ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை.

பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம்.

சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.

இதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக்கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அரசு கூட ஆட்டிசம் என்பதை தனித்துறையாக கொள்ளாமல், மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறு பட்ட அளவுகளில் இருக்கும் – மிக மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.

ஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள்..

எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது

கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது

பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல்

காரணமற்ற சிரிப்பு

மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்

தனது விருப்பத்தை குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி சுட்டிக்காட்ட மாட்டார்கள்

சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது

பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பார்கள்

பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வார்கள்

தனது தேவைகளை உணர்த்த பெரியவர்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள்

அதீதமான பதட்டம், ஹைப்பர் ஆக்டிவிட்டி அல்லது அதீதமான மந்தத் தன்மை-யோடு இருப்பார்கள்

காரணமில்லாமல் மோசமான அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை அடைவார்கள்

வலி பற்றிய பிரக்ஞை இல்லாதிருத்தல் அல்லது வலியை உணராது இருப்பது

வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளை தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்

வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்

சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்புவதில்லை

தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணருவது

பொருளற்ற சொற்களை திருப்ப திருப்பச் சொல்லுவது

பொருட்களை சுற்றி விட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது

நன்றி:- http://www.autism-india.org

This entry was posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், விளம்பரம், Flash News and tagged , , , , , , , . Bookmark the permalink.

22 Responses to ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

 1. navabharathi says:

  Dear Sir,
  I read all the details of Autism……. but now a days most of the child in 100 one 10 only don’t have the attitude. How we identify this……….. please tell me this in detail way and how we took treatment for this.
  Thanks,
  Navabharathi.R

 2. vivek says:

  இதற்கான மருத்துவ முறை, பயிற்சி அல்லது தீர்வு..?

 3. rathnavel says:

  அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

 4. chinnapiyan says:

  thank u Dr. thank u. I will make sure to spread this awareness to others. best wishes.

 5. dinesh says:

  Sir,
  That was one useful information you have shared regarding autism in children. Iam residing in Trichy and my sisters child is affected with autism. He is 10 years of age and we could not find a suitable school/institute in Trichy which trains autism affected children. Can you please help me find any Institute which has got the necessary knowledge to train the children.
  HOpe you can help me in this.

  Regards
  Dinesh.R

 6. v.krishnakumar says:

  நன்றி நன்றி . மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி புரியவைக்க அருமையாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள்

 7. Hi Mr. S. Balabarathi

  It looks nice to see your Autism Related article in Tamil and today is 2nd April = World Autism Awareness Day 2012. Nice Article written by you. Most Interesting is the Poster Preparation on Autism Symptoms in Tamil by you. It will benefit many Occupational Therapist in Tamil Nadu and they can use this in their Centre for Autism Awareness Program. At present Tamil Nadu has many centers concentrating on Autism/PDD, Dyspraxic/SPD, Dyslexic/LD, ADHD, Indigo Kids & Handwriting Difficulty Children. Awareness is vast than North India I believe. More conference and workshop happens in North India. But Increase amount of services available mostly in south India mainly Chennai & Bangalore as I believe.

  Regards,

  Dr. K. Naresh Babu M.O.T.(Neuro)., MSc.(Psy).,
  A.C.O.T.: 051117 & A.I.O.T.A.: 3276/06
  Senior Occupational Therapist, Fomento Resources
  Panaji Goa. Mob: 09881121840.

 8. Pingback: ஆட்டிசம் – உட் பிரிவுகள் | யெஸ்.பாலபாரதி

 9. Pingback: ஆட்டிசம் – சரியும் தவறும் | யெஸ்.பாலபாரதி

 10. I read your blog on autism. Thanks for spreading awareness. We have been doing awareness and therapy since 2006 at madurai and all over India and in certain parts of the world. Please visit our website http://www.velvi.org and click on the autism door.
  Autism, we have to understand is not a disease and hence not curable. It can be managed. There are some schools in Madurai working for early intervention.
  I may be contacted by email and phone
  my mobile numbers : 9489873751/9655573751
  I work with young children and adults and teens using Multiple Intelligence Theory and Theory of Mind and identify their special intelligence and nurture that intelligence to lead an independent life. Please also visit http://www.autismbrainstorm.com and see work related to me and others.

 11. Pingback: ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1 | யெஸ்.பாலபாரதி

 12. நண்பா… இந்த மொத்த கட்டுரை இப்போதுதான் படிக்க நேரிட்டது. நான் பல நாட்களாக எழுத நினைத்த ஒன்று. உங்க அனுமதி இருப்பின் என் ப்ளாக்கில் போட்டுக்கொள்ளட்டுமா?

 13. Ganesan says:

  இதற்கான மருத்துவ முறை, பயிற்சி அல்லது தீர்வு..?

 14. Pingback: சொல்வனம் » பாதரசம் என்னும் உயிர்கொல்லி

 15. shafi says:

  இதை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் …

 16. shanmugam says:

  என் மகனுக்கு வயது 1வருடம் 9 மாதங்கள் அகின்றன அனால் அவனுக்கு ஆடிசம் அறிகுறி இருப்பதாக தோன்றுகின்றது. நான் பாண்டிச்சேரியில் இருக்கிறேன். அருகில் மருத்துவர் இருந்தால் அவர் முகவரி அனுப்பவும்..

 17. 2008rupan says:

  வணக்கம்

  தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  பார்வையிட முகவரி இதோ-http://blogintamil.blogspot.com/2014/08/5.html
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 18. இன்றைய வலைச்சரத்தில் உங்களுடைய தளம் பற்றிய தகவலைப் பகிரந்துள்ளேன்.
  இணைப்பு http://blogintamil.blogspot.com/2014/08/5.html

 19. C PREM KUMAR says:

  pictorial representation is excellent

 20. M.Geetha says:

  வணக்கம் சார்…ஆட்டிசம் குறித்த உங்களது பதிவுகள் தெளிவான பார்வையை தருகின்றன.மிக்கநன்றி..உங்கள் அனுமதியுடன் பகிர்கின்றேன்.

 21. Suganya says:

  My child is 2. 5yrs old she is behaving little like has you mentioned above her pediatrician ask her to join in the play school. Is it the only solution for this problem? Kindly help me for this issue waiting for ur reply. Thank you

 22. Pingback: ஆட்டிசம் – எப்படி அறிவது? எங்கே செல்வது? – சரவணன் பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.