கொஞ்ச நாளாக முன்னை மாதிரி வலைப்பதிவுகள் பக்கம் தலைகாட்டவோ எழுதவோ முடிவதில்லை. நிறைய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது. இதில் இன்னொன்றும் முக்கியமானதாக படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையிலும்

//இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் 🙂 உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே செய்தியோடை இருக்கு //

என்று தனது வலைப்பதிவின் சைட் பாரில் எழுதி வைத்திருந்த இட்லி வடை தமிழ்மணத்தில் மீண்டும் வரத்தொடங்கி இருக்கிறது. திரட்டியில் பதிவுகள் வராது என்று அதுவே சொல்லிய பின்னும் எப்படி பதிவுகள் மட்டும் தமிழ்மணத்தில் வருகின்றன என்பது மட்டும் விளங்கவில்லை. தமிழ்மணமே விரும்பி திரட்டிக்கொள்கிறதா..? என்ற தகவலும் தெரியவில்லை. சசி வந்து பதில் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.

~~~~

http://bp0.blogger.com/_QxpmZtfzoIU/R4spyrgpQUI/AAAAAAAABE0/ykfwG7YHFpQ/s1600-h/honda_aviator_04.jpg

என் நீண்ட நாள் ஆசையான சொந்த வாகனம் வாங்குவது சனிக்கிழமையன்று நிறைவேறியது. புதிதாக வாங்கியிருக்கும் இருசக்கர வாகனம் ஹோண்டா ஏவியேட்டர். இது ஹோண்டா ஆக்டிவாவின் அடுத்த வெர்சன் எனக்கொள்ளலாம். நேற்று தங்கமணியுடன் நண்பர் ப்ரியன் வீட்டில் மதியம் உணவருந்த போயிருந்தேன். கென், அகிலன், ப்ரேம் குமார், (மற்ற இருவரின் பெயர்கள் நினைவில்லை) போன்ற நண்பர்கள் எங்களுக்கு முன்பே காத்திருந்தனர். நாங்கள் போனதும் சிறிது நேரத்திலேயே பந்திக்கு போய்விட்டோம் எல்லோரும். சைவத்துக்கு ஒரு வரிசை, அசைவத்துக்கு ஒரு வரிசை என ஒதுக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல நானும் தங்கமணியும் எதிரெதிர் கோஷ்டியில் சேர்ந்து கொண்டோம். சாப்பாடும் நன்றாக இருந்தது. காதல் கவிஞன் ப்ரியன் விழுந்து விழுந்து விருந்துபசாரம் செய்தார். தம்பி கென் வழக்கம்போல புலம்ப ஆரம்பித்து விட்டான். யாராவது அவனுக்கு பெண் பார்த்துகொடுத்தால்.. உங்கள் பெயரைச்சொல்லி அவனுக்கு நான் மொட்டை போட்டு விடுகிறேன். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சாமீ!

~~~~
அதிமுக தலைவி ஜெயலலிதா சமீபகாலமாக புள்ளியை தவிர்த்து வருகிறார். புரியவில்லையா.. ஜெ.ஜெயலலிதா என்று எழுதி வந்த அவரது பெயரை ரத்தத்தின் ரத்தங்கள் ஜெ (ஸ்பேஸ்) ஜெயலலிதா என்றே எழுதுகின்றனர். அவரின் இஃப்தார் விருந்து அழைப்பதிலில் கூட இந்த மாற்றத்தைக்காண முடியும். எந்த சோதிடன் சொல்லிக்கொடுத்தானோ.. தெரியவைல்லை. தங்குதடையின்றி பயணத்துக்கு புள்ளி கூட தடையாகி விடும் என்று எவனாவது சொல்லி இருப்பானோ..?!!

~~~~

தலீவர் புர்ச்சி கலீஞ்சர்.. விஜயகாந்த் கொஞ்ச நாட்கள் முன்பு வரை திமுக-வின் குடும்ப அரசியலை கடுமையாக சாடி வந்தார். ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட தேமுதிக-வின் இளைஞர் பாசறையின் மாநில செயலர் யார் தெரியுமா..? தனது மைத்துனர் சுதீஷைத்தான் நியமித்து இருக்கிறார். ஊருக்குத்தான் உபதேசம் என்பது புர்ச்சி கலீஞ்சர் விசயத்திலுமா? கவுத்தீடியே கேப்டன் 🙁


Comments

11 responses to “விடுபட்டவை 29.09.08”

  1. பெரியநாயகி Avatar
    பெரியநாயகி

    இந்த சின்னப் புள்ளிய தவிர்த்தால்தான் நீங்க பெரிய புள்ளியாவீங்கன்னு கூட சொல்லியிருக்கலாம்…. யாரு கண்டா? :)))

    Jokes apart, இந்த அம்மா யாரேனும் ஒரு ஜோசியரையோ இல்லை கோவிலையோ ஒரு தரம் குறிப்பிட்டால் கூட போதும், அவங்களோட மவுசு எங்கியோ போய்டும், கவனிச்சிருக்கீங்களா? Recent example, அய்யாவாடி ப்ரத்யங்கரா தேவி கோவில். இன்னிக்கு சென்னைல திரும்பின இடமெல்லாம் ப்ரத்யங்கரா கோவில் திடீர் திடீர்னு தோணுவதற்கு இந்த அம்மாதான் காரணம். அப்புறம் சில பல கேரள ஜோசியர்கள்… அந்த வரிசைல இப்ப எந்த நேமாலஜிஸ்ட்டுக்கு இப்ப யோகமோ தெரியல…

  2. தலைவா… நேத்து கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் பண்ணீட்டீங்களே? ஐயையோ.. பெரிய எழுத்தாளர் ஆய்ட்டாரே. நம்மளையெல்லாம் மறந்துடுவாரோன்னு பயந்து போய்ட்டேன்…

  3. ‘தல’ – அப்படிங்கிற பேருக்கேத்த மாதிரி ஒரு பெரிய வண்டியா வாங்காம, என்ன தல வண்டி இது?

    // தம்பி கென் வழக்கம்போல புலம்ப ஆரம்பித்து விட்டான். //

    ரெண்டு மாசம் முன்னால வரை எல்லாரும் உங்களை சொல்லிட்டு இருந்தாங்ங. பாத்துக்கோங்க கென்னை.

  4. தேமுதிக மகளிர் அணி தலைவர் அவரது மனைவியா ??

  5. இங்கும் தங்கமணியா??!!!!!

  6. நானும் சொல்ல வேணாம்னு தான் இருந்தேன்.

    கல்யாணத்துக்கு அப்பறமா மனுசன் பொட்டிப்பாம்பா அடங்கிக் கிடக்கிறத பாத்த அப்பறமும் பொலம்பாம என்ன பண்றது.

    ஒரு காத்தாடி போடுற சுதந்திரம் கூட இல்லாம சே சே

    என்ன ஒரு அடக்கம் , என்ன ஒரு மரியாதை விட்டா நின்ன படி கீழ இருக்கிற இலையில சாப்பிடுவார் போல

    என்னவோ போங்க மொட்டை நான் போட்டுக்கிறேன்
    பாபாவை காப்பாத்துங்க மக்கா

    ம்ம்ம்ம்ம்ம்ம்

  7. கென்,

    //ஒரு காத்தாடி போடுற சுதந்திரம் கூட இல்லாம சே சே//

    பரிமாறும் முன்னாடி ஃபேன் போட்டால் காத்துல வெறும் இலை பறக்குமேன்னு சொன்னதுக்கு இப்படி ஒரு பில்டப்பா? இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா? நல்லதுக்கே காலமில்லையப்பா….:(

  8. //
    கென் October 1st, 2008 at 2:00 pm

    நானும் சொல்ல வேணாம்னு தான் இருந்தேன்.

    கல்யாணத்துக்கு அப்பறமா மனுசன் பொட்டிப்பாம்பா அடங்கிக் கிடக்கிறத பாத்த அப்பறமும் பொலம்பாம என்ன பண்றது.

    ஒரு காத்தாடி போடுற சுதந்திரம் கூட இல்லாம சே சே
    //

    ஹா ஹா
    :))))))))))))))))))))))))))))))))))

  9. //ஒரு காத்தாடி போடுற சுதந்திரம் கூட இல்லாம சே சே//

    நல்லவேளையாக நான் பேச்சுலராகவே இருக்கிறேன் 🙂

    கடவுளுக்கு நன்றி!!!!

  10. கென்,

    //ஒரு காத்தாடி போடுற சுதந்திரம் கூட இல்லாம சே சே//

    பரிமாறும் முன்னாடி ஃபேன் போட்டால் காத்துல வெறும் இலை பறக்குமேன்னு சொன்னதுக்கு இப்படி ஒரு பில்டப்பா? இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா? நல்லதுக்கே காலமில்லையப்பா….:(

    நானும் பேச்சிலராவே இருக்கேன், எனக்கு வேணாம்பா இந்த நடுக்கம் எல்லாம். சும்மா நடுநடுங்கி நிக்கிற தலயப் பாத்தா பாத்தா

    பாவமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ இருக்கு போங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *