை ரத்னா,மொக்கை பூஷண், மொக்கை விபூஷண் மொக்கை ஸ்ரீ போன்ற பட்டங்கள் எங்க தலைதான் குடுப்பார்.

  13. \\நியூ ஜெர்சி -லிருந்து எந்த சிட்டி பஸ் புடிச்சா காந்தி சிலை ஸ்டாப்பிங்கில் இறங்கலாம். ஆட்டோ சார்ஜ் என்ன?

    \\
    இதெல்லாம் ரொம்ப ஓவர்

  14. உள்ளேன் ஐயா..!!

  15. நானும் வலைபதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளலாமா? பாட்டில் என்றீர்களே, அப்படியென்றால் என்ன?

  16. பின்னூட்டக் கயமைத்தனம்!

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly