பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது!

என்கடந்த பதிவான பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு நீக்கப்படுகிறது.

வலை உலகில் நான் மதிக்கும் பதிவர்களின் ஒருவரான திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் பதிவின் மூலமாக அவரைப்போன்றே சிலருக்கும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என அறிய முடிகிறது. (அவரும் கூட தொலைபேசியில் பேசி இருக்கலாம்) யாரையும் சங்கடப்படுத்தவோ, தேவையற்ற பீதியைக் கிளப்பவோ எழுதப்பட்ட பதிவு அல்ல அது. ஓர் எச்சரிக்கை மணி அடிக்க விரும்பினேன் அவ்வள்வே!.

”மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம்,  குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் – அது நானாகவே இருந்தாலும் சரி” என்ற என்னுடைய கருத்தில் மாற்றம் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்பதிவர் காவல்துறையை அணுகுவதற்கான வழி முறைகளை சொல்லிக்கொடுத்தாகி விட்டது. இனி அவர் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

———

பிற்குறிப்பு:- அந்த எச்சரிக்கைப்பதிவில் அந்த ஆண்பதிவர், அல்லது பெண்பதிவர் சென்னையில் இருப்பவர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. சென்னையில் நடந்த சந்திப்புக்கும் வந்துள்ளார் என்றே அவர் எழுதுயிருக்கிறார் என்பதையும் இங்கு நினைவு படுத்துகிறேன்.

This entry was posted in எதிர் வினை and tagged , , . Bookmark the permalink.

10 Responses to பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது!

 1. ஒண்ணும் சொல்லிக்க முடியலை தல.. ஆனா ஒரு விசயம் மாத்திரம்தான் எனக்கு இங்க புரியுது. விகடனாவே இருந்தாலும் நமக்குத்தெரியாத இல்ல புரியாத கிசுகிசு செய்தியா இருந்தா ச்சீச்சீ விகடன் ரொம்ப மோசமுன்னு சொல்லிட்டு விஷயம் தெரியறா மாதிரி போட்டுருக்கானான்னு குமுதம் படிக்குற ஆளுங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. அவங்களுக்கு முக்கியமானதா பிரச்சினை தொடராம இருக்க என்ன தீர்வுங்கற விஷயத்தை விட யார் செஞ்சதுங்கற ஆர்வத்தைத்தான் என்னால இங்க பார்க்க முடிஞ்சது..

  வாழ்க வளமுடன்..

  மத்தபடி உங்க பதிவுக்கு,

  ஒரு 🙁

  ஒரு 🙂

 2. தல, உங்களிடம் பேசத் தோன்றாமல் போய்விட்டது 🙁

  தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க குறிப்பிட்ட என்னுடைய பதிவை நீக்கிவிட்டேன். நீங்கள் கொடுத்திருக்கும் ஹைப்பர் லின்கையும் முடிந்தால் எடுத்து விடவும் (அதைச் சொடுக்கிப் பார்த்து யாரும் ஏமாற வேண்டாமே!).

 3. பாலா அண்ணா / ஜ்யோவ்ராம்!

  சூப்பர் 🙂

 4. Kanna says:

  சில பல நாகரீக நடைமுறைக்காக ஓரு மிருகம் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளீர்கள்…

 5. அன்பின் பால பாரதி,

  எனக்கு இது சம்மந்தமாக உங்களிடம் சில கேள்விகள் உள்ளது. கூடிய விரைவில் உங்களின் செல்லிடபேசிக்கு தொடர்பு கொள்கிறேன்.

 6. நான் தாமதமாக இன்றுதான் இந்த பதிவை படிக்கிறேன். ’பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை’ சுட்டியை தட்டி விவரத்தை படித்தேன். மன்னிக்கவும் எனக்கு உங்க பதிவும் எச்சரிக்கையும் பெண்களை பூச்சாண்டிக்காட்டி பயமுறுத்துவதாக மட்டுமே இருக்கிறது. நீங்க ஏதோ நல்லெண்ணத்தில் எழுதியிருக்கீங்கன்னு புரியுது ஆனால் எந்த வகையில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் அனுமதியின்றி எங்கும் நுழைந்துவிட முடியும்? தவறான மடல் வந்தால் அந்த நபரின் மடல்முகவரியை வடிகட்டி அப்படியே குப்பைக்கு அனுப்பிட முடியுமே ஜிமெயிலில் – ஏன் திறந்து பார்த்து வருத்தப்பட்டுக் கொள்ள வேண்டும்? தவறான குறுஞ்செய்தி வந்தால் அழித்து விட்டு போக வேண்டியதுதானே. ஒரு நபருடைய முகமூடி தெரிந்த பிறகு ஒதுங்கிவிட வேண்டியதுதானே-எனக்கு என்னவோ அது சுலபமாகவே தெரிகிறது. சும்மாவே பெண்கள் வலையுலகிற்கு வரலாமா வேண்டாமா என்று எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். நீங்க வேற இந்த மாதிரியான எச்சரிக்கை பூச்சாண்டிக்காட்டி விரட்டிடுவீங்க போலிருக்கே. 🙂

 7. சீனு says:

  ஏன் நீக்கினீங்கன்னு சொல்லலையே! Any problem?

 8. SanjaiGandhi says:

  இதுலையும் எனக்கு ஆப்படிச்சிருக்காங்களான்னு பார்க்க வந்தேன். :))

Comments are closed.