Dec 05

FLASH NEWS: அரசியலிலிருந்து ஓய்வு – கருணாநிதி அறிவிப்பு

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Dec 05 2009 at 09:06 pm

புதிதாக கட்டப்படும் சட்டசபை கட்டடம், அண்ணாதுரை நூற்றாண்டு நூலகம் திறப்பு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகிய விழாக்களில் பங்கேற்ற பிறகு உங்களில் ஒருவனாகி விடுவேன், என, முதல்வர் கருணாநிதி பேசினார்.அருந்ததி இன மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதற்காக, முதல்வர் கருணாநிதியை பாராட்டி, அருந்ததி மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாலை பாராட்டு விழா நடந்தது.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:வள்ளுவர் கோட்டத்தில் எத்தனையோ விழாக்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால், அத்தகைய விழாக்களில் பங்கேற்றதை விட ஒரு மகிழ்ச்சி, உணர்ச்சி இந்த விழாவில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்துள்ளது. அடித்தட்டு மக்களுக்காக, என்னுடைய பாலபருவத்திலிருந்து நான் பாடுபட்டு வருகிறேன்.நீங்கள் எல்லாம் அடித்தட்டில் இருப்பதுபோலவும், நாங்கள் கோபுரத்தில் இருப்பது போலவும் எண்ணக் கூடாது. அடித்தளம்தான் கோபுரத்தை தாங்குகிறது. அடித்தளம் நன்றாக அமைய வேண்டும். அதற்கு தொடர்ந்து பணி செய்து வருகிறேன்; தொடர்ந்து செய்துவருவேன்.இப்படி நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து தான் உங்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்ற எண்ணம் எழுகிறது.புதிதாக கட்டப்படும் சட்டசபை கட்டடம், அண்ணாதுரை நூற்றாண்டு நூலகம் திறப்பு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகிய விழாக்களில் பங்கேற்ற பிறகு உங்களில் ஒருவனாகிவிடுவேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

http://www.dinamalar.com/latest_news.asp#28978


இதன் மறைபெருள் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

Popularity: 13% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

4 Responses to “FLASH NEWS: அரசியலிலிருந்து ஓய்வு – கருணாநிதி அறிவிப்பு”

  1. M.R.Prabhusankar says:

    சூரியனுக்கு ஓய்வு கிடையாது தோழரே.. மனப்பால் குடிக்கவேண்டாம்

  2. ஜெ, பாலா, கோவை says:

    அரசியல் கத்துக்குங்கப்பா…

  3. //பங்கேற்ற பிறகு உங்களில் ஒருவனாகிவிடுவேன்.//
    யப்பா! முடியல……

  4. jeyapal says:

    Long overdue. The young and energetic should be allowed to take over.

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly