தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியுமா?

ஒரு பொது அறிவு தகவல்:- இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 1200 கோடி ரூபாய்.

——–

கொஞ்சமல்ல.. நிறையவே பயந்து போய் இருக்கிறது தி.மு.க! தேர்தல் தோல்வி பயம் அளவுக்கு அதிகமாக வாட்டிஎடுக்கிறது அங்கிருப்போரை. அதனாலேயே.. அதிகாரத்தின் வாயிலாக வெற்றியை அடைந்து விடலாம் என்று முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை கிடைக்கும் வெற்றிகள் கூட நிச்சயம் நியாயமான முறையில் கிடைத்ததாக இருக்காது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கடந்த கால வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு பணத்தை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள் என்று சில உடன் பிறப்புகளே பேசிக்கொள்கிறார்கள்.

மதுரையைத் தொடர்ந்து ஸ்டார் அந்தஸ்து கொண்ட தொகுதிக்குள் பணம் வேகமாக கரைக்கப்படுகிறது. இரண்டாயிரம் தொடங்கி எட்டாயிரம் ரூபாய் வரை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மத்திய சென்னை தொகுதிக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை கையும் பணமுமாக பிடித்தும் பகுதி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என.. கமிஷனர் அலுவலகத்திலும், தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்திருக்கிறது அ.இ.அ.தி.மு.க.

மத்திய தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, ’தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பணம் கொடுத்ததாக அறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சொல்லி இருக்கிறார். இதனைக் கேட்ட ஒரு மூத்த செய்தியாளர் உடனடியாக, ‘அப்படீன்னா.. இப்ப பணம் கொடுப்பதாக வந்திருக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு வழவழா.. கொழ..கொழா என்பதை பதிலாக நவீன்சாவ்லா தர.. ‘காங்கிரஸுக்கு ஆதரவாக செய்படுவதாகத் தெரிகிறதே..?’ என்று அவர் மீண்டும் கேட்க .., ’நீங்களாக அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போகவேண்டாம்.. நான் நியாயமான முறையில் தான் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி விட்டு, அடுத்த கேள்விக்கு எஸ்கேப் ஆகிவிட்டார் அண்ணாச்சி. தேர்தல் ஆணையரின் இந்த மழுப்பலை எப்படி எடுத்துக்கொள்ளுவது.?

காங்கிரஸ் ஈழமக்கள் விசயத்தில் இரட்டை வேசம் போடுகிறது. அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வருகிறேன். மத்தியில் ஈழமக்களின் துயர்துடைக்கும் புதிய ஆட்சியை ஏற்படுத்துவோம்.. அதற்கு எங்கள் கட்சியை நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று முதல்வர் கருணாநிதி சொல்லி, தனித்து நின்றிருந்தால் கூட அமோக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நேற்று ஒரு ஆட்டோ டிரைவர் சொன்னார். அவரின் கூற்றையும் தவறென்று புறந்தள்ளி விடமுடியவில்லை.

மதுரையில்  காவல்துறை ஆணையராக இருந்தவரை தற்போது மாற்றி இருக்கிறார்கள். எதிர் கட்சிகளின் தொடர் வற்புறுத்தலின் பெயரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியும் இத்தேர்தலில் வெற்றி பெறுவதை பிரஸ்டீஜ் விசயமாக கருதுகிறது திமுக. அதற்காக எதையும் செய்யத்தயாரகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல.. அதன் தொண்டர்களும் அப்படியான மனத்துடன் இருப்பது தான் அதன் பலம்.. அல்லது பலவீனம் எனறு சொல்லலாம்.

காங்கிரஸைப் பொறுத்தவரை இந்த தேர்தல் தங்களின் பலத்தை காட்ட வேண்டிய தேர்தல்.. கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய அவதிகளை கூட்டணி கட்சிகளால் பெற்ற போதிலும் தனி மெஜாரிட்டியை காட்ட ஆசைப்படுகிறது. ஆனால்.. நிச்சயம் இந்திய அளவில் கடந்த முறைகளை விட இம்முறை காங்கிரஸ் குறைந்த இடங்களையே பெறும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த பயம் காரணமக்கத்தான் இடதுசாரிகளை கடுமையாக சாடிய பிரதமர் மன்மோகன்சிங் சில நாட்களிலேயே பல்டி அடித்தார். இடதுசாரிகளுடன் இருந்த நான்கு ஆண்டுகள் மகிழ்வானவை என்றும், மீண்டும் அவர்களுடன் கூட்டணி சேர விரும்புவதாகவும் சொன்னார்.

ராகுல்காந்தி ஒரு படி மேலே போய்.. தேர்தலுக்கு பிறகு தான் சரியான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும் என்று சொல்லி இருக்கிறார். தோல்வி பயம் காரணமாக பிதற்றத்தொடங்கி விட்டார்கள்.(தேர்தலுக்கு பின் அமைவது எப்படி சரியான கூட்டணியாக இருக்க முடியும் என்றெல்லாம் கேட்கக்கூடாது)

தோல்வி பயம் காரணமாகத் தான் பணத்தை இரைப்பது, எதிர்கட்சியில் இருப்பவர் மீது தொடர்ந்து புகார் கூறி, தேர்தலில்  நிற்க விடாமல் செய்வதற்கான வேலைகளைக்கூட செய்து பார்க்கிறது திமுக. (உம்:- வட சென்னை வேட்பாளர் தா. பாண்டியன் விவகாரம்)

தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு சீட்டு வந்தால் கூட ஆச்சரியம் தான். பள்ளியில் படித்த சின்ன வயதில்.. ஏதாவது சேட்டை செய்து மாட்டிக்கொண்டால்.. இருவர் மாறி, மாறி காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை வழங்குவார்கள். அப்போது, ‘உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட..’ என்று சொல்லியபடியே தோப்புக்கரணம் போட வேண்டும். அது போல தான் தி.மு.கழகத்தில் நிலையும் ஆகிப்போய் இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றும் வரை கூட தமிழக மக்களிடம் கொஞ்சம் மரியாதையும், பாவம் தன்னாலனதை முயன்று பார்த்திருக்கிறார் என்ற எண்ணமும் இருந்தது. ஆறு மணிநேரத்தில் முடிந்த நாடகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்ப்பட்டு விட்டதாக அள்ளி வீசிய புளுகு மூட்டையை திமுக அடிமைகள் கூட நம்புவார்களா அறியவில்லை. ஆனால்.. இந்த நாடகம் எதிர்விளைவையே ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணந்து கொண்ட திமுகவினர்.. இப்போது பணத்தையும் பலத்தையுமே பெரியதாக நம்பி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

This entry was posted in அரசியல், சமூகம்/ சலிப்பு and tagged , , , , , , . Bookmark the permalink.

20 Responses to தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியுமா?

  1. சிவஞானம் ஜி says:

    vaangayya Alnazer!

    what a wishful thinking!

    LOL

    (sory for my inability to type in tamil :e kalappai is not working)

  2. நல்லா சொன்னீங்க….
    தல ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம்தான்!

  3. renga says:

    //தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியுமா? //
    நேர்மையான வழியில் சென்றால் 40 க்கு 40 மே வெற்றிதான். எதிர்கட்சிகளுக்கு…
    கலைஞர் தன் மிக பழைய தொழிலில் தோல்வி அடைந்துவிட்டார். நாடகத்தில்;…

  4. unmaitamilan says:

    🙂

    dont look for excuses if DMK wins..

    If ADMK wins and joins congress for formation of govt what you will say?

  5. வெற்றி says:

    தமிழக தேர்தல் நிலைமைகளை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

  6. நல்லா விரிவா அலசி காய வைச்சிருக்கீங்க திமுகவை :-))

  7. திமுக கூட்டணி 25 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. 40 மீண்டும் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை 😉

    யார்னாச்சுக்கும் பெட்டு கட்டுறீங்களாப்பா பெட்டு 🙂

  8. சீனு says:

    //ஆறு மணிநேரத்தில் முடிந்த நாடகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்ப்பட்டு விட்டதாக அள்ளி வீசிய புளுகு மூட்டையை திமுக அடிமைகள் கூட நம்புவார்களா அறியவில்லை.//

    நம்பிட்டாங்கய்ய்ய்ய்ய்ய்யா…நம்பிட்டாங்கய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா…

  9. Vanagamuddy says:

    \\ஆறு மணிநேரத்தில் முடிந்த நாடகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்ப்பட்டு விட்டதாக அள்ளி வீசிய புளுகு மூட்டையை திமுக அடிமைகள் கூட நம்புவார்களா அறியவில்லை.//

    இங்கு இணையத்தில் ஜல்லி அடித்து கொண்டிருக்கும் சில அடிமைகள் புழுங்கி குமைந்து புலம்பிக்கொண்டிருக்கிரதுகளே கவனிக்கவில்லையா.
    (திருத்தப்பட்ட பின்னூட்டம்)

  10. //திமுக கூட்டணி 25 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. 40 மீண்டும் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை 😉

    யார்னாச்சுக்கும் பெட்டு கட்டுறீங்களாப்பா பெட்டு 🙂 //’

    எப்படி திருமங்களம் ஸ்டைலில் ஏதாவது ரெடி செய்துவிட்டீர்களா??

  11. அபிஅப்பா says:

    திமுக 30க்கு குறைஞ்சா நான் என் ‘தல’யை மாத்திக்கிறேன்! என்ன தல பெட் கட்டுவுமா?

  12. சிவஞானம் ஜி says:

    ho ho ho ho
    hi hi hi hi …..bala

  13. asd says:

    //திமுக கூட்டணி 25 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. 40 மீண்டும் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

    யார்னாச்சுக்கும் பெட்டு கட்டுறீங்களாப்பா பெட்டு //’

    India Muzuvathuma??? appadinna 40 romba kammi aache

  14. …//தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு சீட்டு வந்தால் கூட ஆச்சரியம் தான். பள்ளியில் படித்த சின்ன வயதில்.. ஏதாவது சேட்டை செய்து மாட்டிக்கொண்டால்.. இருவர் மாறி, மாறி காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை வழங்குவார்கள். அப்போது, ‘உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட..’ என்று சொல்லியபடியே தோப்புக்கரணம் போட வேண்டும். அது போல தான் தி.மு.கழகத்தில் நிலையும் ஆகிப்போய் இருக்கிறது//

    “அந்த நாளும் வந்திடாதோ”

  15. Guru Prasad says:

    வெட்கம் மானம் உள்ள எவனும் காங்-திமுக கூட்டணிக்கு ஓட்டு பொடகூடாது.

  16. Anonymous says:

    தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய ‘எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம்:

    திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

    அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

    ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

  17. இதுபோன்ற பதிவுகளை எல்லாம் தேடி தேடி படித்து சிரித்து மகிழ்கிறோம். மகிழ்ச்சிப்படுத்திய எல்லோருக்கும் நன்றி 🙂

  18. Lol says:

    //திமுக 30க்கு குறைஞ்சா நான் என் ‘தல’யை மாத்திக்கிறேன்! என்ன தல பெட் கட்டுவுமா?//

    Adhu sari!

  19. சிவஞானம் ஜி says:

    enna bala
    result paarththiingala?
    he he he

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.