உன் கனவுகள் பலிக்கட்டும் முத்துக்குமரா..! போய் வா!! (படமும், வீடியோவும்)

http://blog.balabharathi.googlepages.com/Image003.jpg

29.01.09 இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் ஆபிஸ் உட்பட பல மத்திய அரசு அலவலகம் உள்ள இடம்) வளாகத்தில் தீக்குளித்து இறந்து போன முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள் இதோ.. பெயர் தெரியாத யாரோ ஒரு தமிழன் தன் கை பேசியில் எடுத்தது.. யூடியூப்பில் ஏற்றி விட்டேன்.. ஆனால்.. This video is not yet processed. என்றே வருகிறது. அந்த பக்கத்தின் சுட்டி இதோ..

http://in.youtube.com/watch?gl=IN&v=PtWZCx_YUd8

வேறு எங்காவது அப்லோடு செய்ய முடிந்தால் அந்த சுட்டியை இணைக்கிறேன்.

ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை காணச்சகிக்காமல் இன்னுயிர் நீத்த முத்துக்குமார் புகைப்படம்

http://blog.balabharathi.googlepages.com/Muthukumardead.jpg

முத்துக்குமாரின் கடைசி அறிக்கை இங்கே.

முத்துக்குமாரின் கடைசி நிமிட காட்சி – கைபேசி வீடியோவை தரவிறக்கிக்கொள்ள இங்கே ரைட்கிளிக் செய்து சேவ் செய்யவும்.

This entry was posted in அஞ்சலி, சமூகம்/ சலிப்பு and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to உன் கனவுகள் பலிக்கட்டும் முத்துக்குமரா..! போய் வா!! (படமும், வீடியோவும்)

 1. முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வெளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

  இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

  “அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
  சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

  தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
  அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
  தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

  ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
  இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

  ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

  எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
  ———நன்றி “விடுதலை” 29-1-2009

 2. இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டுமோ கேடுகெட்ட மத்திய அரசுக்கு 🙁

 3. முத்துகுமரனின் கனவுகள் பலிக்கட்டும்

 4. அவரது கனவுகள் நினைவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

  ”கொடுந்தீயே! சிங்களத்தின்
  கொடுந்தீயே! இது நீ கேளாய்!

  நெடுங்காலம் நின்றன் கொட்டம் நில்லா”

  என்பார் காசி ஆனந்தன்.

  முத்துக்குமரனின் உடலைத் தொட்ட தீ, சிங்கள இன வெறியை அழிக்கும் நாள் இதோ அருகிலே….

  கண்ணீரை காணிக்கையாக்குறோம் தம்பி முத்துக்குமரனுக்கு.

 5. அபிஅப்பா says:

  அழத்தான் முடிகிறது:-((

 6. சுரேஷ் ஜீவானந்தம் says:

  முத்துக்குமரனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி அவர் எதை மக்களுக்குச் சென்று சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதற்காகத் தீக்குளிக்கவும் செய்தாரோ அந்த அறிக்கையை பல படிகள் எடுத்து அனைவருக்கும் வினியோகிப்பதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரது அறிக்கைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாணவனையும் சென்று சேருமாறு செய்ய வேண்டும்.
  எந்தத் தொலைக்காட்சியுமே அவரது அறிக்கையில் கால்வாசிக்கருத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை. நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

 7. தாமிரா says:

  இவற்றையெல்லாம் படித்துக்கொண்டே நிம்மதியாக உண்டுறங்கிக் கொண்டிருப்பதற்காக வெட்கித் தலைகுனிகிறேன். முத்துக்குமரனை வணங்குகிறேன்.

 8. Kamalkanth says:

  வேதனையாக இருக்கிறது!!!!!அதிலும் அந்த வீடியோ கொடுமை….
  நரசிம் சார் சொன்னதுபோல் இது இன்னும் கொஞ்ச நாட்களில் மறக்கப்பட்டு விடும் அல்லது மறக்கடிக்க பட்டு விடும்….இதனால் யாருக்கு என்ன லாபம்????
  கொஞ்சம் அவர் குடும்பத்தை நினைத்து பார்த்திருக்க வேண்டாமா???
  இது போன்ற செயல் இனிமேலாவது தொடராமல் இருக்க வேண்டும்….
  அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் :(((((((((((((

 9. நாமக்கல் சிபி says:

  🙁

 10. Suriya says:

  Innum ethanai muthukumaran thevaiyo ivargalakku… uyir thurakka thunintha idha senthamizh naatil thaan, pathavi thurakka thayangum manithargal(evvagayil ivargalai serpadhu) um irukiraargal…enna kodumai, eppadi thudithadhu antha jeevan… varunthugiraen.. :-(. unakku veera vanakkam…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.