Apr
21
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே…!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, [...]
Tags: ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி, கவிதை
அரசியல், வீடியோ
Apr
21
கவிமடத்தை கட்டிய அண்ணன் ஆசிப்மீரான் அவர்கள் பதிவர்களை சந்திக்க விருப்பம் கொண்டிருப்பதால்.. இந்த பதிவர் சந்திப்பு.
வழக்கமான இடம்:- மெரினா காந்திசிலை அருகில்
நாள்:- ஏப்ரல் 25 -2009
நேரம்:- மாலை 5.30 முதல் 7 மணி வரை
சிறப்பு விருந்தினர்:- ஆசிப்மீரான்
சிறப்பு அழைப்பாளர்கள்:- நீங்க எல்லோரும் தான்..
வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் வாங்க!!
விரும்புகிறவர்கள் அனைவருக்கும் கரப்பான் பூச்சி விருது வழங்கப்படும்..
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பதிவர் சதுரம் ;-)), விளம்பரம்
Apr
03
தமிழக முதல்வர் கருணாநிதியின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
இன்று முதல்வரின் கோபாலபுரம் வீட்டு முகவரிக்கு விடுதலைப்புலிகளின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தில் கொலை மிரட்டல் வந்திருக்கிறது.
மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையின் செய்திக்குறிப்பு சொல்கிறது.
***
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: அரசியல், கருணாநிதி, முதல்வர், விடுதலைப்புலிகள்
அரசியல், தகவல்கள்