Mar 22

தமிழ்-99 (tamil-99)கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடி..!

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Mar 22 2008 at 11:51 pm

tamil99

தமிழ்-99 பாவிப்பவர்கள், ஆர்வலர்களுக்கு.. இச்செய்தி நிச்சயம் இனிப்பானதாகவே இருக்கும். பல நாட்களாக.. நாங்கள் ஆசைப்பட்ட தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர் தயாராகி விட்டது. நண்பர் பாரிஅரசு தயாரித்திருக்கும் இந்த கீபோர்டு ஸ்டிக்கர் இரு வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பின்புலம் கருப்பு வண்ணத்திலும் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் ஒரு வடிவம்; இன்னொரு வடிவம்.. பின் புலம் வெள்ளை வண்ணத்திலும், எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் தோன்றும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கர் ஒரே வண்ணத்தில் ஒரு சோடியாக தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்டிக்கர் பாவிப்பவர்கள் அதை கீபோர்டில் ஒட்டும் போது, ஏதாவதொரு எழுத்து சரியாக ஒட்டாமல் போனாலோ.. அல்லது பசைத்தாளில் இருந்து எடுக்கும் போது கிழிந்து போனாலோ… இன்னொன்றில் இருக்கும் எழுத்தை எடுத்து ஒட்டிக்கொள்ளலாம்.

இலவசமாகவே கொடுக்க நினைத்திருந்தோம். தற்போது அது இயலாமல் போய் இருக்கிறது. நிறைய நேரம்+ பொருட்செலவில் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கரின் விலை- ரூ.6/-(ரூபாய்.ஆறு). இதனை விட குறைந்த செலவில் தான் தயாரிக்க நினைத்திருக்கிறார்கள். ஆனால்.. விலை கட்டுப் படியாகமல் போகவே.. ஸ்டிக்கரை விலைக்கு விற்க வேண்டிய நிலை வந்து விட்டது.

தமிழை தமிழால் சிந்தித்து தட்டச்சு செய்ய..

தமிழ்-99க்கு மாறினால் மட்டும் போதாது…

மற்றவர்களையும் மாறச்சொல்லுங்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு.. இந்த ஸ்டிக்கரை வாங்கி பரப்புங்கள்.

சென்னையில் தேவை இருப்பவர்கள் என்னையோ (9940203132), அண்ணன் மா.சிவக்குமார் (9884070556) அவர்களையோ தொடர்புகொள்ள வேண்டுகிறோம். மற்ற ஊர்களில் வசிக்கும் நண்பர்களும் கூட மொத்தமாக வாங்கி… சில்லரையாக விற்பனை செய்துகொள்ளலாம்.

 தமிழ்99 பயன்படுத்துவது குறித்த மின்நூல்:- http://tamil99.org/tamil99-typing-guide.pdf இந்த சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் அஸ் கொடுத்து சேமிக்கலாம்.

தொடர்புடைய சுட்டி:- பாரி.அரசு  http://kaniniarimugam.blogspot.com/2008/03/99.html

நினைவுக்கு:-

வரும் மார்ச்30ம் தேதி மொக்கைச் சந்திப்பிலும் இந்த ஸ்டிக்கர்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

15 Responses to “தமிழ்-99 (tamil-99)கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடி..!”

  1. ravishankar says:

    மகிழ்ச்சி.

  2. 2 sticker parcel

  3. நான் கருப்பு நிற விசைப்பலகை பாவிக்கிறேன். அதில் தமிழ் எழுத்துகளை எழுதிப்பார்த்ததில் நீலம், சிவப்பு இரண்டுமே பயன்படவில்லை. இதற்காகவே வெண்ணிற விசைப்பலகை வாங்க ரிச்சி தெரு போக எண்ணி, சோம்பலால் ஒத்திப்போட்டு வருகையில் இப்படி ஒரு மலிவான தீர்வு! ஒவ்வொரு நிறத்திலும் 5 பட்டைகள் எனக்கணக்கிட்டு ரூ. 60 -க்கான காசோலையும் (at par/multicity), மற்றும் என் முகவரி எழுதி, தபால்தலைகள் ஒட்டிய உறையும் அனுப்பி அஞ்சல் வழி பெற்றுக்கொள்ள முடியுமா?

    நன்றி.

  4. //5 பட்டைகள் எனக்கணக்கிட்டு ரூ. 60 -க்கான காசோலையும் (at par/multicity), மற்றும் என் முகவரி எழுதி, தபால்தலைகள் ஒட்டிய உறையும் அனுப்பி அஞ்சல் வழி பெற்றுக்கொள்ள முடியுமா?//

    நிச்சயம் முடியும் சரவணன்..

    அதை விட, சென்னையில் இருப்பவரானால்.. மார்ச் 30ல் நடக்கும் பதிவர் சந்திப்பு அன்று கூட நீங்கள் நேரில் வந்தால் பெற்றுக்கொள்ள முடியும்.

    இப்படியான ஆர்வளர்களினால் தான் தமிழ்99 பரவலாக்கும் திட்டம் முழுமையடையும்.

    என்ன பாலா பாய் நான் சொலுவது சரிதானே..!

  5. சரிதான் ப்ரியன்.. :)

  6. எப்படியும் மார்ச் 30 நான் சென்னையில் இல்லை. மேலதிக விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பினால் நலம்!

  7. ravishankar says:

    பாலா, சரவணன் கேட்டது போல் இன்னும் சிலரும் கேட்கக்கூடும்.

    வினியோக விவரங்களை இன்னும் தெளிவாகச் சொன்னால் tamil99.org தளத்தில் போட்டு விடலாம்.

    அஞ்சலில் பெற விரும்புவோர் குறைந்தது எத்தனை ஒட்டிகள் வாங்க வேண்டும்?

    அவர்களே முகவரி எழுதிய அஞ்சல் தலை ஒட்டிய உறை அனுப்ப வேண்டுமா? இல்லை, நீங்களே கூரியரில் அனுப்புவீர்களா? கூரியர் செலவு எவ்வளவு?

    இது குறித்து முன்பு தமிழ்99 குழுமத்தில் நிறைய உரையாடினோம். தொடர்ந்து அங்கு உரையாடுவோமா?

  8. சிறப்பான முயற்சி.. பாரி அரசுக்கும் தலைக்கும் வாழ்த்துக்கள் :) )

  9. கோபி says:

    மகிழ்ச்சியான தகவல். எனக்கும் சில ஒட்டிகள் தேவை. விவரங்களை தொலைபேசும் போது தெரிவிக்கிறேன்.

  10. அரசு says:

    வணக்கம்,

    உடனடியாக அறிமுக பதிவெழுதிமைக்கு மிக்க நன்றி! 4 நாட்கள் பயணமாக சென்னை வந்ததால் உங்களையும், நந்தாவையும் சந்திக்க இயலாமல் போய்விட்டது.

    ஒட்டிகளுடன் கையேடும் உள்ளது. (தற்போது அச்சில் இருக்கிறது)இன்னும் ஒரிரு நாட்களில் அது மா.சி யிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறேன்.

    நன்றி

  11. மகிழ்ச்சியாக உள்ளது..! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  12. தமிழ்99 ஆர்வத் தனம்! :)

  13. \\தமிழ்99 ஆர்வத் தனம்\\
    repeat ee ee ee

  14. நான் இதுவரையிலும்(இவ்வெழுத்துக்களை) எழுதும்போதும் அஞ்சல் போனிடிக் முறையே பயன்படுத்தி பழகிப்போயுள்ளேன். மா சிவகுமாரை இதற்காகவாவது சந்தித்து ஒட்டியை வாங்கவேண்டும்!

    வாழ்க உங்கள் சிறப்பான பணி.

    அன்புடன்,
    அன்பு

  15. நான் எனது இணைய தளத்தில் தமிழில் தட்டச்சு செய்யும் முறை பற்றி எழுதியுள்ளேன்..

    http://www.senthil.co.nr

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly