Aug 27

ஒரு முக்கிய அறிவிப்பு

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Aug 27 2008 at 06:55 pm

நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும் தேதியும் உறுதி செய்யப்பட்டபின் இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

முன்பே விஷயம் தெரிந்தும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களாக அறிவிக்கும் வரை ரகசியம் காத்த நண்பர்களுக்கு நன்றி. ஜிடாக்,மெயில், போன் என முடிந்த வகையிலெல்லாம் செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. :)  

எங்களின் உறுதிக்கு உரமளித்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.


எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Popularity: 12% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

109 Responses to “ஒரு முக்கிய அறிவிப்பு”

  1. இனிய உள்ளங்களை வாழ்த்தும் அன்பு நெஞ்சன்

    சென்னைத்தமிழன்

  2. நரேஷ் குமார் says:

    தலைவருக்கும், தலைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  3. johan paris says:

    இல்லறத்தில் இணைந்த உங்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

  4. கடலூர் முகு says:

    இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!

    பாலபாரதி,

    மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

    அன்புடன்,
    கடலூர் முகு

  5. Vaa.Manikandan says:

    Bala,

    Best Wishes!

    Vaa.Manikandan

  6. socrates says:

    இன்று தொடங்கும்
    இந்த உறவு பந்தம்
    நரை தட்டும் நாள்வரை
    குறைவின்றி தொடர
    என் அன்பான வாழ்த்துக்கள்.

    வேலை நிமித்தம் காரணமாக, வலைப்பக்கம் கடந்த சில நாள்களாக வர இயலவில்லை.

    அதனால் இந்த தாமதம்.

    - சாக்ரடீஸ்

  7. அன்புள்ள அண்ணாச்சி.

    மிக்க மகிழ்ச்சி. வெகுநாட்களுக்கு பிறகு உங்களின் எல்லா பதிவையும் படிக்கிறேன். மிகவும் திருப்தி.

    தாமதமான திருமணவாழ்த்துக்கு காரணம் வேறொன்றுமில்லை. சோம்பேறிதனம்தான். ஆனாலும் முன்பு சொல்லி இருந்தால் 106ல் ஒன்றாக போய் உக்கார்ந்திருக்கும். இன்று கொஞ்சம் ஸ்பெசலாக என்னை மட்டும் கண்டுக்கொள்வீர்கள்..:D

    நன்றி.

    அன்புடன்,
    லெனின் பொன்னுசாமி.

  8. என்ன அண்ணாச்சி.. ஒரு நன்றி கூட சொல்லமாட்டியளா? என்ன கொடும சார் இது?

  9. /லக்கிலுக் , /Beautiful Places at Night… அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்… //

    ஓவரா நடிக்காதப்பா. பத்திரிக்கை டிசைன் பண்ண சொன்னப்பவே லைட்டா நான் சந்தேகப்பட்டேன்யா..ஆனாலும் பாலகிருஷ்னன் என் பெரியப்பா மகன்னு உட்ட பாரு ஒரு உடான்ஸு.. மறக்க முடியல..:(:(

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly