Category Archives: கட்டுரை

உப்பு வேலி – நூல் அறிமுகம்

(நீண்ட நாட்களாக நூல் அறிமுகம் ஏதும் எழுதவில்லை. பழைய நூல்கள் தான் என்றாலும் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வது நன்றாக இருக்கும் என்று எண்ணுவதால், இனி அவ்வப்போது, நூல்கள் குறித்து எழுததிட்டம்) ராய் மாக்ஸம் எனும் பிரிட்டீர் ஆய்வாளர், ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு நூலை கண்டெடுக்கிறார். அது, 1893இல் வெளியான மேஜர் ஜெனரல் … Continue reading

Posted in கட்டுரை, நூல் விமர்சனம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , | Leave a comment

புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

பிள்ளைத் தமிழ் 10

‘பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் (சோறு) கிடைக்காது’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. எவனொருவன் பொய் பேசுகிறானோ, அவன் உணவுகூடக் கிடைக்காமல் பசியால் துன்புறுவான் என்பதே இதன் பொருள். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள் 292) என்பது வள்ளுவனின் வாக்கு! ஆகா, பொய் பேசுதல் என்பது இங்கே காலங்காலமாக … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் | Tagged , , , , , , | Leave a comment

சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , | Leave a comment

பிள்ளைத்தமிழ் 9

(உடல் பருமன் பாதிப்புகள்) அதிகாலைப்பொழுதில் நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டம் என்று ஒரு சிலர் சுறுசுறுப்பாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இன்னும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் வந்து சேரவில்லை. விளைவு, உடலில் தேவையற்ற கொழுப்பு கூடுவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. 40 வயதுக்குள்ளாகவே இதயநோய்ப் பிரச்னையில் சிக்கிக்கொண்ட பலரையும் பார்க்க முடிகிறது. 33 வயதிலே ‘ஸ்டெண்ட்’ … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ் | Tagged , , , , , , , | Leave a comment