Category: மீடியா உலகம்

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • The Story of Bottled Water

    இன்று அனேக மக்கள் பாட்டில் குடிநீர் தான் சுத்தமானது என்றும் சுகாதாரமானது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் பெருமுதலாளிகளின் பயங்கரமுகம் பற்றி இவ்விவரணைப்படம் பேசுகிறது. நம் சென்னையின் புறநகர் பகுதில் இருக்கும்(பள்ளிக்கரணை ஏரி அருகில்) கும்பை மேடு குறித்தும் இதில் வருகிறது. இப்படத்தை தயாரித்தவர்கள், இது போன்று சந்தைப்படுத்தப்படும் பலவற்றைப் பற்றி மக்களிடம் கொண்டு போய்ச்சேர்க்க ஒர் இயக்கத்தையே நடத்துகின்றனர் அவர்களின் வலைத்தள முகவரி: http://www.storyofstuff.org/ —

  • ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

    ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்! (டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின்…

  • ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…”

    சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர். எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள்…

  • ’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்

    நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… நட்பு வேறு அரசியல் பார்வை வேறு என்று இருவருக்குமே புரிந்திருந்ததால்.. இன்றும் இந்த நட்பு இனிமையாக தொடர்கிறது. ஈழம் பற்றி…