ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)

“எதிர்காலத்தில் என் குழந்தை தன்பணிகளை தானே செய்துகொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன்.

நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாக பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ… அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக்கொடுப்பதில் மாறவேண்டும்.

திரும்பத்திரும்ப சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதிர் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். ஏன்.. சில வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை இடைவிடாது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும். அவர்களின் ஆர்வம் அறிந்து நாம் கற்றுக்கொடுப்பது என்பது அவசியம். இந்தனை முயற்சிகளுக்கும் பொறுமை அவசியம். ஆனால் முயற்சிகள் எப்போதும் தோற்றுப்போகாது. ஒருநாள் பெற்றோர் வியக்கும்படி பிள்ளைகள் கற்றுக்கொண்டிருப்பார்கள்.

 

கர்ட் ஹர்பெர்

என்பவருக்கு இன்று 50 வயதாகிவிட்டது. இரண்டு வயதில் ஆட்டிசம் என்று அடையாளம் காணப்பட்டவர். தொடர்ந்து பெற்றோர் முயற்சியில் இன்று கர்ட் மகிழ்ச்சியாக வாழ்த்துவருவதாக சொல்கிறார். 17 ஆண்டுகளுக்கு மேலாக அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமிக்கவராக இருக்கும் கர்ட், பலருக்கும் பயிற்றுவிற்பவராகவும் இருக்கிறார்.

சமைக்கிறார், கார் ஓட்டுகிறார், வேலைக்குப் போகிறார், கற்றுக்கொடுக்கிறார், விளையாடுகிறார். போன் பேசுகிறார். மொத்தத்தில் பிறரை சார்ந்திருக்காமல் தான் தேவைகளை பூர்த்திசெய்து தன் வாழ்க்கையை தானே வாழ்கிறார்.

கர்ட் ஹர்பெர் பற்றிய இந்த ஆவணப்படத்தை, ஆட்டிச நிலைக்குழந்தையின் பெற்றோர் அவசியம் பார்க்க பரிந்துரைக்கிறேன். மற்றவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், மதியிறுக்கம் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)

  1. Bala says:

    என் தங்கை மகனுக்கு 10 வயது, 3 வயதில் பேச்சை நிறுத்தினான்.. adhd குறைபாடு உடையவன். இன்றுவரை மாத்திரை மட்டுமே பயிற்சி என்று எதுவுமில்லை, காரைக்காலில் பயிற்சி நிலையங்கள் இல்லை..

    கொரானா நெருக்கடி வேறு. டிவி, செல் இரண்டுக்கும் அடிக்ட் அவன். அவன் பெற்றோருக்கோ அவனை பாரிய புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் அவன் அற்புதமாக வருவான். எந்த மருத்துவரை , அணுகலாம் தக்க சிகிச்சை மையம் எது.. nipmed, போல வேறு எது உகந்தது..

  2. nipmed-ஐ அணுகினாலே அவர்களே வழிகாட்டுவார்கள். பெற்றோர் புரிதல் இல்லாத பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்குகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.