Mar 14

வோட்டு போடுபவர்களின் கவனத்திற்கு..

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Mar 14 2009 at 09:38 pm

அதிகமாக ஏதும் சொல்லப் போவதில்லை. மேலே இருக்கும் படமே விசயத்தை சொல்லி விடும்.

மதவாதிகள் என்றுமே எனக்கு ஆகாதவர்கள்.. அதோடு.. ஈழத்தமிழர்களுக்கும் நமக்கும் துரோகம் செய்தவர்கள் ஆளும் கட்சியினர்.. எனவே.. இருவரையும் ஒதுக்கவேண்டும் என்பது என் கோரிக்கை. விருப்பமுள்ளவர்கள்.. வலது ஓரத்தின் கீழ் இருக்கும் ‘எதிர்ப்புக்கு ஆதரவுக்கரம் நீட்ட’ என்ற பொத்தானை அமுக்கி, இதனை தங்களது வலைப்பக்கத்திலும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

Popularity: 2% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

19 Responses to “வோட்டு போடுபவர்களின் கவனத்திற்கு..”

  1. பின்ன, யாருக்கண்ணா வோட்டு போடுறது? :-(

  2. அபிஅப்பா says:

    தல நானுமா?

  3. சிவஞானம் ஜி says:

    தல
    சென்னை-கிழக்கு நாடாளுமன்றத்தொகுதில் போட்டியிடுவதாக பரபரப்பு கிளம்பியுள்ளதே!
    உண்மையா?

  4. பாஜக, காங்கிரஸ் கூட்டணி இரண்டும் வேண்டாம்னா அப்போ தமிழ்நாட்டுல அம்மா(?) ஜெயலலிதாவை தான் ஆதரிக்கனுமா? அதென்ன தல காங்கிரஸ் கூட்டணி? தமிழ்நாட்டுல அதுக்கு பெயர் திமுக கூட்டணி… காங்கிரஸ் கூட்டணி லேது…. செண்டர்ல தான் தால அது காங்கிரஸ் கூட்டணி

  5. மொத்தத்துல ஓட்டே போட கூடாதுன்னு சொல்லவர்றீங்க

  6. குழலி, நடக்கவிருப்பது பிரதமருக்கான நாடாளுமன்றத் தேர்தல். அதனாலேயே அவ்விரு கூட்டணிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. டாக்டர். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில்தான் இன்னமும் நீடிப்பதாக அக்கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார். மேலும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் வெற்றி பெரும் என்றும் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியல்வாதிகள் இருவருமே ஐக்கிய முற்போக்கு கூட்டணியை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லும்போது நீங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது.

  7. குரு says:

    //அன்புமணி ராமதாஸ் கூட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் வெற்றி பெரும் என்றும் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியல்வாதிகள் இருவருமே ஐக்கிய முற்போக்கு கூட்டணியை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லும்போது நீங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது//

    :-) ))))))))))))))

  8. //காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி//

    தல! அது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இல்லே!

    ராஜபக்ஷே தலைமையிலான கூட்டணி!

  9. தமிழகத்தில் மாற்றங்கள் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை இருந்தது.ஒரு கட்சியும் நம்பிக்கை அளிக்கவில்லை.அதே பேரம் பேசும் பழைய கூட்டணிகள்.

  10. இரட்டை இலைக்கு வாக்களிப்போம். ஈழத்தமிழர்களுக்காக உடல் வருத்தி உண்ணாநோன்பு இருந்த உலகத்தின் ஒரே தங்கத் தாரகையை இந்திய பிரதமராகவோ, அதிபராகவோ ஆக்குவோம்.

  11. இரட்டை இலைக்கு வாக்களிப்போம். ஈழத்தமிழர்களுக்காக உடல் வருத்தி உண்ணாநோன்பு இருந்த உலகத்தின் ஒரே தங்கத் தாரகையை இந்திய பிரதமராகவோ, அதிபராகவோ ஆக்குவோம்.

  12. //பாஜக, காங்கிரஸ் கூட்டணி இரண்டும் வேண்டாம்னா அப்போ தமிழ்நாட்டுல அம்மா(?) ஜெயலலிதாவை தான் ஆதரிக்கனுமா?//

    நல்ல கேள்விதான் ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் நண்பர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லையோ என்னவோ!.

    அந்த அம்மா தமிழர்களுக்கு எதிரிதான் ஆனால், அந்த அம்மா முடிவெடுத்தால் செய்துவிடும், ஆனால் அப்பா இருக்காரே அப்பப்பா! கடைசிவரை இழுத்தடித்து கழுத்தறுப்பவர்.

    என்னவோ பாலா நான் எவனுக்கும் ஒட்டுப்போடப்போவதில்லை. காங்கிரசு எங்கள் ஊரில் தேர்தலில் நிற்கும் அவர்களை எதிர்த்து என்ன செய்வது என்பதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

  13. ஐயையோ.. லக்கிலுக் வலைப்பூவும் ஹேக் செய்யப்பட்டதா?

  14. இதுதாங்க நாம எல்லோரும் செய்ய வேண்டியது.

  15. //என்னவோ பாலா நான் எவனுக்கும் ஒட்டுப்போடப்போவதில்லை. காங்கிரசு எங்கள் ஊரில் தேர்தலில் நிற்கும் அவர்களை எதிர்த்து என்ன செய்வது என்பதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம்.//

    இரா.சுகுமாரன் வழக்கம்போல மாம்பழத்துக்கு ஓட்டு குத்தலாமே? நாம எல்லாம் சாதி பார்த்து தானே தலைவர்களை எதிர்க்குறதும், ஆதரிக்கிறதும். கருணாநிதி செஞ்சா துரோகம். ஏன்னா அந்தாளு வேற சாதி. டாக்டர் ஐயா செஞ்சா அது தமிழின உணர்வு. ஏன்னா ஐயா நம்ம சாதி.

  16. இரா.சுகுமாரன் says:

    //நாம எல்லாம் சாதி பார்த்து தானே தலைவர்களை எதிர்க்குறதும், ஆதரிக்கிறதும்//

    எவன் சொன்னது நான் வன்னியர் என்று? நல்ல கற்பனை இப்படித்தான் எதாவது பிளாகில் வந்து உளறுரது?.

    எல்லாத்துக்கும் சாதிதான் உங்கள் அடையாளம் எனத்தெரிகிறது. இந்த பதிலை எழுதியாது யார் என்று எனக்கு தெரிகிறது.

    கருணாநிதியின் அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்த எதாவது வசைமாற வேண்டாம்.

    கருணாநிதி என்ன செயலலிதாவாக இருந்தாலென்ன இராமதாசு, திருமாவளவனாக அல்லது எவராக இருந்தாலென்ன இவர்கள் எல்லோரும் ஒருவகையில் தமிழின எதிரிகாளாக வே இருக்கிறார்கள்.

  17. தமிழ் குரல் says:

    பாலா,

    படம் எல்லாம் நன்றாக உள்ளது… இதனை நான் ஆதரிக்கிறேன்… இதில் தமிழின எதிரி ஜெ… தவிர்க்க முடியாதே… அவரும் அடுத்த பிரதமர்/துணை பிரதமர் போட்டியில் இருக்கிறார்…

    ஜெ.. தெளிவாக சொல்லிவிட்டார்…

    1.சிங்கள அரசியல் சட்டதிற்கு உட்பட்டு தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டும்…
    2. ரகசியமாக ஆயுதம் கொடுப்பதை கண்டித்துள்ளார்… அவர் கையில் அதிகாரம் போனால்… அவரது சிங்கள சகோதர்களுக்கு பகிரங்கமாக ஆயுதம் கொடுப்பாரே?

    எனது தாழ்மையான வேண்டுகோள்… அடுத்த பிரதமர் போட்டியில் இருக்கும்… ஜெவின் படத்தையும் சேர்த்து… எதிர்த்தால்… நம் கொள்கைக்கு சரியாக இருக்குமே?

  18. kanagaraj says:

    TAMILINA THUROGIKAL NASAMA POGANUM NU SABIKKIRATHA THAVIRA ONNUM PANNA MUDIALIYE INTHA KAIYALAKATHA TAMILANAL

  19. சீனு says:

    சைக்கிள் கேப்புல 3வது அணிக்கு ஆதரவு கேக்குறீங்களா???

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly