Category Archives: குழந்தை வளர்ப்பு

பிள்ளைத் தமிழ் 7

(கற்றல்குறைபாடு- தொடர்பாக) பள்ளி செல்லும் பிள்ளைகளில் 10 முதல் 15 சதவீதம் பேர், விதவிதமான கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தகவலை, டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு சொல்கிறது. இதுவொரு தோராயமான கணக்குதான் என்றாலும், என்னளவில் இது கண்டிப்பாக அதிகமாகவே இருக்கக்கூடும். ஏனெனில், நானே கற்றல் குறைபாடு உடையவன். நான் … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் | Tagged , , , , | Leave a comment

பிள்ளைத்தமிழ் 6

குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும்போது, எல்லோருமே மதிப்பெண் முக்கியமில்லை என்று திகட்டத் திகட்ட சொன்னாலும்கூட, யதார்த்தத்தில் யாராலும் மதிப்பெண்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்துவிட முடிவதில்லை. நம் குழந்தைகள் நன்கு படிக்க, நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு குழந்தைகள், மலையேறும் பயிற்சிக்காக, கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும், கீழே நின்று … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் | Tagged , , , , , , , , | Leave a comment

பிள்ளைத் தமிழ் 5

அறிந்தவர், தெரிந்தவர் வீட்டுப் பிள்ளைகளைக் கொஞ்சும்போது, சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் கேள்வி ‘என்னவாகப்போறே?’ என்பது. அந்தக் குழந்தையும், டாக்டர், கலெக்டர் என்று ஏதேனும் ஒரு பதிலைச் சொன்னதும், நாமும் பாராட்டிவிட்டு அடுத்தக் கேள்விக்குப் போவோம். அதே நேரம், நம் சொந்தக் குழந்தையை நோக்கி, நம்மில் எத்தனை பேர் அந்தக் கேள்வியை மனமாறக் கேட்கிறோம் என்று … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பதிவர் பட்டறை | Tagged , , , | Leave a comment

பிள்ளைத்தமிழ் 4

நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன். பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் | Tagged , , , | Leave a comment

பிள்ளைத்தமிழ் 3

தொழில் சார்ந்து, நான் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், இன்றைய இளம் வயதுடையோரின் எண்ணங்கள் என்ன மாதிரி இருக்கின்றன, அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், இச்சமூகம் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் அறிந்தவனாக இருக்கிறேன். இன்றைய பல பெற்றோர் முக்கியமானதாகக் கருதும் விஷயங்களில் ஒன்று, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் | Tagged , , , | Leave a comment