Category: ஆட்டிஸம்

  • நிப்மெட்டை -மாற்றாதே!

    எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன். நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம். சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது…

  • தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’

    சிறப்புக்குழந்தைகளின் தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’மொபைல் செயலி. ஆட்டிசநிலைக் குழந்தைகளில் பலரால் பேச முடியாது. பேசுபவர்களிலும் பெரும்பாலானோர் முழுமையான வடிவில் பேசமாட்டார்கள். பெரும்பாலும் துண்டு துண்டான சொற்களையே சொல்லுவார்கள். அதன் மூலம் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அந்த துண்டுவார்த்தைகளையும் புரிந்துகொள்ளாமல் கடந்துவிடுவோர் அதிகம். ஆட்டிசம் என்றில்லை, வேறுபல வகையான அறிவுசார் குறைபாடு உடையவர்களும் கூட சரளமான பேச்சுத் திறன் அற்றவர்களாகவே இருப்பர். தங்களுடைய எண்ணங்களை பகிரமுடியாமல் போவதின்…

  • கிண்டில் நூல் இலவசம்

    கிண்டில் பதிப்பில் உள்ள எனது நூல்ககளை, கீழ்காணும் தேதிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். *1.07.21 முதல் 02.07.21 வரை – ஆட்டிசம் சில புரிதல்கள்* https://tinyurl.com/autismsila *03.07.21 முதல் 04.07.21 வரை – சந்துருவுக்கு என்னாச்சு?* https://tinyurl.com/chandrukku *05.07.21 முதல் 06.07.21 வரை – அன்பான பெற்றோரே!* https://tinyurl.com/anbana *07.07.21 முதல் 08.07.21 வரை – துலக்கம் (குறுநாவல்)* https://tinyurl.com/thulakkam குறிப்பிட்ட நாட்களில் மதியம் 12.30க்கு தொடங்கி, மறுநாள் 12.29 வரை இச்சலுகை இருக்கும்.

  • போலிகள் போலிகள் -ஆஷா லெனின்

    இது விழிப்புணர்வு எச்சரிக்கைப் பதிவு “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான் ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா.…

  • அவசியமான முன்னெடுப்பு

    டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில் பல்வேறு வகையான சென்சரி பிரச்சனைகளை சந்தித்தவர். நல்வாய்ப்பாக தனது தகவல் தொடர்பாற்றலை மேம்படுத்திக் கொண்டு நிகர் சராசரி வாழ்வை(near normal life) அடைந்த சாதனையாளர். சிறுவயதில் அவருக்கு இருந்த எண்ணற்ற சிக்கல்களில் ஒன்று தொடு உணர்வைப் புரிந்து கொள்வதில் உள்ள குழப்பம். அதாவது எதை இறுகப் பற்றுவது, எதை மென்மையாகப் பற்றுவது என்ற புரிதல் இல்லாமல்…