ஆட்டிசம் – வரலாறு

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.

1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர்  உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.

ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது,  பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார்.  முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.

ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஓடுவது என்பதுதான் அகராதிப்படியான அர்த்தம். கானர் இவ்வகை குறைபாடுள்ள நோயாளிகள் அப்படி உண்மையை சந்திக்காது விலகி வாழ்வதாகக் கூட எண்ணியிருக்கலாம்.

சரியாக இதே நேரத்தில் டாக்டர். ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (Hans Asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944ல் அவர் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக் கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

video platform
video management
video solutions
video player

கானரின் ஆராய்ச்சியில் முதல் முதலாக ஆட்டிச பாதிப்புக்குள்ளானவராக கண்டறியப்பட்ட டோனால்ட் (Donald Triplett ) என்பவர் முழுக்க குணமடைந்து இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்கிற தகவல் 2010ல் கண்டறியப்பட்டபோது அது ஆட்டிசக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது.

ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.

(ஆட்டிசம் குறித்து நிலவும் தவறாக கருத்துக்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்..)

பின் குறிப்பு:-

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாததை ஆட்டிசத்தின் மாதமாக கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 2ம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து, உரையாடுவதும் அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுமென.. மேலை நாடுகளிலும், வட இந்தியாவிலும் இந்த நாள் சிறப்பு கவனத்தை பெறுகிறது. நம்மூரில் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் பெரும் குறையே!

ஆகவே இம்மாதத்தில் குறைந்தது ஆட்டிசம் குறித்து 10 கட்டுரைகளாவது  வலையேற்றி விடுவது என்று முடிவெடுத்து தொடங்குகிறேன்.

இக்கட்டுரைகளை எழுத துணை புரிந்த நூல்கள், இணைய தளங்கள் மற்றும்  நபர்களின் பெயர் பட்டியல் கடைசிக் கட்டுரையில் இணைக்க திட்டம்.

This entry was posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், வீடியோ and tagged , , , . Bookmark the permalink.

8 Responses to ஆட்டிசம் – வரலாறு

  1. எனது மகன் ஒருவன் ஆட்டிச குழந்தை. எங்களுக்கு கவுன்சிலிங் தந்த ஒரு அன்பர் அக் குழந்தையின் தாய்க்கு சொன்ன ஒரு வார்த்தை “கடவுள் ஏன் இக் குழந்தையை உன்னிடம் அளித்துள்ளார் தெரியுமா? உன்னால் தான் இக் குழந்தையை வளர்க்க முடியும் என அவர் உன்னை பற்றி பெரிதாக நினைத்ததால்தான்” என்று கூறினார். அது போல ஒவ்வொரு தாயும் நினைத்து இக் குழந்தைகளை வளரக்க இறைவன் அவர்களுக்கு போதுமான மன பலத்தை தர வேண்டுகிறேன்.
    தங்களது கட்டுரைகளை எனது பிளாக்கில் தெரிவிக்க அனுமதி வேண்டுகிறேன்.
    நன்றி வாழ்க வளமுடன்

  2. சிறப்பான கட்டுரை. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிக பொறுமை தேவை.

    @அரவிந்ராஜ்
    “கடவுள் ஏன் இக் குழந்தையை உன்னிடம் அளித்துள்ளார் தெரியுமா? உன்னால் தான் இக் குழந்தையை வளர்க்க முடியும் என அவர் உன்னை பற்றி பெரிதாக நினைத்ததால்தான்” என்று கூறினார். ”

    அருமை.

  3. Pingback: ஆட்டிசம் – உட் பிரிவுகள் | யெஸ்.பாலபாரதி

  4. Pingback: ஆட்டிசம் – கடிதங்கள் » எழுத்தாளர் ஜெயமோகன்

  5. kennedy says:

    sirandha thondu thozhar vazhthukkal

  6. Pingback: » ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1

  7. sakthivel says:

    kuzanthaikalai patrri kavalai pada vendan en endral avrkal kadavulin kulanthikal

  8. pathma says:

    thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.