Category Archives: குழந்தை வளர்ப்பு

கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

  அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 Comments

திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , | 1 Comment

ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

*எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம் | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

தொட்டுத்தொட்டு ஓடிவா!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதற்கும் நேரமில்லை நம்மிடம். நட்பு, அன்பு, உறவுகள் என எல்லாவற்றின் இடங்களையும் மின்னனுப்பொருட்கள் பிடித்துக்கொண்டுவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்வரை உறவினரின் வீட்டுக்குப்போகிறோம் என்றால், தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும். விளம்பர இடைவேளையின் போதுதான் நம்மிடம் பேசுவதற்கு திரும்வார். இன்று பலரின் வீட்டுக்கு வரும் விருந்தினர்களோடு, … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , | Leave a comment

டிஸ்லெக்ஸியாவா? அச்சம் வேண்டாம்!

பிள்ளைகளுக்கு எழுத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குறைபாட்டினை டிஸ்லெக்ஸியா என்று சொல்கிறது மருத்துவ உலகம். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர், தேவைக்கு அதிகமாகவே அச்சப்படுகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்கிறது மருத்துவம். உலகம் வியக்கும் பல பெரியமனிதர்களும் சிறுவயதில் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலர் அறியாத செய்தி. இப்பிள்ளைகள் எழுத்தை மாற்றிப்போட்டு எழுதுவதும், மாற்றிப்போட்டு வாசிக்க … Continue reading

Posted in குழந்தை வளர்ப்பு, தகவல்கள், விளம்பரம் | Tagged , , , , | Leave a comment