October 25th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.
வெங்கட்ட […]

October 17th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இனிய நண்பர்களே,
தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்?
வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம்.
மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக் குரலாகவும் இந்திய அரசுக்கு […]

October 14th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இன்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இங்கே!
தீ ர் மா ன ம்  1.
இலங்கையில்  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு  மேலாக  தொடர்ந்து  நடைபெற்று வருகிற  இனப் படுகொலைக் கொடுமைக்கு  உள்ளாகி  ஆயிரக் கணக்கான  தமிழ்க் குடும்பங்களில்  பூவும்  பிஞ்சும்  போன்ற   குழந்தைகள் கூட  கொல்லப்பட்டு  பூண்டற்றுப் போகிற  அளவுக்கு  நிலைமை;  நாளுக்கு நாள்  பெருகி வருவதால்  ஏற்கனவே  கண்ணீர்க் கடலில்  மிதக்கும்  இலங்கைத்  தமிழர்கள்;  சிங்கள  இராணு வத்தின்  […]